உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
முதலாவது ஹெலி எக்ஸ்போ இந்தியா மற்றும் சர்வதேச சிவில் ஹெலிகாப்டர் திட்ட ஆலோசனை தொடக்கம்
Posted On:
04 NOV 2017 7:23PM by PIB Chennai
முதலாவது ஹெலி எக்ஸ்போ இந்தியா மற்றும் சர்வதேச சிவில் ஹெலிகாப்டர் திட்ட ஆலோசனை - 2017- ஐ புது தில்லியில் உத்தரகாண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. சத்பால் மகராஜாஜி தொடங்கி வைத்தார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. ஆர். என். சௌபே, பவன் ஹன்ஸ் தலைவர், நிர்வாக இயக்குநர் டாக்டர். பி. ப்பி. ஷர்மா மற்றும் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் பவன் ஹன்ஸின் ’ஏவியேஷன் டுடே’ என்ற முதல் இதழும் கூட தலைமை விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேசிய உத்தரகாண்ட சுற்றுலாத்துறை அமைச்சர், ஹெலிகாப்டர் சேவை என்பது சட்டம் ஒழுங்கு அமலாக்கத்திற்கும் வான் வழி ஆம்புலன்ஸ் சேவைக்கும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் மிகப் பெரிய வாய்ப்பு வளமாக இருக்கும் என்றார். மேலும் சமயம் சார்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கும் கரடு முரடான குன்றுப் பகுதிகள் ஆகியவற்றிற்கு சிறந்த இணைப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் கூறினார்.
விழாவில் பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. ஆ. என், சௌபே, கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணப்பிரிவில் இந்தியா 20% வளர்ச்சியை அடைந்துள்ளது. இது உலக சிவில் விமானப் போக்குவரத்துப் பிரிவில் அதிகபட்ச வளர்ச்சியாகும் என்றார். இருப்பினும் இந்த வளர்ச்சி விமானப் போக்குவரத்தை மட்டும் உள்ளடக்கியது. இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்குவரத்து மிகவம் குறைவு என்று அவர் கூறினார். தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். புதிய கொள்கையின்படி 5000 அடி உயரத்துக்கும் குறைவாக ஹெலிகாப்டர்கள் விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏடிசி யின் முன் அனுமதி பெறாமலேயே பறந்து செல்லலாம் என்றார். தில்லிக்கும் – தேசியத் தலைநகர் பிராந்தியங்கள் (என்சிஆர்) மற்றும் வடக்கு இந்திய மாநிலங்கள் இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கண்டறிவதை விமானப் போக்குவரத்து முகமைகள் ஆரம்பிக்க வேண்டும் என்று திரு. சௌபே கூறினார்.
புதுதில்லியில் உள்ள பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் இறங்குதளமான ரோஹினியில் “தொடர்பை விரிவுபடுத்துதல்“ என்ற மையப் பொருளோடு பிஎச்டி தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட முதலாவது ஹெலி எக்ஸ்போ இந்தியா மற்றம் சர்வதேச சிவில் ஹெலிகாப்டர் திட்ட ஆலோசனை – 2017க்கு சிவில் விமானப் ளேபாக்குவரத்து அமைச்சகத்தின் மினிரத்னா வான பவன்ஹன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. தொழில் துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் நிபுணர்கள், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் சார்க் நாடுகளின் பிரதி நிதிகள் இந்தத் திட்ட ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த வளாகத்தில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது நாள் பொதுமக்கள் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு செல்லும் ஒருவர் ஹெலிகாப்டரில் தில்லி தர்ஷன் எனும் உல்லாச சவாரிக்கு முன் கூட்டியே பதிவு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது
(Release ID: 1510740)
Visitor Counter : 137