நிதி அமைச்சகம்
இந்தியா பொருளாதார பணி பயிற்சி அலுவலர்கள் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
27 NOV 2017 5:32PM by PIB Chennai
2016ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்தியா பொருளாதார பணி அலுவலர்கள் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணனை இன்று மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தனர்.
பயிற்சி அலுவலர்கள் இதுவரை பயிற்சியில் உட்பட்ட பல்வேறு இணைப்பு துறைகளில் குறிப்பாக கப்பல் போக்குவரத்து துறையில் அவர்கள் கற்றுக்கொண்டதில் இருந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் திட்டங்களை செயல்படுத்தும்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் வரை என பல்வேறு தலைப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
தங்களின் பணி காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள பயிற்சி அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய அமைச்சர் வளமான எதிர்காலத்திற்காக பயிற்சி அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பயிற்சி அலுவலர்கள் இந்த மாத இறுதிக்குள் வெவ்வேறு அமைச்சகங்கள்/ துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
*****
(रिलीज़ आईडी: 1511038)
आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English