சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய விருது 2017ஐ குடியரசுத் தலைவர் வழங்குவார்.

Posted On: 28 NOV 2017 10:42AM by PIB Chennai

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளீக்கும் துறை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய விருது 2017ஐ வழங்குவார். இந்த நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் டிசம்பர் 3, 2017 அன்று நடைபெறும். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கேலாட்,  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு. கிருஷ்ணன் பால் குர்ஜார் மற்றும் திரு. ராம் தாஸ் அத்வாலே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதில் பல்வேறு பணிகள் மற்றும் சிறந்த சாதனைகள் புரிந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மாநிலங்கள்/மாவட்டங்களுக்கு மத்திய மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று விருது அளிக்கிறது. இந்த விருதுகள் கீழ்கண்ட 14 பிரிவுகளில் வழங்கப்படும்.

  1. சிறந்த மாற்று திறனாளி பணியாளர்/ சுயதொழில் புரிவோர்.
  2. (அ.) சிறந்த முதலாளிகள் மற்றும் (ஆ.) சிறந்த வேலை வாய்ப்பு அதிகாரி அல்லது முகமை
  3. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக பணிபுரியும் சிறந்த (அ.) தனி நபர் மற்றும் (ஆ.) நிறுவனம்
  4. முன் மாதிரியாகச் செயல்படுவோர்
  5. மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த தயாரிப்புகள் அல்லது புது முயற்சிகள் அல்லது  பயனுறு ஆராய்ச்சி
  6. மாற்றுத் திறனாளிகளுக்கு தடையில்லா வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்குவதில் செய்யப்பட்ட தலை சிறந்த பணி
  7. மறுவாழ்வுச் சேவைகள் வழங்கலில் சிறந்து விளங்கும் மாவட்டம்
  8. தேசிய மாற்றுதினாளிகள் கூட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்களை ஒழுங்குபடுத்தும் சிறந்த மாநில முகமைகள்
  9. சிறந்த படைப்பாற்றல் பணி புரிந்த வயது வந்த மாற்று திறனாளி
  10. சிறந்த படைப்பாற்றல் பணி புரிந்த மாற்று திறனாளி குழந்தை
  11. சிறந்த பிரெய்லி அச்சகம்
  12. எளிதில் "அணுகக்கூடிய"  சிறந்த வலைத்தளம்
  13. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்
  14. சிறந்த மாற்று திறனாளி விளையாட்டு வீரர் / வீராங்கனை.

       மேலுள்ள 14 பிரிவுகளில் 13 பிரிவுகளுக்கு 984 விண்ணப்பங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பெறப்பட்டது. மத்திய மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறையால் அமைக்கப்பட்ட நான்கு மீளாய்வு குழுக்கள் இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தங்களது பரிந்துரைகளை சமர்பித்தன. இந்த பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசியத் தேர்வுக் குழு நவம்பர் 10 மற்றும் 16 ஆம் தேதி சந்தித்து 52 தனி நபர்கள்/நிறுவனங்கள் பெயரை விருதுக்காக பரிந்துரைத்துள்ளது.

*****



(Release ID: 1511190) Visitor Counter : 251


Read this release in: English