சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதிஉதவி
Posted On:
03 AUG 2017 2:39PM by PIB Chennai
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினரை ஆற்றல் படுத்துவதற்காக, கீழ்க்காணும் இரண்டு திட்டங்கள் சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்தால் 2014 – 15 லிருந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
- பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவு மெட்ரிக் முடித்த மாணவர்களுக்கான டாக்டர் அம்பேத்கர் மத்திய ஸ்காலர்ஷிப் வழங்கும் திட்டம்.
- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ( ஓ பி சி ) , பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும் வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காக டாக்டர் அம்பேத்கர் மத்தியத் துறை கல்விக் கடன் மீதான வட்டி மானியம்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கான திட்டங்களின் விவரம்
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, மெட்ரிக் முடித்த மாணவர்களுக்கான டாக்டர் அம்பேத்கர் நிதி வழங்கல் திட்டம்
இந்தத் திட்டமானது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலமாக மத்திய அரசால் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மெட்ரிகுலேஷன் அல்லது செகண்டரி நிலை முடித்து மேற்கொண்டு படித்து வரும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். தகுதிக்கான பெற்றோர் / பாதுகாப்பாளர் வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.1.00 லட்சம் ஆகும் ( சுய – வருமானம் உட்பட, பணிபுரிவோராயின் ).
மெட்ரிக் வகுப்புகளுக்குப் பிறகான வெவ்வேறு பாடத் திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 750 வரையிலும் விடுதி மாணவர்களுக்கு ரூ. 260 வரையிலும் வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது, கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 350 லிருந்து ரூ. 160 என்ற விகிதத்தில் இது இருக்கும். ஸ்காலர்ஷிப் தொகையானது, ஆண்டுக்குக் கல்விச் சுற்றுலாக் கட்டணமான ரூ. 900 ( உள்ளபடி ஆகும் செலவைப் பொறுத்து ), ஆய்வேட்டினைத் தட்டச்சு செய்தல் மற்றும் அச்சிடுவதற்கான கட்டணமான ரூ. 1,000 ( அதிகபட்சம் ), அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்குப் புத்தக அலவன்ஸ் ஆண்டுக்கு ரூ. 900, பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளராக இருப்போருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.175 வரை ஆகியவற்றை உள்ளடக்கியது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ( ஓ பி சி ) , பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும் ( இ பி சி ), வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காக டாக்டர் அம்பேத்கர் மத்தியத் துறை கல்விக் கடன் மீதான வட்டி மானியம் :
தகுதி வாய்ந்த ஓ பி சி மற்றும் இ பி சி மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். அதன் மூலம் வெளி நாடுகளில் அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவதுடன், தங்கள் பணித்திறனை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற, ஒரு ஓ பி சி மாணவருக்கு ஆண்டு வருமானம் ரூ. 3.00 லட்சம் எனவும், இ பி சி மாணவருக்கு ரூ,1.00 எனவும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திட்டச் செலவினத்தின் 50 % மாணவிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.
வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலைப் பட்டப்படிப்பு, எம்,பில். அல்லது பிஎச். டி. ஆய்வுப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் கல்விக் கடன் திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு ஷெட்யூல்டு வங்கியிலிருந்து அந்த மாணவன் அல்லது மாணவி கடன் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் கல்விக் கடனைப் பெற்றிருக்கும் மாணவர்கள் கடன் திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தின் வட்டியை ( அதாவது படிப்புக் காலம் மற்றும் வேலை கிடைத்த பிறகான ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட கால அவகாசம் , எது முந்தியதோ அதன்படி ) இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் குறிப்பிட்டபடி இந்திய அரசு அவகாசம் தரும். இந்த கால அவகாசம் முடிந்த பிறகு,கடன் நிலுவைத் தொகைக்கான வட்டியை மாணவர், அவ்வப்போது மாறுதலுக்கு உட்படக் கூடிய, நடைமுறையில் இருக்கும் கல்விக் கடன் திட்டத்தின் படி செலுத்த வேண்டும். அசல் தவணைகளையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்திற்குப் பிறகான வட்டியையும் மாணவர் ஏற்றுக் கொள்வார்..
* * *
சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இணையமைச்சர் திரு.கிருஷ்ணன் பால் குர்ஜார் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில் இந்தத் தகவல் அளிக்கப்பட்டது.
(Release ID: 1510950)
Visitor Counter : 191