சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

காசநோய் சிகிச்சைக்கான தினசரி மருந்துத்திட்டம் – மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் அறிமுகம்.

प्रविष्टि तिथि: 17 NOV 2017 12:52PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள காசநோயாளிகளுக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சகம் மறுசீரமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் தினசரி மருந்துத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. காசநோய் சிகிச்சைக்காக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வாரத்திற்கு மூன்று முறை மருந்தளித்து வந்தது. தற்போது சிகிச்சைக்காக எஃப்.டி.சி. என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட கலவை மருந்து (fixed dose combinations) தினசரி திட்டத்தை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 4.2 லட்ச உயிரிழப்புக்குக் காரணமாக உள்ள இந்த நோயை குணப்படுத்துவதில் இந்த திட்டம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும்.

     தனியார் மருந்தகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் காசநோய்க்கு எதிரான தினசரி எஃப்.டி.சி. மருந்துகள் கிடைக்கும் இது தனியார் துறையில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு இலவசமாக மருந்து பெற வசதியாக இருக்கும். அனைத்து மருத்துவமனைகளிலும், ஐ.எம்.ஏ., ஐ.எ.பி. மற்றும் பிற தொழில்முறை மருத்துவ அமைப்புகளிலும் இதனை மத்திய அமைச்சகம் கொண்டு செல்ல உள்ளது. இது அனைத்து காசநோயாளிகளுக்கும் எஃப்.டி.சி. கிடைப்பதை உறுதி செய்யும்.

     தினசரி, அனைத்து காசநோயாளிகளுக்கும் தொடர்ச்சியாக இத்தம்பூயுட்டால் அளிப்பதே  இந்த சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். எஃப்.டி.சி. மாத்திரைகள் உட்கொள்வதின் மூலம் இதற்கு முன்பு தனித்தனியாக ஏழு மாத்திரைகள் உட்கொள்ளும் கடினம் குறைந்துள்ளது. குழந்தைகள் எளிதில் உட்கொள்ளக் கூடிய முறையில் எஃப்.டி.சி. மாத்திரைகள் மாற்றியமைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சிகிச்சை அளிப்பதும் இந்த திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

2017 –ம் ஆண்டின் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, காசநோய் 28.2 லட்சித்திலிருந்து 27 லட்சமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் இறப்பு விகிதம் 60,000 வரை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.  இது மத்திய அரசின் காசநோய்க்கு எதிரான இயக்கத்தின் முயற்சிகளுக்கு சாட்சியாக உள்ளது.   
 

****


(रिलीज़ आईडी: 1510741) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English