மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பொதுச் சேவை மையம் முக்கிய பங்கு வகிக்கிறது : திரு. அல்போன்ஸ் கண்ணந்தானம்

Posted On: 27 NOV 2017 5:00PM by PIB Chennai

பொதுச் சேவை மையம் எனப்படும் சிஎஸ்சி மாவட்ட மேலாளர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மத்திய சுற்றுலா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.அல்போன்ஸ் கண்ணன்தானம், ‘எண்ணிம முறை எனப்படும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பொதுச் சேவை மையம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், கிராமப்புற பொதுச் சேவை மையங்களிடம்,  கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் இந்தியாவில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் வகையில், கிராமப்புற மக்களுக்கு அரசு மற்றும் பிற சேவைகள் சென்றடைய உதவும் திறன் உள்ளதாகத் தெரிவித்தார். கிராமப்புறங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடையும் வகையில் இவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இன்று இந்தியா ஹாபிட்டட் சென்டரில் நடைபெற்ற, பொதுச் சேவை மைய தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்ட மாண்புமிகு அமைச்சர்,  600க்கும் மேற்பட்ட மாவட்ட பொதுச் சேவை மைய மேலாளர்களிடம் உரை நிகழ்த்தினார்.

இந்த விழாவைத் தொடங்கிவைத்த அமைச்சர், ‘டிஜிட்டல் இந்தியா, ஆதார், ஏழைகளுக்கு காப்பீடு போன்ற திட்டங்களில் பொதுசேவை மையங்கள் முக்கியப் பங்கு வகிப்பதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். கேராளவில் உள்ள கோட்டயம், நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் நகரமாக மாறியிருப்பதை உதாரணம் காட்டிய அமைச்சர், ‘நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் இந்தியாவின் வளர்ச்சியினால் கிடைக்கும் பலன் சென்றடைய வேண்டும் என்ற பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை நிறைவேற்றுவதிலும் மக்கள் சேவை மையங்கள் மிகப்பெரிய முகவர்களாகச் செயல்படுகின்றன எனத் தெரிவித்தார். குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் பொதுசேவை மையம் மூலமே  நிறைவேறும்; பொதுச் சேவை மையங்கள் மூலம் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். மேலும், பொதுச் சேவை மைய மேலாளர்கள் அரசின் நெடுநோக்கினை மாவட்டங்களில் எடுத்துரைக்கிறார்கள், அவர்கள் அரசின் குரலாக இந்தப் பகுதியில் செயலாற்றி சமூகத்தை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்த வேண்டும்’ என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டில் தொடங்க சேவைத் திட்டங்கள்

  • கதாகாப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
  • பொதுச் சேவை மையம் மூலம் இந்திய கடற்படைத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்
  • பொதுச் சேவை மைய அகாடமிக்கும் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம்.
  • சுகாதாரப் பாதுகாப்பில் பொதுச் சேவை மையம் மற்றும் 2.5 என்.வி.ஜி. எஸ்சிலார் நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


(Release ID: 1511213) Visitor Counter : 153


Read this release in: English