சுற்றுலா அமைச்சகம்
பர்யாதன் பர்வ் நிறைவு விழா நிகழ்ச்சியில் 7 நிறுவனங்களுக்கு பாரம்பரிய நினைவுச் சின்னங்களை தத்தெடுப்பதப்தற்கான முன் ஒப்பந்த வரைவுகளை வழங்கினார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
நாடு முழுவதும் பர்யாதன் பர்வ் 3 வாரங்கள் நடைபெற்றன
Posted On:
25 OCT 2017 8:07PM by PIB Chennai
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக நாடு முவுவதும் அக்டோபர் 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மத்திய சுற்றுலாத் துறையோடு மற்ற மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்கள் இணைந்து பர்யாதன் பர்வ் கொண்டாட்டங்களை நடத்தின. புதுடெல்லியில் உள்ள ராஜ்பாத் லானில் நடைபெற்ற நிறைவு விழாவில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு. அருண் ஜேட்லி கலந்து கொண்டார். அப்போது அவர் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட பாரம்பரிய சின்னங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 7 நிறுவனங்களுக்கு முன் வரைவு ஒப்பந்தங்களை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை இணை அமைச்சர் திரு. கே.ஜே அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகத் துறைக்கான முதல் பரிசை இளைஞர் நல வாழ்வுத் துறையும், இரண்டாம் பரிசை வட கிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுத் துறையும் வென்றன. மாநிலங்களுக்கான முதல் பரிசை மத்தியப் பிரதேசமும் இரண்டாம் பரிசை குஜராத் மாநிலமும் பெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. அருண் ஜேட்லி பேசியதாவது-
இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் சுற்றுலா தலங்களை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியாக பர்யதான் பர்வ் அமைந்துள்ளது. இந்தியாவில் பூகோள ரீதியாக ஆராய்சிக்குள்பட்ட, ஆராய்ச்சிக்கு உள்படாத ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. பொதுவாக மதம், இயற்கை, வரலாறு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கூறுகளாக இருக்கும். இவை அனைத்தும் இந்தியாவில் அமைந்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள கலாச்சார பாரம்பரியங்கள், வழிபாட்டுத் தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. உலகத்திலேயே நீண்ட கடற்கரை, காடுகள், வன விலங்குள், ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. பல நாடுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு சில வரலாற்று நினைவுச் சின்னங்கள்தான் உள்ளன.ஆனால் இந்தியாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால் சுற்றுலா தலங்களை இணைப்பதற்கான போதுமான வசதிகள் மற்றும் பெரிய அளவிலான விமான நிலையங்கள் இல்லை. ஆனால் மிக விரைவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பிராந்திய இணைப்புத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கும் என்றார். வரலாற்று நினைவுச் சின்னங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என தனது அபிப்ராயத்தையும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் பாரம்பரியச் சின்னங்களைத் தத்தெடுக்கும் திட்டம் மிக நல்லதொரு நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.நமது நாட்டில் விருந்தோம்பலுக்கான சூழல் தேவையான ஒன்றாக உள்ளது என்றும் திரு. அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
அமைச்சர் திரு.அல்போன்ஸ் பேசுகையில்,கலாச்சாரம், பாரம்பரியம், வியத்தகு கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் கொண்டாட்டமாக பர்யதான் பர்வ் அமைந்தது என்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள் பங்கேற்றன என்றார் அவர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதம் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நம் நாட்டில் உள்நாட்டு அளவில் சுற்றுலாவை மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார், அதே சமயம் போதுமான அளவுக்கு ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்ககான அறைகள் இல்லை என்றும் தனது கவலையை வெளியிட்டார். வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். அத்தோடு விருது பெற்ற மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
இந்த ஆண்டு உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ம் தேதி சுற்றுலா அமைச்சகத்தின் பாரம்பரிய சின்னத்தைத் தத்தெடுக்கும் திட்டத்தை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது பாரம்பரியச் சின்னங்ளைத் தத்தெடுத்து அவற்றின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டன. கலாச்சார மற்றும் தொல்லியல் ஆராய்ச்சித் துறை அமைச்சகத்துடன் இணைந்து சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த முயற்சியின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரியங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் திட்டமிட்டப்படி படிப்படியாக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையிலானதொரு நிலையை அடையும்.
பாரம்பரிய நினைவுச் சின்னங்களைத் தத்தெடுக்க துவக்கத்தில் 57 நிறுவனங்கள் முன் வந்துள்ளதை அமைச்சகங்களுக்கு இடையிலான கண்காணிப்பு கமிட்டி பாராட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து 14 நினைவுச் சின்னங்களைப் பராமரிக்க 7 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விரிவான மீள் ஆராய்ச்சிக்குப் பின் வங்கித் துறை, விருந்தோம்பல் துறை, சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்-
ஜந்தர் மந்தர், டெல்லி- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறக்கட்டளை
சூரியனார் கோயில், கோனார்க் ராஜா ராணி கோயில், புவனேஸ்வர்,
ரத்னகிரி நினைவுச்சின்னம், ஜெய்ப்பூர், ஒடிசா- டி.கே. இண்டர் நேஷனல் லிமிடெட்
ஹம்பி, கர்நாடகா, லெஹ் பேலஸ், ஜம்மு-காஷ்மீர், குதுப்மினார், டெல்லி அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா - யாத்ரா ஆன் லைன் பிரைவேட் லிமிடெட்
மட்டஞ்சேரி பேலஸ் மியூசியம், கொச்சி சஃப்தர் ஜங்க் சமாதி, டெல்லி - டிராவல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
கங்கோத்ரி கோயில் மற்றும் கௌமுக்குக்கானபாதை
மவுண்ட் ஸ்டோக்கங்கிரி, லடாக், ஜம்மு-காஷ்மீர்-
அட்வெஞ்சர் டூர் ஆப்பரேட்டர் அசோஷியேசன் ஆப் இந்தியா
அகர்சென் கி பௌலி, டெல்லி- ரேட்டரி கிளப் ஆப் டெல்லியுடன் இணைந்து ஹாலிடேஸ் டிராவல் பிரைவேட் லிமிடெட்
பூரண குயாலா, டெல்லி-என்பிபிசி
இந்த 7 நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனங்களின் சமூகப் பொறுப்போடு நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து பராமரிப்பதில் பெருமை கொள்ளும்.
பிற்பகலில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அசாம் மாநிலத்தின் சார்பில் அவர்கள் மாநிலத்தின் பிரபல பிஹு நடன நிகழ்ச்சியும் டாமன்-டையூ சார்பில் மச்சி நடனமும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் குச்சிப்புடியும் ராஜஸ்தான் சார்பில் சாரி, கூமெரும், தமிழகத்தின் சார்பில் கரகாட்டம், தப்பட்டமும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் காஷ்மீரி நடனமும் தெலுங்கனா சார்பில் பெரினியும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற ஸ்ரீமதி சவிதா தேவியன் இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பர்யாதவன் பர்வ் நிகழ்ச்சியில் மத்திய அரசின் மற்ற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் ஆர்வமுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்திருந்தன. நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக தெரியவந்ததால் ஏராளமானோர் பங்கேற்றதால் மிகப் பெரிய வரவேற்பு கிட்டியது.
*****
(Release ID: 1510753)
Visitor Counter : 333