உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உலக உணவு- இந்தியா 2017வை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

உணவுப் பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்வதற்கான விருப்ப இலக்காக இந்தியா தன்னை வெளிப்படுத்தியுள்ளது
முதலீட்டாளர்களுக்கான இணையத் தளம்-நிவேஷ் பந்துவை பிரதமர் தொடங்கிவைத்தார்
உணவுப் பதப்படுத்தும் துறை முதலீட்டாளர்கள், தகவல்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்க உதவும் வகையில் இந்திய உணவு வகைகள் மற்றும் வெளியீடுகள் குறித்த நினைவு அஞ்சல்தலையை பிரதமர் வெளியிட்டார்

உணவுப் பதப்படுத்தும் துறையில் புரட்சிகள் செய்திட இந்தியா தயார்:
திருமதி ஹர்சிம்ரட் கவுர் பாதல்

இந்தியாவின் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வியாபாரம் செய்வதற்கான எளிதான சூழலில் இந்தியாவின் தரவரிசையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உலகளவில் முதன்மை அதிகாரிகளின் பாராட்டு
உலக உணவு- இந்தியா 2017வின் தொடக்க நாளில் ரூபாய் 68,000 கோடி மதிப்புள்ள 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

Posted On: 03 NOV 2017 7:02PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி, உலக உணவு-இந்தியா 2017வை இன்று புதுடில்லி விக்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் பெரும் நிகழ்வு, உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறையின்  மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரட் கவுர் பாதல் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில், அந்த அமைச்சகத்தின் முன்முயற்சியில் ஒன்றிணைக்கப்படுகிறது. ஆர்மேனியா அதிபர்   திரு செர்ஷ் சர்க்ஸியான்,  லாட்வியாவின் பிரதமர்    திரு மாரிஸ் குசின்ஸ்கிஸ், இத்தாலியின் பொருளாதார முன்னேற்றத்திற்கான துணை அமைச்சர், ஜெர்மனியின் உணவு, வேளாண்மைத் துறையின் துணை அமைச்சர் திரு பீட்டர் பிலெஸர், டென்மார்க்கின் சுற்றுச்சூழல் மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு லுண்டே லார்சன் ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.  நெஸ்லே-தெற்காசியாவின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் திரு பால் புல்கே, யுனிலீவர் புட்ஸ் சர்வதேச தலைவர் திருமதி அமண்டா சவ்ரி,  மெட்ரோ ஏ.ஜி. மற்றும்  மெட்ரோ கேஷ் அண்ட் கேரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு பீட்டர் பூன், டிரெண்ட் லிமிட்டெட் தலைவரும் டாடா இன்டர்நேஷனலின் எம்.டி.யுமான திரு நோயல் டாட்டா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள்,  உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறையின் மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

       வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உலக உணவு மாநாடு முதல் முறையாக இந்தியாவால் எடுத்து நடத்தப்படுவதை பதிவு செய்யும் வகையில், பிரதமர் திரு.  நரேந்திர மோடி,  நிவேஷ் பந்து -’முதலீட்டாளர்களின் நண்பன்’-  http://foodprocessingindia.co.in/  என்ற தனித்த இணையத்தளத்தை/ தொடங்கி வைத்தார். உணவுப் பதப்படுத்தும் துறை சார்ந்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கொள்கைகள்,  அவை அளிக்கும், ஊக்கத்தொகைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இந்த இணையத்தளம் உதவும். தலமட்ட அளவிலான வளதாரங்களை  அவற்றின் செயல்முறைத் தேவைகளுடன் இந்த இணையத்தளம் அளிக்கும். அது மட்டுமின்றி விவசாயிகள், பதப்படுத்துவோர், வர்த்தகர்கள்,  லாகிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் நடத்துவோர் தங்களது வணிகம் சார்ந்து இணைவதற்கான  தளமாகவும் இது அமையும். உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகத்தின் ஏழு வெளியீடுகள் இந்த தளத்தில் வலையேற்றப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் தகவல்கள் சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கு இது உதவும் பிரதமர் காபி டேபிள் புத்தகம் ஒன்றையும் இந்திய உணவு வகைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும்  வெளியிட்டார். 
       வேளாண்மைத் துறையில் இந்தியா பெற்றிருக்கும் பல்வேறு வகையான வலிமைகளை பிரதமர் உயர்த்திப் பேசினார். "இரண்டாவது மிகப்பெரிய வேளாண்மை நிலப்பரப்பை இந்தியா பெற்றிருக்கிறது; 127 வகையான வேளாண்-காலநிலை மண்டலங்கள் இங்கே நிலவுகின்றன. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பாப்பாளி, வெண்டைக்காய் போன்றவையின் உற்பத்தியில் உலக அளவில் தலைமைப் பாத்திரத்தை இந்தியாவிற்கு இவை அளித்துள்ளன. அரிசி, கோதுமை, மீன், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் நாம் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். உலகின் மிகப்பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. கடந்த   பத்து ஆண்டுகளில் நமது தோட்டக்கலைத் துறை சராசரியாக 5.5 % வளர்ச்சியை காட்டியுள்ளது."
       பல நூற்றாண்டுகளாக தொலைதூர நாடுகளிலிருந்து, நமது தனித்துவமான நறுமணப் பொருட்களை தேடி வந்த வர்த்தகர்களை இந்தியா வரவேற்றுள்ளதை திரு  மோடி நினைவுகூர்ந்தார். "உணவுப் பதப்படுத்துதல் என்பது,  இந்தியாவில் வாழ்வின் ஒரு வழியாக உள்ளது. பன்னெடுங்காலமாக இது பின்பற்றப்பட்டு வருகிறது. மிக எளிமையான குடும்பங்களிலும் இது உண்டு. எளிமையான, வீட்டில் பின்பற்றப்படும் நுட்பங்கள்- நொதிக்க வைத்தல் போன்றவை, பிரபலமான நமது ஊறுகாய் வகைகள், பப்படங்கள், சட்னி, இஞ்சிமுரப்பாக்கள் தயாரிப்பிற்கு பயன்படுகின்றன.  உலக அளவில் வெகுஜனங்களையும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் அவை இப்போது ஈர்க்கின்றன.” 
       இந்தியாவின் வளர்ச்சி குறித்த பெரும் சித்திரம் ஒன்றை தீட்டிய பிரதமர், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்றார்.  வரிகளின் பெருக்கத்தை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி  நீக்கியுள்ளது.  உலக வங்கியின் வியாபாரம் செய்வதற்கான சூழல் தரவரிசையில் இந்த ஆண்டு இந்தியா முப்பது படிகள் தாண்டி முன்னேறியுள்ளது. இது, இந்தியா இதுவரை கண்டிராத மிக உயர்ந்த முன்னேற்றம்;  எந்த நாட்டிற்கும் சாத்தியப்படாத மிக உயர்ந்த தவல். 2016ம் ஆண்டின் உலகளாவிய பசுமைவயல் முதலீட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் குறியீட்டில், உலகளாவிய போட்டியிடும் திறன் குறியீட்டில் இந்தியா மிகவிரைவாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஒரு புதிய தொழிலை தொடங்குவது, எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மிகவும் எளிது என்று அவர் வலியுறுத்தினார். பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதிகள் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான சட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன; உத்தரவு வழங்கல் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
       மதிப்புருவாக்கச் சங்கிலியின் பல பிரிவுகளில் தனியார் துறையின் பங்களிப்பு  அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இருப்பினும், ஒப்பந்த அடிப்படையிலான விவசாயம், மூலப்பொருட்களை இடையீடின்றி அளித்தல், வேளாண் தொடர்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பல சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையிலான விவசாய முன்முயற்சிகளில் முன்னணியில் உள்ளன. உலகளவில் பிரபலமான சூப்பர்-மார்கெட் நிறுவனங்கள், இந்தியாவை ஒரு முக்கியமான அவுட்சோர்சிங் மையமாக கருதுவதற்கு மிகத்தெளிவான வாய்ப்பு இருப்பதாக  திரு மோடி சுட்டிக்காட்டினார்.
       பிரதமர் மேலும், "நவீன தொழில்நுட்பம், தயாரிப்பு முறை, பெட்டிகளில் அடைத்தல் இவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாரம்பரிய இந்திய உணவுகள், இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மஞ்சள், இஞ்சி, துளசி போன்றவற்றால் உடலுக்கு கிடைக்கும் நலன்களையும், நாவிற்கினிய சுவையையும் இந்த உலகம் கண்டறிந்திட உதவுகின்ன. எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலவற்றை மட்டுமே கூறியுள்ளேன்.  ஆரோக்கியமும், சத்துக்களும், சுவையும் சரியான விகிதத்தில் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உணவை, முன்கூட்டியே கிடைக்கும் நோய்த்தடுப்பு என்ற கூடுதல் பலன்களுடன் பொருளாதார ரீதியாக குறைந்த செலவில் இந்தியாவில் தயாரிக்கமுடியும்” என்றார்.
       தொடக்க நிகழ்விற்குப் பின்னர், பிரதமர் கண்காட்சியை பார்வையிட்டார். முதன்மை சமையல் நிபுணர் சஞ்சீவ் கபூர் சிறப்புடன் உணவு வீதி ஒன்றை அமைத்திருந்தார். இந்திய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, இந்தியச்  சுவைகள், நறுமணம் ஆகியவற்றுடன் உருவான  இந்திய, வெளிநாட்டு உணவு வகைகளை காட்சிப் படுத்தும் உற்சாகமும் துடிப்பும் மிக்கப் பகுதியாக உணவு வீதி அமைந்திருந்தது. இந்தியா கேட்டின் புல்வெளியில் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 நாடுகளைச் சார்ந்த 800க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உணவுப் பதப்படுத்தும் துறையில் தங்கள் வலிமையை காட்சிப் படுத்துகின்றன. உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் அரங்கு,  இந்தியா உலகிற்கு அளிக்கக் கூடிய பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த புவியியல் சார்ந்த வரைபடங்கள், மற்றும் மெகா  உணவுப் பூங்காக்கள் குறித்த விவரங்களை வழங்குகிது.
       உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறையின் மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரட் கவுர் பாதல் பேசும்போது, உலக அளவில் மாபெரும் ஓர் உணவுத் திருவிழா இந்தியாவில் முதன் முறையாக நடக்கும் இந்த நாள்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். உலக உணவு- இந்தியா 2017,  60 நாடுகளில் இருந்து 7000 இத்துறையில் தொடர்புடையோரை,  75 சர்வதேச அளவில், மற்றும் தேசிய அளவில் கொள்கை உருவாக்குவோரை, அரசுகளின் தலைவர்களை, 60 உலகளாவிய முதன்மை நிர்வாக அதிகாரிளை,  100 இந்திய அளவிலான முதன்மை நிர்வாக அதிகாரிளை ஒன்றாக இணைக்கிறது. இந்த மூன்று நாட்களில் 5000 B2B கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் இந்தியாவின் விவசாயப் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும் உதவும் வகையில் நிறுவனங்களுக்கு உதவிடவும், அவர்களுடன் இணைந்து செயலாற்றவும், உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம் உறுதி கொண்டிருப்பதாக திருமதி பாதல் தெரிவித்தார்.  அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க, 20 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 500 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் வகையில் உலகத் தரத்தில்  உணவுப் பதப்படுத்தும் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதம மந்திரி கிஸான் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் விவரித்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாபெரும் உணவு பூங்காக்கள் அமைப்பது ள்ளது. முக்கிய உற்பத்தி மையங்களுடன் வேளாண் பொருள்-பதப்படுத்தும் மையங்களின் திரளை இணைக்க இந்த உணவு பூங்காக்கள் உதவும். இது போன்ற ஒன்பது பூங்காக்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. மேலும் முப்பதுக்கும் மேற்பட்டவை நாடு முழுவதும் அமைக்கப்படும் நிலையில் இருக்கின்றன.
       கலந்து கொண்ட சர்வதேச முதன்மை நிர்வாக அதிகாரிகள், ஜி.எஸ்.டி போன்ற குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களின் அமுலாக்கத்திற்கும், எளிதான வியாபாரச் சூழல் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றத்தை இந்தியா பதிவு செய்ததற்கும் பிரதமரைப் பாராட்டினர்.  உலக உணவு- இந்தியா நிகழ்வை இணைந்து நடத்திய நாடுகளாக ஜெர்மனி, ஜப்பான், டென்மார்க் ஆகியவை உள்ளன. கவனம் கொள்ள வேண்டிய நாடுகளாக  இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகியன இருக்கின்றன. இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர்  திரு கெஞ்சி ஹிராமட்சு,  இந்தியாவிற்கான  டென்மார்க் தூதர்  திரு பீட்டர் டக்ஸோ-ஜென்சன், இந்தியாவிற்கான நெதர்லாந்து தூதர்  திரு ஆல்ஃபான்ஸ் ஸ்டோலிங்க,  இத்தாலி நாட்டு தூதர்  திரு லோரென்சோ ஏஞ்சலோனி ஆகியோர் இந்த நாடுகளின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.  இந்தியாவில் தங்களது முதலீட்டு அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதிலும்,  சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதற்கும்  தங்கள் ஆர்வத்தை இவர்கள் வெளிப்படுத்தினர். உணவுப் பதப்படுத்தும் துறையில் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கின்ற புரட்சியின் ஒரு அங்கமாக இருக்கப் போவதாகவும் கூறினர்.

உணவுப் பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்வதற்கான விருப்ப இலக்காக இந்தியா உள்ளது என்பதை வெளிப்படுத்த, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி,  கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட மாற்றத்திற்கான முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். திரு ஜேட்லி, "உணவுப் பதப்படுத்துதல் ஒரு முன்னுரிமைத் துறை” என்றார்.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் உணவு தயாரிப்புகளின், இ-காமர்ஸ் உட்பட, வணிகத்தில் 100 சதவிகித அந்நிய  நேரடி முதலீடு இப்போது அனுமதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பிரதமர், நிதி அமைச்சருடன் முதன்மை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்ட வட்ட மேஜை அமர்வுகளும் அன்றைய தினத்தில் நடந்தன.

 

       உலக உணவு-இந்தியா 2017ன் தொடக்க நாளில் 68,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை அனைத்தும் இந்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறையின் மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. புரிந்துணர்வில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் தங்கள் நோக்கத்தையும், தீவிரத்தையும் வெளிப்படுத்தின.  உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ13,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை  பெப்சிகோ நிறுவனம் கையெழுத்திட்டது. பழச்சாறை பாட்டிலில் அடைக்கும் உள்கட்டமைப்பு மற்றும் பழங்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்கள் அமைப்பதற்கு கோகோ கோலா ரூ.11,000 கோடி முதலீடு செய்கிறது. ஐ.டி.சி மற்றும் பதஞ்சலி நிறுவனங்கள் இந்த துறையில் ரூ.10,000 கோடி முதலீடு செய்கின்றன. உணவு சில்லறை வணிகத்தில் அமேசான்,  உள்ளிட்ட பிற ஒப்பந்தங்கள், பண்ணைப்பொருட்கள் உற்பத்தி, சேகரிப்பு, பதப்படுத்தல், ஏற்றுமதியில் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஷராஃப் குழுமம், துறையின் உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் யெஸ் வங்கி ஆகியன கையெழுத்திடப்பட்ட பிற புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகும். மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்த ஒப்பந்தங்கள் குறித்துக் கூறுகையில், "இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கான பெரும் ஆர்வத்தை   உலக அளவிலும்,  இந்தியாவிலும் இருக்கும் உணவு நிறுவனங்களிடையே தோற்றுவிப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்கும், உணவுப் பதப்படுத்தும் துறையில் பெருமளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த முதலீடுகள் நமக்கு உதவும்" என்றார்.

 


(Release ID: 1510726) Visitor Counter : 664


Read this release in: English