நிதி அமைச்சகம்

15 வது நிதி குழு ஆணையம் நியமனம் அறிவிப்பு

Posted On: 27 NOV 2017 8:54PM by PIB Chennai

மத்திய அரசு, இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் 15 வது நிதி ஆணையத்தை அமைத்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் 280, பிரிவு 1 –ன் கீழ், நிதி ஆணையத்தின் (பல்வேறு வசதிகள்) சட்டம் 1951 கீழ் நவம்பர் 27, 2017 ஆம் தேதி முதல் இந்த ஆணையம் செயல்பாட்டிற்கு வரும். இந்த ஆணையம் ஏப்ரல் 1, 2020 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்கும்.

     நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் மத்திய அரசின் முன்னாள் செயலரான திரு, என்.கே. சிங் தலைமையில் இந்த ஆணையம் செயல்படும். மத்திய அரசின் முன்னாள் செயலர் திரு. சக்திகந்தா தாஸ், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் டாக்டர் அனுப் சிங் குழுவின் உறுப்பினராக செயல்படுவார்கள். பந்தன் வங்கியின் (நிர்வாகமற்ற, பகுதிநேர) தலைவர் டாக்டர் அசோக் லாஹிரி, நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த் ஆணையத்தின் பகுதி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின் செயலராக திரு. அரவிந்த் பணிப்புரிவார்.

ஆணையத்தின் விதிகள் நவம்பர் 27, 2017 –ம் தேதி வெளியிடப்பட்ட S.O.3755(E) என்ற அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.egazette.nic.in/WriteReadData/2017/180483.pdf



(Release ID: 1511103) Visitor Counter : 176


Read this release in: English