பாதுகாப்பு அமைச்சகம்

‘’நம் அனைவரது கனவுகளும் நிஜமாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் அமைதியான, உறுதியான, பாதுகாப்பான கடல்வழி சூழல் அமையவேண்டியது அவசியம்… …’’ - திருமதி நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர்.

Posted On: 01 NOV 2017 3:33PM by PIB Chennai

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கோவா, .என்.எஸ். மண்டோவியில் உள்ள தாரங் அரங்கத்தில், கோவா மேரிடைம் கான்கிளவ் எனப்படும் கோவா கடல்வழிக் கூட்டம் (GMC) தொடங்கிவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) வளர்ந்துவரும் கடல் அச்சுறுத்தல்களை சமாளித்தல், படைகளை கட்டமைத்தல், கடல்வழிப் பயண விழிப்புணர்வு, கடல் பாதுகாப்பை நிர்மாணித்தல் மற்றும் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பது போன்றவை ஆகும். இந்தக் கருத்துக்களை முன்வைத்து பிரபல ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் குறிப்பாக ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி அருண் பிரகாஷ், ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை அதிகாரி டாக்டர் ஜெயந்த் கொலம்பேஜ், வங்காள தேச கடற்படை அதிகாரி மொகமது குர்ஷித் ஆலம், பேராசிரியர் ஆஸ்லே ஜெ.டெல்லிஸ், டாக்டர் சி.ராஜமோகன், பேராசிரியர் ஹர்ஸ் வி.பாண்ட், டாக்டர் கிறிஸ்டியன் புகெர் ஆகியோர் தங்கள் கருத்துக்களை விரிவாக கூட்டத்தில் பேசினார்கள்.

தலைமையுரை ஆற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ‘’கடல்வழி சவால்களை சமாளிப்பதில் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட வேண்டும் என்பதுதான் இந்த கோவா கடல்வழிக் கூட்டம் (GMC) ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதன் நோக்கம். இந்த சந்தர்ப்பத்தில் நம் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாட்டு கடல்வழிச் சூழலுக்கும் சரியான தீர்வு கிடைக்கும்’’ என்று சொன்னார். அவர் மேலும் பேசுகையில், ‘’பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதியானது, சர்வதேச பூகோள அரசியலில் முக்கியத்துவம் பெறும்வகையில் வளர்ச்சிபெற்று வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதி உறுப்பினர்கள் பரஸ்பரம் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஒன்றுசேரும்போது, எதிர்காலத்தில் உலகம் நம் வசப்படும்.   

அதேநேரம், உலகமயமாக்கல் நடவடிக்கையால்  கிடைக்க வேண்டிய பொருளாதார நன்மைகள் அனைத்தும் சில நாடுகளின் உள்நோக்கத்துடன் ஊடுருவுதல், ஒத்திசைவு இல்லாத நடவடிக்கைகள் காரணமாக. நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த மோதலுக்கு, நிலப்பகுதியில் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள் மற்றும் நதி நீர் பங்கீடு சிக்கல்கள் போன்றவை காலனி ஆதிக்க காலத்தில் இருந்து தொடர்வதுதான் காரணமாக இருக்கிறது. இதனால் சரவதேச உறவுகள் தேக்கமடைந்து, கருத்தியல் வேறுபாடுகள், அரசியல் பாதுகாப்பின்மை, பொருளாதார சுயசார்பு, தொழில்நுட்ப சார்புகள், வளங்களை அணுகுவதில் சமமற்ற நிலை, புவியியல் தேக்கம் ஏற்படுகின்றன. இந்த வேறுபாடுகளின் தாக்கத்தினால், நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் சாதகமான பொருளாதார உறவுகள் இருக்கும் வேளையிலும், நம்பிக்கை இன்மை, பதட்டம் தொடர்ந்து நீடிப்பதால், நாட்டின் இறையாண்மைக்கு சிக்கல் ஏற்படுகிறது. நிலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக கடல்வழியில் சர்வதேச நடைமுறைகளை கடைப்பிடிக்க முடியாத காரணத்தால், நிலம் சார்ந்த பிரச்னைகளில் இருக்கும் விரோதத்தை கடல் வழியில் நாடுகள் மறந்துவிட வேண்டும்’’ என்று கூறினார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையை நிறைவு செய்தபோது கீழ்க்கண்ட ஆலோசனைகளை கோவா கடல்வழிக் கூட்டத்தில் தெரிவித்தார்.

  • கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கடல்வழி பாதுகாப்பு கட்டமைப்புகளை மதிப்பீடு செய்து உருவாக்க வேண்டும்.
  • இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு வழியை உறுதி செய்யும் வகையில், கருத்துவேறுபாடுகளை கலந்துபேசி பொதுத்தன்மைகளை உருவாக்க வேண்டும்.
  • இந்தப் பகுதியில் நிலைத்திருக்கும் சவால்களுக்கு எளிதான தீர்வு காணும் வகையில் அறிவுசார் மூலதனம் மூலம் எளிதான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, பிராந்தியத் தீர்வுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து தீர்வுகளை இறக்குமதி செய்வது, பிராந்தியத்தின் அமைப்பை சிதைத்துவிடும்.

இந்த விழாவில் கலந்துகொண்டு கெளரவித்தமைக்காக மதிப்புக்குரிய பாதுகாப்புத் துறை அமைச்ச்சருக்கு, தலைமை கடல்படை அதிகாரி சுனில் லான்பா நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் விழாவில் கலந்துகொண்டு அன்பை உறுதிப்படுத்திய அனைத்து பிரதிநிதிகளுக்கும் கடற்படை சார்பாக உள்ளார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதி நாடுகளின் கடற்படையினரிடம் இருக்கும் இடைவெளியை, இந்த கோவா கடல்வழிக் கூட்டம் குறைக்கும் என்றும், இந்தப் பகுதி கடற்படையினர் பேசித் தீர்த்துக்கொள்ளும் நோக்கத்திற்காக ஒரு கடல் மன்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..

தலைமை கடற்படை அதிகாரி மேலும் தெரிவிக்கையில், விரிவான உட்கட்டமைப்பு உருவாகி, படையினருக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கும் வகையில் சிறந்த முறையில் நிதியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிக அளவு நிதி ஒதுக்குதல் அல்லது நீண்ட காலத்திற்கு நிதி ஒதுக்குவதால், குறிப்பிட்ட அச்சுறுத்துதல்களை சமாளிப்பதில் சாதகமான முடிவுகள் கிடைப்பதில்லை. அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், சரியான வகையில் மதிப்பீடு செய்து நீண்ட காலத் திட்டம் வடிவமைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தலைமை கடற்படை அதிகாரி உரையை நிறைவு செய்யும்போது, இந்தப் பகுதியில் கடல்சார் ஒத்துழைப்பு இனி நல்ல வகையில் முன்னேற்றம் அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 



(Release ID: 1510744) Visitor Counter : 235


Read this release in: English