குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்திய நிர்வாகத்தின் மையப்புள்ளியாக தர்மம் விளங்குகிறது- குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 20 NOV 2017 8:52PM by PIB Chennai

நிர்வாகத்தின் மையப்புள்ளியாக தர்மத்தை இந்தியா கொண்டுள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இடையே அவர் பேசினார். ஆந்திரா ,தெலுங்கானா பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன், தெலுங்கானா துணை முதலமைச்சர் முமது மஹமூது அலி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

தர்மம் என்பது சமுதாயத்தின் நிலைதன்மைக்கும், சமூக ஒழுங்கைப் பராமரிக்கவும், மனித குல மேம்பாட்டுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். இந்த லட்சியங்களை நிறைவேற்றும் நோக்கமே தர்மம் ஆகும் என்றார் அவர்.

 

 நமது நாகரிகத்தை நிலைநிறுத்த நாம் சட்டத்தை பின்பற்றுவதும் தர்மமாக கருதப்படும் என்று அவர் கூறினார். இதன்மூலம் மனித சமுதாயம் நிலைத்து நிற்கும். சட்டமும், தார்மீகமும் உலகில் தர்மத்தை நிலைநாட்டுகின்றன என்ற சாணக்கியரின் பொன்மொழியை அவர் நினைவு கூர்ந்தார். இதை நாம் அணைவரும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

சட்ட அமலாக்கம், நீதி வழங்கல் ஆகியவை துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்றங்களின் நடத்தை மற்றும் செயல்பாடுகள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். நீதியியல் நடவடிக்கையின் ஆதாரமாக  வழக்கறிஞர்களின் துடிப்பான அணுகுமுறை உள்ளது என்று அவர் கூறினார்.

நீதி வழங்கல் முறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். பொதுவான தர்ம, நியாயங்கள் குறைந்து வருவது ,நீதி வழங்கல் முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறினார். மாறி வரும் போக்குகளுக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் ,அப்போதுதான் நீதித்துறை முறையாக செயல்பட உதவ முடியும் என்றார்.

 

*****



(Release ID: 1510808) Visitor Counter : 105


Read this release in: English