குடியரசுத் தலைவர் செயலகம்

நவம்பர் 28 முதல் டிசம்பர் 1, 2017 வரை மேற்கு வங்காளம், மிசோராம், நாகலாந்து மாநிலங்களில் குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்

Posted On: 27 NOV 2017 5:57PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1, 2017 வரை மேற்கு வங்காளம், மிசோராம், நாகலாந்து மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதான் இந்த மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம்.

நவம்பர் 28, 2017 அன்று கொல்கத்தா, நேதாஜி உள் விளையாட்டு அரங்கில் குடியரசுத் தலைவர், அவருக்கு வழங்கப்படும் முதல் குடிமகன் வரவேற்பை ஏற்கிறார். அன்றைய தினமே கொல்கத்தா ராஜ்பவனில், ‘கொல்கத்தா அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பு – ’விக்யான் சிந்தன்’ நிகழ்வில் உரை நிகழ்த்துகிறார்.

நவம்பர் 29, 2017 அன்று, கொல்கத்தாவில் தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இடமான ஜோரசாங்கோ மற்றும் நேதாஜிபவனுக்கு அவர் செல்கிறார். அன்று கொல்கத்தா போஸ் நிறுவன நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் உரை நிகழ்த்துவதுடன், பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கும் செல்கிறார்.

அதே நாளில், மிசோராம், மாநிலம் ஐஸ்வாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை சேவை திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கான குடியிருப்பு இல்லங்களைத் திறந்து வைக்கிறார்.

நவம்பர் 30 அன்று மிசோராம் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அன்றைய தினம், நாகலாந்து, கோஹிமா நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

டிசம்பர் 01, 2017 அன்று நாகலாந்து கிஸாமாவில், மாநில வடிவமைப்பு நாள் கொண்டாட்டத்தையும், ஹார்ன்பில் திருவிழாவையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே குடியரசுத் தலைவர் டெல்லி திரும்புகிறார்.


(Release ID: 1511212) Visitor Counter : 131


Read this release in: English