இந்திய போட்டிகள் ஆணையம்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழிற்சங்கங்களுக்கான இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவு
Posted On:
31 OCT 2017 7:29PM by PIB Chennai
அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.இ.சி), மேற்கு இந்தியா சினி ஊழியர்கள் கூட்டமைப்பு (எப்.டபிள்யு.ஐ.சி.இ), அதனுடன் சார்ந்த 3 தயாரிப்பாளர் சங்கங்களான இந்திய மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கம் (ஐ.எம்.பி.பி.ஏ), இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு (எப்.டி.பி.ஜி.ஐ), இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (ஐ.எப்.டி.பி.சி) ஆகியவற்றின் நடவடிக்கைகள் 2002-ம் ஆண்டு போட்டி சட்டத்தை மீறுவதாக உள்ளன என்று இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) கண்டறிந்துள்ளது.
மேற்கு இந்திய சினி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களுக்கு இடையே 1.10.2010 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில குறிப்பிட்ட ஷரத்துகள் சட்டத்துக்கு மாறாக உள்ளன என்று ஶ்ரீ விபுல் ஷா என்பவர் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை, ஊதிய நிர்ணயம், கூடுதல் பணிக்கான ஊதியம் போன்றவற்றில் மீறல்கள் உள்ளன என்பது அவரது புகாராகும்.
தயாரிப்பாளர் எப்.டபிள்யூ.ஐ.சி.இ மற்றும் அது சார்ந்த சங்கங்களைச் சேர்ந்தவர்களையே பணிக்கு அமர்த்த வேண்டும் என்று ஒப்பந்தத்தின் 6-வது பிரிவு கூறுகிறது. மேலும் இதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற பிரிவு 18 ,சட்டத்தின் பிரிவு 3(3)(பி) மற்றும் பிரிவு 3(1) ஆகியவற்றுக்கு முரணானது என ஆணையம் கண்டறிந்துள்ளது. மேலும், நடனக் கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை 70;30 என்ற விகிதத்தில் பணியமர்த்த வேண்டும் என்ற ஷரத்தும் சட்டத்தின் 3(3)(சி) மற்றும் 3(1) பிரிவுகளுக்கு ஏற்றதல்ல என்பதும் ஆணையத்தின் முடிவாகும்.
தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு சலுகை ஏதும் கிடையாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே,1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டப்படி, திரைப்பட தொழிற்சங்கங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சட்டத்துக்கு மாறுபாடான ,சங்கங்களின் நடவடிக்கைகளைத் தடை செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், எந்த சங்கத்துக்கும் அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
2014-ம் ஆண்டின் வழக்கு எண் 19-ல் சட்டத்தின் 27-வது பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஆணையத்தின் www.cci.gov.in என்ற வலைதளத்தில் காணலாம்.
**************
(Release ID: 1510754)
Visitor Counter : 242