வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

உலக உணவு இந்தியா – 2017 –ல் “பழங்கள், காய்கறிகள், பால் பண்ணை, கோழிவளர்ப்பு, மீன்வளம் – மாறுபட்ட இந்தியா வாய்ப்புக்கு உந்து சக்தி” என்பது பற்றிய கருத்தரங்கில் திரு ராதா மோகன் சிங் உரையாற்றினார்.

ஒப்பற்ற, ”உலக உணவு இந்தியா” மாநாடு 60 நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளின் புரிதலுக்கு மட்டுமன்றி நமது வளர்ச்சியை மதிப்பிடுவதிலும் உதவும்: திரு ராதா மோகன் சிங்

Posted On: 04 NOV 2017 7:36PM by PIB Chennai

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய வேளாண்மை வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாதது, பன்முகப்பட்டது, இணையில்லாதது என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு ராதா மோகன் சிங் தெரிவித்தார். நமது வளர்ச்சியின் உத்திகளை ஆய்வு செய்யவும் ஏற்றுச் செயல்படுத்தவும் உலகம் ஆர்வமாக உள்ளது என்றும் திரு சிங் கூறினார். புதுதில்லியில் உணவு இந்தியா 2017 –ல் பழங்கள், காய்கறிகள், பால் பண்ணை, கோழிவளர்ப்பு, மீன்வளம் – மாறுபட்ட இந்திய வாய்ப்புக்கு உந்து சக்தி” என்பது குறித்த மாநாட்டில் வேளாண் அமைச்சர் இதை தெரிவித்தார்.

     சுதந்திரம் பெற்ற காலத்தில் 34 கோடி மக்களுக்கு உணவளிக்க இயலாத நிலையில் நாம் இருந்தோம், ஆனால், இன்று, உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நாடுகளிடையே நாம் முன்னேறி 134 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவது மட்டுமின்றி உணவு ஏற்றுமதியாளராகவும் ஆகியிருக்கிறோம். இதற்கு கொள்கை உருவாக்கியோரின் கடின உழைப்பு மற்றும் அறிவுக்கும், விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், உணவு உற்பத்தி அலுவலர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று வேளாண் அமைச்சர் கூறினார்.

     உலகின் நிலப்பரப்பில் 2 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள நாம், உலகமக்கள் தொகையில் 17 சதவீதம் பேருக்கும் 11.3 சதவீத கால்நடைகளுக்கும் பரந்துவிரிந்த பாரம்பரிய உயிரினங்களுக்கும் உணவளிப்பது மட்டுமின்றி உணவை ஏற்றுமதியும் செய்கிறோம் என்று திரு சிங் கூறினார். உலகத்தில் இன்று நாம் மிக அதிகமான பால் உற்பத்தியாளர்களாகவும், இரண்டாவது பெரிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியாளர்களாகவும், மீன் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், முட்டை உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

     சுதந்திரம் பெற்ற காலத்தில் 34 மில்லியன் மக்கள் தொகையில் தனிநபர் பால் வழங்கல் நாளொன்றுக்கு 130 கிராமாக இருந்தது. இப்போது 134 மில்லியன் மக்களில் தனி நபருக்கு நாளொன்றுக்குப் பால் வழங்கல் 337 கிராமாக அதிகரித்துள்ளது என்று திரு சிங் குறிப்பிட்டார். ஏராளமான வேளாண் உற்பத்திப் பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் கூடுதலாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

     தேசியத் தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’உலக உணவு இந்தியா’ மாநாடு உலகின் 160 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்துள்ள ஒப்பற்ற மேடையாகும். இது நம்மைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, நமது வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கானதும் ஆகும்.

     ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்கு தனிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று வேளாண் அமைச்சர் கூறினார். வேளாண்துறை வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமமந்திரியின் பயிர்க்காப்பீட்டுத்திட்டம், மண்வள அட்டை போன்றவை முக்கியத் திட்டங்களில் சிலவாகும். உணவு பதனத்துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டை அரசு அனுமதித்துள்ளது.

     ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்துக்காக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பதனம் செய்யும் கூடங்கள் / மைய வகைப்படுத்துதல், குளிர்பதனம் செய்தல், வெப்பநிலைக்கட்டுப்பாட்டு வாகனம், ஆரம்பப் பதனப்பிரிவுகள், பழுக்கச் செய்யும் அறைகள், உள்ளிட்ட பலவகை குளிர்பதனத் தொகுப்பு இத்திட்டத்தில் அடங்கும் என்று திரு சிங் தெரிவித்தார். வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களின் பதனப் பிரிவுகளும் கூட இதில் அடங்கும்.

     ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 2017, மார்ச் 31 நிலவரப்படி 19.47 மில்லியன் டன் கொள்ளளவுள்ள 4392 குளிர்பதனக் கிடங்குகள் / ஆக்சிஜன் கட்டுப்பாட்டுக் கிடங்குகள், 20710 பதனக் கூடங்கள், 411 வெப்பநிலை கட்டுப்பாட்டு வாகனங்கள் 408 பழுக்கச் செய்யும் அறைகள், 4414 ஆரம்பப் பதனப்பிரிவுகள், 101 குளிரவைத்தலுக்கு முந்தைய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

     மாபெரும் உணவுப் பூங்காக்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுப் பகுதிகளில் பலவகைப் பதன முறைகள் உட்பட பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமிப்பை மேம்படுத்த தோட்டக்கலை இயக்கம், தோட்டக்கலைப்பயிர்கள் / பண்ணை அளவிலான திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் அரசு ஊக்கமளித்து வருகிறது. 2016-17 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட தோட்டக்கலைப் பொருட்கள் 5.03 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது (புதியதான பழங்கள், காய்கறிகள் – 4.16 மில்லியன் மெட்ரிக் டன், பதப்படுத்தப்பட்ட பழம் காய்கறிகள் -0.88 மில்லியன் மெட்ரிக் டன், பூக்கள் 33725 மெட்ரிக் டன்) பொருள் மதிப்பைப் பொருத்தவரை 12 சதவீத வளர்ச்சி இருந்தது.

*****



(Release ID: 1510727) Visitor Counter : 161


Read this release in: English