நிதி அமைச்சகம்

புதிய நேரடி வரி சட்டம் வரைவுவிற்கான செயல் குழு நியமனம்

Posted On: 22 NOV 2017 5:24PM by PIB Chennai

செப்டம்பர் 01, 02 தேதிகளில் நடைபெற்ற ராஜஸ்வா கியான் சங்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி, வருமான வரி சட்டம் 1961, 50 ஆண்டுகள் முன் வகுக்கப்பட்டது என்றும், அதனை மறு வரைவு செய்ய வேண்டிய அவசியத்தை கூறினார். இதனையொட்டி, சட்டத்தை ஆய்வு செய்யவும் நாட்டின் பொருளாதார தேவைக்கு ஏற்ப புதிய நேரடி சட்டம் வரைவுப்படுத்தவும் அரசு செயல் குழுவை அமைத்து உள்ளது. குழுவின் உறுபினர்கள்:

  1. திரு. அர்பிந்த் மோடி, உறுப்பினர் (சட்டம்), சி.பி.டி.டி
     
  2. திரு. கிரிஷ் அஹுஜா, பட்டயக் கணக்கர் மற்றும் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் அலுவல் சார்பற்ற இயக்குனர்.
  3. திரு. ராஜீவ் மேமனி,இ அண்ட் வை தலைவர் மற்றும் நிர்வாக பங்குதாரர்
  4. திரு. முகேஷ் பட்டேல், வரி சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாளும் வழக்குரைஞர், அகமதாபாத்
  5. திருமிகு. மான்சி கேடியா, ஆலோசகர், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர், புது தில்லி
  6. திரு. ஜி.சி. ஸ்ரீவட்சவா, ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (1971 தொகுப்பு) மற்றும் வழக்குரைஞர்
  7. டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகர் (சி.இ.ஏ) செயல் குழுவின் நிரந்தர அழைப்பாளராக இருப்பார்.

    செயல் குழுவின் வரம்புகள், நேரடி வரி சட்டத்தை மனதில் கொண்டு வரைவு அமைக்கப்படும்.
  1. பல்வேறு நாடுகளில் உள்ள நேரடி வரி முறை
  2. சிறந்த சர்வதேச முறைகள்
  3. நாட்டின் பொருளாதார தேவைகள்
  4. இது தொடர்பான விஷயங்கள்


செயல் குழு தனது செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதற்கான செயல்முறையை தானே வகுக்கும். செயல் குழு தனது அறிக்கையை அரசிடம் ஆறு மாதத்திற்குள் ஒப்படைக்கும்.

******



(Release ID: 1510809) Visitor Counter : 117


Read this release in: English