தேர்தல் ஆணையம்
அருணாச்சல பிரதேசம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்; மாநில சட்டமன்ற காலியிடங்களை நிரப்ப இடை தேர்தலின் அட்டவணை
Posted On:
24 NOV 2017 10:35AM by PIB Chennai
மாநில சட்டமன்ற காலியிடங்களை நிரப்ப வேண்டிய வேண்டிய மாநிலங்கள்:
எண்
|
மாநிலம்
|
எண் மற்றும் சட்டமன்ற தொகுதியின் பெயர்
|
1
|
அருணாச்சல பிரதேசம்
|
12 பக்கே-கசங் (பழங்குடியினர்)
|
28 –லிகாபலி(பழங்குடியினர்)
|
2
|
தமிழ் நாடு
|
11- டாக்டர். ராதாகிருஷ்ணன் / நகர்
|
3
|
உத்தர பிரதேசம்
|
207- சிக்கந்தர
|
4
|
மேற்கு வங்காளம்
|
226-சபங்
|
பகுதி சார்ந்த பண்டிகைகள், தேர்தல் வாக்காளர் பட்டியல், வானிலை போன்ற பல்வேறு விஷயங்களை கருத்தில்கொண்டு, காலி இடங்களை நிரப்புவதற்கான இடை தேர்தலை தேர்தல் ஆணையம் கீழ் வரும் அட்டவணையில் குறிபிட்டது போல் நடத்த உள்ளது.
தேர்தல் சார்ந்த நிகழ்வுகள்
|
அட்டவணை
|
அரசிதழ் அறிவிக்கை அறிவிக்கப்படும் நாள்
|
27.11.2017 (திங்கட்கிழமை)
|
வேட்புமனுக்கு விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்
|
04.12.2017 (திங்கட்கிழமை)
|
வேட்புமனுக்கு விண்ணப்ப கூர்ந்தாய்வு நாள்
|
05.12.2017 (செவ்வாய்க்கிழமை)
|
வேட்பாளர் தங்களின் விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்
|
07.12.2017 (விழயாட்கிழமை)
|
தேர்தல் நடைபெறும் நாள்
|
21.12.2017 (விழயாட்கிழமை)
|
வாக்கு எண்ணும் நாள்
|
24.12.2017 (ஞாயிற்றுக்கிழமை)
|
தேர்தல் வேலைகளை முடிப்பதற்காண கடைசி நாள்
|
26.12.2017 (செவ்வாய்க்கிழமை)
|
வாக்காளர் பட்டியல்:
அருணாச்சல பிரதேசத்தின் 12 பக்கே-கசங் (பழங்குடியினர்) மற்றும் 28 –லிகாபலி(பழங்குடியினர்), தமிழ் நாட்டின் 11- டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர், உத்தர பிரதேசத்தின் 207- சிக்கந்தரா, மேற்கு வங்காளத்தின் 226-சபங் ஆகிய சட்டமன்ற தொகிதிகளின் தேர்தல் வாக்காளர் பட்டியல் 01.01.2017 தேதியை திருத்தப்பெற்ற தகுதிகான நாளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மின்ணனு வாக்காளர் கருவிகள் (இ.வி.எம்-கள்) மற்றும் வி.வி.பி.ஏ.டி-கள்
இடை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இ.வி.எம்-கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி-களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. தேவையான அளவு இ.வி.எம்-கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி-களும் தயார் நிலையில் உள்ளது. இந்த கருவிகளை பயன்படுத்தி தேர்தலை சீராக நடப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் அடையாளம்
எற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் முறைக்கு ஏற்ப, மேற்குறிபிட்டுள்ள இடை தேர்தலில், வாக்களிக்க வாக்காளர் அடையாளத்தை கண்டறிதலை ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையே வாக்காளரின் முக்கிய அடையாள ஆவணம் ஆகும். ஆனால், வாக்காளரின் வாக்களிக்கும்’ உரிமையை உறுதி செய்யும் வகையில், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பின், வாக்காளர் அடையாளத்தை கண்டறிய கூடுதல் ஆவணங்களை அனுமதிக்க தனி நெறி முறைகள் வழங்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் (ஆணையத்தின் எண் 437/6/ஐ.என்.எஸ்.டி/2016-சி.சி.எஸ், நாள் 29 ஜூன் ஒரு அறிக்கையின் சார்புடைய மாற்றத்திற்கு ஏற்ப-ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது). சமந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும். மத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும்.
இந்திய தேர்தல் ஆணையம்
புது தில்லி: 24 நவம்பர் 2017
(Release ID: 1510795)
Visitor Counter : 202