பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தை, ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – வேளாண் மற்றும் சார் துறைகள் லாபகரமாக மறுசீரமைப்பு (மாநிலத் திட்டங்கள்) திட்டம் (RKVY-RAFTAAR) மூன்று ஆண்டுகளுக்கு (2017 - 18 முதல் 2019 – 20 வரை) நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 01 NOV 2017 1:49PM by PIB Chennai

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தை, ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனாவேளாண் மற்றும் சார் துறைகள் லாபகரமாக மறுசீரமைப்பு (மாநிலத் திட்டங்கள்) திட்டங்களுக்கு (RKVY-RAFTAAR)  மூன்று ஆண்டுகளுக்கு (2017 - 18 முதல் 2019 – 20 வரை) நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.15,722 கோடி ரூபாய் மூலம் விவசாயிகளின் தொழில்முயற்சிகளை வலுப்படுத்தி, ஆபத்துகளைக் குறைத்து, விவசாய வியாபாரத்தை தொழிலாக மாற்றி ஆதாய வகையில் பொருளாதார வருமானம் அடைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த நிதியானது மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே 60:40 மானியமாக (வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 90:10) கீழ்க்கண்ட வகையில் ஒதுக்கப்படும்.

ஆர்.கே.வி.ஒய்-ராஃப்டார் (RKVY-RAFTAAR) (உள்கட்டமைப்பு & சொத்துக்கள் மற்றும் உற்பத்தி வளர்ச்சி) வருடாந்திர செலவினங்களில் 70% மாநிலங்களுக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

* உள் கட்டமைப்பு மற்றும் சொத்துக்கள் ஆர்.கே.வி.ஒய்-ராஃப்டார் செலவினங்களில் பொதுவாக 50% இருக்க வேண்டும்.

* உற்பத்தி திட்டங்களில் கூட்டப்பட்ட மதிப்பு ஆர்.கே.வி.ஒய்-ராஃப்டார் செலவினங்களில் பொதுவாக 30% இருக்க வேண்டும்.

* ஆர்.கே.வி.ஒய்-ராஃப்டார் செலவினங்களில் 20% மாறுபடும் நிதியை, உள்ளூர்த் தேவைக்கேற்ப எந்தத் திட்டங்களையும் ஆதரிப்பதற்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

) தேசிய முன்னுரிமை உப திட்டங்களுக்கு ஆர்.கே.வி.ஒய்-ராஃப்டார் செலவினங்களில் 20% ஒதுக்கப்பட வேண்டும்.

) புதிய கண்டுபிடிப்புகள், விவசாயத் தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் முழுமையான தீர்வு காணுதல், திறன் மேம்பாடு மற்றும் வேளாண் துறையில் நிதி உதவி வழங்குதல் போன்றவைகளின் ஆண்டு செலவினங்கள், 2% நிர்வாகச் செலவு உட்பட 10% ஆக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஊக்கமூட்டுவதாக அமையும். மேலும் இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு வேளாண் துறையில் கூடுதல் உள்கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கும், தரமான பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதற்கும், சந்தை வசதிகளுக்கும் வலுவூட்டுவதாக இருக்கும். இதுதவிர, வேளாண்தொழில் முனைவோரை உருவாக்கவும், வியாபாரத்திற்கு துணை புரிந்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழி செய்யும்.

பின்னணி :

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா (RKVY) திட்டமானது, 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் அமல் படுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது வேளாண் மற்றும் சார் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்கள் திட்டங்கள் தீட்டி, நடைமுறைப்படுத்தவும், சுதந்திரமாக செயல்படுவதற்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.  வேளாண் மற்றும் சார் துறைகளில் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து மாவட்ட வேளாண் திட்டங்கள் (DAPs), மாநில வேளாண் திட்டம் (SAP)  மூலம் வேளாண்-பருவநிலை மாற்றங்கள், உள்ளூர் தேவைக்கேற்ப போதுமான தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்களை உறுதி செய்தல், அறுவடை முறை போன்றவறை முன்னெடுக்க வேண்டும். ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டமானது, தேசிய முன்னுரிமைக்காக மாநிலங்களின் தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மையை பாதிக்காத வகையில் உப திட்டங்களை செயல்படுத்துகிறது. தேசிய முன்னுரிமை என்பது, கிழக்கு இந்தியாவுக்கு பசுமைப் புரட்சி கொண்டுவருதல் (BGREI), பயிர்களைப் பிரித்துப் பயிரிடுதல் (CDP), மண்ணின் தன்மையை மீட்டெடுத்தல் (RPS), கால் & வாய் நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் (FMD-CP), குங்குமப்பூ இயக்கம், தீவன மேம்பாட்டு விரைவுத் திட்டம் போன்றவை  ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

 

11-வது மற்றும் 12-வது திட்டங்கள் மூலம் வேளாண் மற்றும் சார் துறைகளுக்காக மாநிலங்கள் 13,000 திட்டங்களை தீட்டியுள்ளன, மாநில வேளாண் துறை, இதனை அமல்படுத்தும் நிறுவனமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி நிறுவனம் மதிப்பிட்ட ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் இடக்கால அறிக்கையின்படி, மாநில உள்நாட்டு விவசாய உற்பத்தி பொருட்களில் (AGSDP) இருந்து கிடைக்கும் வருமானம், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்திய காலத்திற்கு முன்பைவிட, இப்போது கூடுதலாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து மாநிலங்களும் வேளாண் மற்றும் சார் பொருட்களின் மூலம் அதிக வருமானம் உயர்ந்திருப்பதாகவும் பதிவு செய்துள்ளன. இந்த வேளாண் மற்றும் சார் துறைகளை லாபகரமாக மறுசீரமைப்பு (மாநிலத் திட்டங்கள்) திட்டம் (RKVY-RAFTAAR)  தொடர்ந்து செயல்படும்போதுவேளாண் மற்றும் சார் துறைகளின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்.



(Release ID: 1510743) Visitor Counter : 119


Read this release in: English