நிதி அமைச்சகம்

திருத்தி அமைக்கப்பட்ட பல முகமை குழு மூலமாக `பாரடைஸ் வெளியீடுகள்' குறித்த வழக்குகளின் புலனாய்வுகள் கண்காணிக்கப்படும்

Posted On: 06 NOV 2017 6:45PM by PIB Chennai

`பாரடைஸ் வெளியீடுகள்' என்ற பெயரில் [சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் (ICIJ) வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில்] ஊடகங்களில் இன்று வெளியான தகவல்களின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வெவ்வேறு நாட்டவர்களின் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ள 180 நாடுகளில், பெயர்களின் எண்ணிக்கையில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் 714 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாரடைஸ் வெளியீடுகளில் 7 மில்லியன் கடன் ஒப்பந்தங்கள், நிதிநிலை அறிக்கைகள், இமெயில்கள், நம்பிக்கை பிரமாணப் பத்திரங்கள் ஆகியவையும், பெர்முடா மற்றும் வேறு இடங்களில் அலுவலகங்கள் வைத்துள்ள Appleby, என்ற பெருமைக்குரிய வெளிநாட்டு சட்ட நிறுவனத்தில் இருந்த  சுமார் 50 ஆண்டு காலத்துக்கான கோப்புகளும் இடம் பெற்றுள்ளன.  Asiaciti (சிங்கப்பூர்) என்ற சிறிய, ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளை நிறுவனத்தின் கோப்புகளும், வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. 19 ரகசிய அமைப்புகளின் நிறுவன பதிவேடுகளும் அவற்றில் உள்ளன.

     சில இந்தியர்களின் (சட்டபூர்வ நிறுவனங்களும், தனிநபர்களும்) பெயர்கள்  இதுவரை ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ICIJ இணையதளத்திலும்  (www.icij.org) அனைத்து நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை. தகவல்கள் படிப்படியாக வெளியிடப்படும் என்று ICIJ இணையதலம் தெரிவிக்கிறது. பாரடைஸ் வெளயீடுகள் குறித்த புலனாய்வு தொடர்பான, ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்கள் வரக் கூடிய வாரங்களில் வெளிநாட்டு தகவல்கள் தொகுப்பில் (Offshore Leaks Database) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொருத்தமான வகையில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, அந்தத் தகவல்களை கவனத்தில் கொள்ளுமாறு வருமான வரித் துறை (ITD) புலனாய்வுப் பிரிவுகளும் உஷார்படுத்தப் பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த பல வழக்குகள் ஏற்கெனவே விரைவு அடிப்படையில் புலனாய்வில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் வெளியானதும், சட்டபூர்வமாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

     மேலும், பாரடைஸ் வெளியீடுகளின் வழக்குகளில் புலனாய்வுகளை CBDT தலைவரின் தலைமையில், CBDT, ED, RBI & FIU பிரதிநிதிகளையும் கொண்ட பல  முகமை குழு (MAG) மூலமாக கண்காணிக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 *****



(Release ID: 1510924) Visitor Counter : 99


Read this release in: English