மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட ’கல்வி’ குறித்து ஆய்வு
Posted On:
17 NOV 2017 5:42PM by PIB Chennai
டாக்டர். முரளி மனோகர் ஜோஷி எம்.பி. தலைமையிலான மதிப்பீ்ட்டு குழு (மக்களவை), கல்வி குறித்து ஆய்வு செய்து, மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இக்குழு உயர்க்கல்வி குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள் அடங்கிய தீர்மானங்களை வரவேற்க முடிவு செய்துள்ளது. தனிப்பட்ட நபர்கள் / நிபுணர்கள் / பொது / அமைப்புகள் / குழுக்கள் / இத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பிறர் / இப்பிரிவில் ஆர்வம் உடையவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளது.
கல்வி குறித்து தங்களுடைய கருத்துகள் / ஆலோசனைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள அனைவரும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தங்களுடைய தீர்மானங்களை, இயக்குநர், மக்களவை செயலகம், அறை எண்.422, நான்காவது தளம், பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸ், புதுடெல்லி – 110001 என்ற முகவரிக்கோ அல்லது 011-23019582 என்ற எண்ணுக்கு தொலைநகல் மூலமோ அல்லது comestimate@sansad.nic.in என்ற மின்னஞ்சலுக்கோ இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் தீர்மானங்கள், குழுவின் ஆவணங்களின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும், அவை ரகசியத்துக்குரியவையாக கருதப்படும். அவை வேறு யாருக்கும் அனுப்பப்பட மாட்டாது. இதுபோன்ற நடவடிக்கைகள் குழுவின் உரிமையை மீறும் செயல் என்பதால் ரகசியம் பாதுகாக்கப்படும்.
தீர்மானத்தை அளிப்பதுடன், குழு முன்பு நேரில் ஆஜராக விருப்பம் உள்ளவர்கள், குழுவின் பரிசீலனைக்கு அதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், இந்த விஷயத்தில் குழுவின் முடிவே இறுதியானது.
*****
(Release ID: 1511217)