அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவையின் வரவிருக்கும் திட்டங்கள் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரின் அறிக்கை

Posted On: 04 AUG 2017 5:25PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று மாநிலங்களவையில் , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அடுத்து வரவிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கையின் உரைவடிவம் வருமாறு :

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் அடுத்து வரவிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைப் பற்றி அறிவிப்பதற்காக நான் இந்த அவையின் முன் நிற்கிறேன். எஸ் எஃப் என்று பரவலாக அறியப்படும்தி இந்தியா இண்டர் நேஷனல் சயின்ஸ் ஃபெஸ்டிவல் அதனுடைய மூன்றாவது விழாவை 2017 அக்டோபரில் காணவுள்ளது. இந்த அறிவியல் விழாவினை விஞ்ஞான பாரதி ( வி பா ) யுடன் இணைந்து அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. இதன் முதல் விழா டெல்லி, டி யிலும், இரண்டாவது விழா புதுடெல்லி, சி எஸ் ஆர்நேஷனல் பிசிகல் லபோரட்டரியிலும் நடைபெற்றன. அவ்விரண்டும் வெற்றிகரமான நிகழ்வுகளாக நடந்தேறின. ”பொதுமக்களிடம் விஞ்ஞானத்தைப் பரவலாக்குவதுஎன்ற நோக்கத்தில் என் அமைச்சகம் வெற்றி பெற்றது.

அவைத்தலைவர் அவர்களே, இந்த அறிவியல் விழா பொதுமக்களிடம் அறிவியல் உணர்வை ஊட்டுவதற்கான ஒரு தீவிர முயற்சி ஆகும். அதிலும் குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் இதில் பங்கேற்பதன் மூலமாக, தொழில்நுட்பத் தற்சார்பு மற்றும் அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கி இந்தியா விரைந்து நடைபோட அது வழி வகுக்கும். இந்த அறிவியல் விழாவானது அரசின் முதன்மைத் திட்டங்களானஸ்வச் பாரத் அபியான்’,  ‘மேக் இன் இந்தியா‘, ’டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்மார்ட் வில்லேஜ்’, ‘ஸ்மார்ட் சிட்டிஸ்போன்றவற்றை அனைவரின் கவனத்துக்குரியதாக்குகிறது.

முதல் விழாவில், நாம்மிகப் பெரிய அளவில் நடந்தேறிய செயல்முறை அமர்வுக்கான உலகச் சாதனையை நிகழ்த்தி கின்னஸ் பதிவில் இப்போது இந்தியாவின் பெயரைப் பொறித்துள்ளோம். எஸ் எஃப் 2015 விழா, இந்தியாவெங்கிலுமுள்ள  இளம் மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப  அறிஞர்கள் தங்கள் அறிவியல் அறிவையும் கருத்துக்களையும்   பரிமாறிக்கொள்ளும் ஒரு துடிப்பு மிக்க தளத்தை அமைத்துத் தந்தது.

2016 இல் நடைபெற்றஅறிவியல் விழா வின்  இரண்டாவது நிகழ்வில், இளம் விஞ்ஞானிகள் கூடுகை, டி எஸ் டீஇன்ஸ்பயர் தேசிய முகாம், அறிவியல் திரைப்பட விழா, அரசு சாரா நிறுவனங்களின் சந்திப்பு , தொழிலதிபர்கள்கல்வியாளர்கள் கருத்துப் பரிமாற்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லபோரட்டரியில் நடந்தேறின. ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களையும் அறிவியல் அமைப்புகளையும் சேர்ந்த 10,000 பிரதிநிதிகளுக்கும் மேற்பட்டோர் அதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர் என்பதுடன், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்த விழாவாக அந்த இரண்டாவது விழா விளங்கியது. அப்போது நடத்தப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியானது, ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கல்விச்சாலைகள், தொழிலகங்கள், அரசுடைமை நிறுவனங்கள் ஆகியவற்றின் சாதனைகளை எடுத்துக் காட்டியது. இவற்றுக்கு அப்பால்,இந்தியாவின் கிராமப்புறத்திலுள்ள நமது இளைய தலைமுறையினருக்கானசயின்ஸ் வில்லேஜ்திட்டம் ஒரு தனிச்சிறப்பான திட்டம் ஆகும். அந்தத் திட்டத்திற்காகமக்களவையிலும் மாநிலங்களவையிலும் அங்கம் வகிக்கும் நமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிரதான்  மந்திரி சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் தாங்கள் தத்தெடுக்கும் கிராமத்திலிருந்து 5 மாணவர்கள், ஓர் ஆசிரியர் ஆகியோரை அனுப்பிவைத்தல் தேவையாகும். இந்தஅறிவியல் கிராமத்திற்குவந்திருந்த கிராமப்புற மாணவர்கள் பலருடன் கலந்துரையாடும் அற்புதமான அனுபவம் எனக்குக் கிடைத்தது. கிராமப்புறத்திலிருந்து வந்த 1800 க்கும் மேற்பட்ட மாணவ்ர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் அறிவியல் அறிவை ஊட்டுவதால் உண்மையில் நமது உறுப்பினர்கள் அதனைப் பெரிதும் பாராட்டினர். ‘ அறிவியல் கிராமத்திட்டத்தில்மொத்தம் 131 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அவைத்தலைவர் அவர்களே, நாம் கடந்த ஆண்டு வெகுஜனங்களுக்கான அறிவியல்என்பதை அறிவியல் விழாவின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டுபுதிய இந்தியாவுக்கான அறிவியல்என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு எஸ் எஃப் 2017, பொதுமக்கள் திரண்டுவந்து பங்கேற்கும் வகையில், சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ( சி எல் ஆர் ), அண்ணா பல்கலைக்கழகம், டி மெட்ராஸ் ஆகிய இடங்களில் 2017, அக்டோபர் 13 முதல் 16 வரை நடைபெறும். இந்த அவைகளின் உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்போர், ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள், பொதுமக்கள் ஆகியோருக்காக இதுவரை இல்லாத அளவுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெறவுள்ளது. அவற்றுள் ஒரு சில நிகழ்வுகளைக் கீழே காண்போம் :

 

  1. அண்டை நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் கூடுகை.
  2. ஆழ்கடல் ஆய்வுஎன்னும் சிறப்புக் கருப்பொருளில் அமையவிருக்கும் அமர்வு.
  3. இளைஞர்களுக்கு உணர்வூட்டக் கூடிய அரசின் முதன்மைத் திட்டங்கள்.
  4. அறிவியல் கிராமம் ‘ : நடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை.
  5. சமூக அமைப்புகளும் நிறுவனங்களும்என்ற தலைப்பின் கீழ் தேசியக் கூட்டம்.
  6. பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூடுகை.
  7. தேசிய அறிவியல் ஆசிரியர்கள் பயிலரங்கம்

( வட கிழக்கு மாநிலங்களின்  மீது கவனம் குவித்து ).                                                                                                                                                                                                                             

      8..தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் கருத்துப்பரிமாற்றம்.

9.  பிரம்மாண்ட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை          கண்காட்சி.

 

10. இந்தியா சர்வதேச அறிவியல் திரைப்பட விழா.

11. அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்கள் உச்சிமாநாடு.

12. தேசிய தொழில் தொடங்குவோர் உச்சிமாநாடு.

13. ‘ மக்கள் தகவல்தொடர்பியல்குறித்து வட்டமேஜை சந்திப்பு.

14. உலகச் சாதனைக்காக .கின்னஸ்  புத்தகத்தில் இடம் பெறுவதற்கான

   மாணவர்களின் முயற்சி.

15. தேசிய அளவிலான போட்டிகள்.

16. ஆய்வு மற்றும் மேம்பாட்டுச் சோதனைக்கூடங்களில் சிறப்பாக

   நடைபெற்ற  திட்டங்கள்   ( நிகழ் நாட்கள் ).

17. செயற்கைக்கோள் கருத்தரங்குகள்.

18. கலைப் பண்பாட்டு நிகழ்ச்சிகள்.

 

இந்த அறிவியல் விழா  நிகழ்வுகள் மூலம் அரசின் முதன்மைத் திட்டங்கள் வெளிச்சத்துக்கு வருவதுடன், நேரடியாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடையும்.

 

 அவைத்தலைவர் அவர்களே, இந்த அறிவியல் விழாதகவல் அறிதல்  உணர்வைஊட்டும் என்றும், அதன் விளைவாக முன்னேறிய ஆய்வின் மூலம் நமது தேசம் பயன் பெறும் என்றும் நான் பெரிதும் நம்புகிறேன். நான் முன்னரே குறிப்பிட்டபடி, விழாவில் இந்த ஆண்டும்அறிவியல் கிராமம்இடம்பெறும். எனவே, இப்பொழுதிலிருந்தே, கணிசமான மாணவர்களைத் தங்களுக்கு ஏற்புக் கிராமங்களிலிருந்து அனுப்பிவைக்குமாறு  உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மரியாதைக்குரிய இந்த அவை உறுப்பினர்கள் அனைவரும் தீவிர கவனம் மேற்கொண்டு செயல்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

 

அறிவியல் விழா தொடர்பான மேலும் தகவல்களை உறுப்பினர்கள்  www.scienceindiafest.org என்னும் இணையதளத்தில் பெறலாம்,


(Release ID: 1510956) Visitor Counter : 383


Read this release in: English