ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் – நீடித்த இருப்புகளைப் பேணுவதில் கவனம் குவிக்கிறது.

Posted On: 04 AUG 2017 5:06PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தினஊதிய உழைப்பில்சிறப்பாக நீர்ப் பாதுகாப்புப் பணிகளில்ஒரு முக்கியத்துவத்தை உருவாக்கியிருப்பதை நாம் காணலாம்

 ( இது வரை )    80 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுடன், 2017 – 18 நிதியாண்டில் 106 கோடி தனிநபர் நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 84 % பணியாளர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியம் கொடுக்கப்பட்டுவிடுகிறது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.  98 % ஊதியம் மின்னணுப் பண மேலாண்மை  ( எஃப் எம் எஸ்முறையில் கொடுக்கப்படுகிறது. உரிய காலத்தில் நிதி வழங்குவதை மத்திய அரசு உத்தரவாதப்படுத்துகிறது, உரிய காலத்தில்  அதனை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளைப் பலப்படுத்த மாநிலங்கள் தயாராக உள்ளன.

இந்தப் பணிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேலாகச் செலவிடப் படுவதால்கள நிலையில் விவசாயத்திலும் அது சார்ந்த செயல்பாடுகளிலும் உந்துதல் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. நீர்ப் பாதுகாப்புச் செயல்திட்டத்தின் கீழ், நீர்ச்சேகரிப்பு மற்றும் நீர்ப்பாதுகாப்பு உள்ளிட்ட இயற்கை வள மேலாண்மைக்காக 2264 தண்ணீர் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்பெற்றுள்ளன. வீடு கட்டுவதற்கான ஆதரவு, ஐ எச் எச் எல் கள் கட்டுமானம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால்பண்ணை ஆகியவற்றுக்கான கொட்டகைகளும் கொட்டில்களும் கட்டுவது, நிலவள மேலாண்மை போன்ற ஏறத்தாழ 30 லட்சம் தனிநபர் பயன்பெறும் திட்டங்கள் 2015- 16 க்குப் பிறகு முடிவடைந்துள்ளன.. திட மற்றும் திரவ வள மேலாண்மைப் பணிகள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கடந்த 28 மாதங்களில், 9.70 லட்சம் பண்ணைக் குளங்கள் உள்ளிட்ட 30.69 லட்சம் நீர் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. விவாசாயத்திற்குத் துணைபுரிய இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதில் கவனத்தைக் குவித்து, 5.5.லட்சம் மண்புழு / என் ஏ டி இ பி கலப்புரப் பிரிவுகள் இந்தக் கால அளவில் நிறைவு செய்யப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 93 லட்சம் ஹெக்டேர்களுக்கும் மேலான பாசனத் திறனை உருவாக்கியுள்ளது. புதுடெல்லியிலுள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ( ஐ இ ஜி ) இதனைத் தற்போது மதிப்பீடு செய்துள்ளது. இந்த அறிக்கை 30, நவம்பர், 2017 அன்று வெளியிடப்படும்.

இதுவரை இந்தத் திட்டத்தின் 1.71 கோடி சொத்துக்கள் ஜியோடாக் செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 5.5 கோடி பணியாளர்கள் ஏற்கெனவே ஆதார் அடிப்படையிலான ஊதிய முறையில் உள்ளனர். என் ஆர் இ ஜி ஏ சாஃப்ட் எம் ஐ எஸ்இல் இதுவரை 9.23 கோடி பணியாளர்களின் ஆதார் எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. 90 % பணிஅட்டைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.முறையான பரிசோதனைக்குப் பிறகு இதுவரை 1.18 பணிஅட்டைகள் நீக்கப் பட்டுள்ளன. பணியற்ற குடும்பத்தினர் பணியைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும்வகையில் 1.02 கோடி புதிய பணிஅட்டைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

 சுதந்திரமான சமூகக் கணக்குத் தணிக்கைப் பிரிவுகள் 24 மாநிலங்களில் அமைக்கப் பட்டுள்ளன. சி & ஏ ஜி அலுவலகத்தின் ஒப்புதலுடன் தர நிர்ணயத்தின்படியான சமூகத் கணக்குத் தணிக்கை நடத்த 3100 மாநில வள ஆதார அலுவலர்கள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளனர். கிராம வள அலுவலர்களாக மகளிர் சுய உதவிக் குழுவினருக்குப் பெரிய அளவில் பயிற்சியளிக்கப்பட்டு, சமூக கணக்குத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள அளவில் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவற்காக 19 மாநிலங்களில் இதுவரை 5,547 அடிமட்டத் தொழில்நுட்பவியலாளர்களுக்கு

(பி எஃப் டி) பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. தொழில்நுட்ப மையத்தைப் பலப்படுத்துவதற்க்காக மேலும் இத்தகைய கிராமத் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் செயலில் ஈடுபடும்வண்ணம், மாநிலங்களை ஈர்க்க அமைச்சகம் முயற்சி செய்துவருகிறது.

இயற்கை வள மேலாண்மைக் கண்ணோட்டத்தை உள்ளடக்கிய விதத்தில் தொழில்நுட்பப் பயிற்சித் தொகுதிகளை அமைச்சகம் மேம்படுத்தியுள்ளது. 65,000 தொழில்நுட்பவியலாளர்கள் தொடர் அடுக்குப் பாணியில்               ( பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமெங்கும் உள்ள இத்திட்டப் பணியாளர்களை மேற்பார்வையிடவுள்ளனர். இந்தப் பயிற்சி தொடங்கப்பட்டு இதுவரை        80 மாநிலத் தொழில்நுட்ப வளப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பணியிடங்களிலும் உள்ள குடிமக்கள் தகவல் அறிவிப்புப் பலகைகள் மற்றும் முக்கிய இடங்களில் சுவர்களில் எழுதுதல், கைபேசிச் செயலிகள், வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளின் மூலம் தகவல் பரவலுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. பதிவேடுகளைப் பராமரிக்கும் முறை எளிதாக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே, 90 % கிராமப் பஞ்சாயத்துக்கள் எளிதாக்கப்பட்ட 7 பதிவேடுகளைப் பின்பற்றி வருகிறது. நேர்வுப் பதிவேடு மற்றும் பணிக்கோப்பு ஆகியவற்றைத் தரப் படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கான பிரச்சாரமும் ஜனதா தகவல் முறையும் கிராம சம்ரிதி மற்றும் ஸ்வச்சத்தா பக்வடா ஆகியவற்றின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் 2017, அக்டோபர், 1-15 லிருந்து ஒழுங்கமைக்கப்படும்.


(Release ID: 1510953)
Read this release in: English