குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு நீடிக்கக் கூடியதும், தூய்மையானதாகவும் இருக்கும் வகையில் திட்டமிடவும் வடிவமைக்கவும் கவனம் தேவை: குடியரசு துணைத் தலைவர்

10வது நகர்ப்புற இடப்பெயர்ச்சி இந்தியா கருத்தரங்கு கண்காட்சி 2017 மற்றும் சிஒடிஏட்டியு XVII வது மாநாடு தொடங்கியது.

Posted On: 04 NOV 2017 2:30PM by PIB Chennai

நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு நீடிக்கக் கூடியதும் தூய்மையானதாகவும் இருக்கும் வகையில் திட்டமிடலும் வடிவமைத்தலிலும் கவனம் அதிகரித்திருப்பதாக குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் 10 வது நகர்ப்புற இடப்பெயர்வு இந்தியா கருத்தரங்கு கண்காட்சி 2017 மற்றும் சிஓடிஏடியு XVII வது மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை (பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, தெலங்கானா துணை முதலமைச்சர் திரு. முகம்மது மஹ்மூத் அலி, பிரான்சின் சிஓடிஏடியு தலைவர் திரு. டொமினிக் புஸ்ஸரியூ, இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் திரு அலெக்சாண்ட்ரே சிக்லர் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

     நகர்ப்புற நூற்றாண்டு எனப்படும் 21 ஆம் நூற்றாண்டின் எதார்த்தங்களில் ஒன்று நகரமயமாதல் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். மூவரில் ஒருவர் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் நிலையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நகரமயம் வேகமடைந்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார். தற்போதைய நகர்மயப்பாங்குகள் நகரை நோக்கிய இடப்பெயர்வு 21 முறைகளில் முன் எப்போதும் இயலாத அளவுக்கு சவால்களுக்குக் காரணமாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

     உலகம் முழுவதும் ஏற்படும் பசுமைக்குடில் வாயுக்களில் நகர்ப்புற போக்குவரத்து மூலம் 25% உள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். நகரங்களில் காற்றுமாசும் ஒலிமாசும் இதுவே பெருங்காரணமாக இருக்கிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வியாபாரிகளுக்கும் வாகனங்கள் இயக்குவோருக்கும் குறிப்பிடத்தக்க அளவு பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான கூடுதல் செலவுகளுக்கும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் போக்குவரத்து முறையே பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     இந்திய நகரங்களில் அதிகரித்துள்ள மோட்டார் வாகன மயம், போக்குவரத்து நெரிசல், மாசுபடுதல், பயண நிலைமைகளில் எதிர்மறை விளைவுகளைத் தருகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். ”போக்குவரத்து நெரிசைலைத் தடுப்பதற்கு மேலும் மேலும் சாலைகள் அமைப்பது என்பது தொப்பையைத் தடுக்க ஒருவர் தனது பெல்ட்டை லூசாக்குவது போன்றது” என்று மகத்தான நகர்ப்புற வடிவமைப்பாளரும் வரலாற்றாளருமான லூயி வரம் ஃபோர்ட்டின் மேற்கோளை அவர் எடுத்துக் காட்டினார்.

     பல நகரங்களில் பொதுப்போக்குவரத்து வசதிகள் கிடைக்க இந்தியா பெருமெடுப்பிலான முயற்சிகளை செய்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். தில்லியில் முதலில் துவக்கப்பட்டதோடு பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அதிவிரைவாக வளர்ந்து வருகிறது. அதிவிரைவு பேருந்து போக்குவரத்து முறையும் கூட குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. 250 கி.மீ செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல்வேறு நகரங்களில் சுமார் 250 கி.மீ. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ”வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏழைகள் கார்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் வசதியானவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று பொகோடாவின் தற்போதைய மேயர் திரு. என்ரிக் பெனிலோசா கூறியதை அவர் மேற்கோள் காட்டினார்.

     மோட்டார் இல்லாத போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்த நடந்து செல்வதும் சைக்கிள் (மிதிவண்டி) கட்டுவதும் நன்கு அமைக்கப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து முறைமையிலும் கடைசி மைலுக்கான இணைப்பையும் தருவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்குகிறது. நீடிக்கவல்ல இடப்பெயர்வின் குறிக்கோளில் நடந்து செல்வதையும் மிதிவண்டியில் செல்வதையும் மேம்படுத்துவது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், நீரிழிவு, உடல்பருமன் ஆகியவற்றைத் தடுக்கவும், மாசு ஏற்படுவதைக் குறைக்கவும் இன்னும் அதிகப்படியான நடைபாதைகளும் மிதிவண்டிப் பாதைகளும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

     ஹைதராபாத் மெட்ரோரயில் திட்ட அமலாக்கத்திற்காக தெலுங்கானா அரசுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் இது முடிவடையும் போது அரசு – தனியார் பங்களிப்பு முறையில் அமலாக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கும் என்றார். நகர்ப்புற மையங்களில் வாழ்கையின் தரத்தை சிறப்பாக்க சிறந்த இடப்பெயர்வு முறைகள உருவாக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



(Release ID: 1510926) Visitor Counter : 218


Read this release in: English