பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினரின் கலாச்சாரம், உணவு பழக்கம் மற்றும் வர்த்தகத்தை கொண்டாடடும் விழா’ என்ற பெயரில் 15 நாட்கள் நடக்க உள்ள பழங்குடியின மக்களின் ஆடி மஹோத்சவை துணை ஜனாதிபதி தொடங்கி வைக்க உள்ளார்.

பழங்குடியினர் விழா தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.ஜூயல் ஓரம் தலைமை தாங்க உள்ளார்.

இந்த விழாவில் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை 200 ஸ்டால்கள் மூலம் கண்காட்சிப்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் அமையும்.

25 மாநிலங்களில் இருந்து 750 பழங்குடியின கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

Posted On: 15 NOV 2017 6:35PM by PIB Chennai

16 நவம்பர் 2017ல் புதுடெல்லி, தில்லி ஹாத்தில், ‘பழங்குடியினரின் கலாச்சாரம், உணவு பழக்கம் மற்றும் வர்த்தகத்தை கொண்டாடடும் விழா’ என்ற பெயரில் 15 நாட்கள் நடக்க உள்ள பழங்குடியின மக்களின் ஆடி மஹோத்சவை துணை ஜனாதிபதி தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு.ஜூயல் ஓரம் தலைமை தாங்க உள்ளார். மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு.ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர் மற்றும் திரு.சுதர்சன் பகத் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் செல்வி. லீனா நாயர், டிஆர்ஐஎப்இடி நிர்வாக இயக்குநர் திரு. பிரவீர் கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

 

25 மாநிலங்களில் இருந்து 750 பழங்குடியின கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். ஆடி மஹோத்சவை டெல்லி முழுவதும் நான்கு இடங்களில் கொண்டாடப்பட உள்ளது. அதன் விவரம் மற்றும் நடக்கும் இடங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

 

தில்லி ஹாத், ஐஎன்ஏ – 16-30 நவம்பர் 2017

தில்லி ஹாத், ஜனக்புரி – 16-19 நவம்பர் 2017

சென்ட்ரல் பார்க், ராஜிவ் சவுக் – 16-17 நவம்பர் 2017

ஹேண்டிகிராப்ட் பவன், பாபா கரக் சிங் மார்க் – 16-19 நவம்பர் 2017.


(Release ID: 1510738) Visitor Counter : 108


Read this release in: English