பாதுகாப்பு அமைச்சகம்

நாவிகா சாகர் பரிக்கிரமா – தாரணி கப்பல் லைட்டெல்டன் துறைமுகத்தைச் சென்றடைந்தது

Posted On: 29 NOV 2017 10:28AM by PIB Chennai

தற்போது உலகைச்சுற்றி பயணித்துக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ்.வி. – தாரணி கப்பல் தற்போது நியூசிலாந்து நாட்டின் லைட்டெல்டன் துறைமுகத்திற்கு சென்றடைந்துள்ளது. அனைத்து மகளிர் குழுவுடன் உலகைச் சுற்றி வரும் முதல் இந்திய கப்பல் இதுதான். லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவில் லெப்டினென்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி. சுவாதி மற்றும் லெப்டினென்ட்கள் எஸ் விஜய தேவி, பி. ஐஸ்வர்யா மற்றும் பாயல் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாகப் பணியாற்றிவருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 10, 2017 அன்று கொடி அசைத்து துவக்கி வைத்த இந்த 56-அடி படகுக் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசியக் கொள்கைக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்த பயணத்திற்கு “நாவிகா சாகர் பரிக்கிரமா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணம் பெண்களின் சக்தியை எடுத்து காட்டி இந்திய பெண்கள் சவாலான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வல்லவர்கள் என்பதை உலகிற்கு காட்டும்.

உலகச் சுற்றுபயத்தை முடித்துக் கொண்டு இந்தக் கப்பல் 2018 ஏப்ரலில் கோவாவிற்குத் திரும்பும். தற்போது லைட்டெல்டன் துறைமுகத்தில் உள்ள இந்த கப்பல் டிசம்பர் 12, 2017 அன்று அங்கிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i2017112901.jpg

 

 

 

 

******

 


(Release ID: 1511208) Visitor Counter : 251


Read this release in: English