உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உலக உணவு இந்தயா என்பது ”இந்திய உணவுக்கான கும்பமேளா” என்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வர்ணித்தார்.

உலக உணவு இந்தியா 2017-ன் நிறைவு விழாவில் தொடங்கி முன்னேறு & ஹேக்கத்தான் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
உலக உணவு இந்தியா 2017 ஒரு தொடக்கம் மட்டுமே – 11.25 பில்லியன் டாலர் மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள மாநிலங்களும் 2.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. திருமதி பாதல் தகவல்.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாக விளங்குகிறது உணவு பதப்படுத்தும் தொழில்துறை: திருமதி பாதல்.

Posted On: 05 NOV 2017 4:57PM by PIB Chennai

புது தில்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற உலக உணவு இந்தியா 2017 கருத்தரங்கம் கண்காட்சியும் 60 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகப் பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பங்கேற்போடு வெற்றிகரமாக அமைந்தது.

     இந்த மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைந்து நடத்திய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதலையும், அவருக்கு உதவியாக இருந்த இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

     கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு. கோவிந், ”இந்தியாவின் உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் உள்ள விரிந்த, எல்லையற்ற வாய்ப்புகளைக் காட்சிப்படுத்த உலக உணவு இந்தியா 2017 உதவி செய்துள்ளது“ என்றார். ”இந்திய உணவின் கம்பமேளாவாக” உலக உணவு இந்தியாவைக் குடியரசுத்தலைவர் வர்ணித்தார். இந்திய உணவ வகைகள் மற்றும் சுவைகளை அனுபவிக்க மனிதனுக்கு ஒரு பிறவி போதாது. என்றே சொல்ல வேண்டும் என்ற அவர் குறிப்பிட்டார். உணவு என்பது வெறும் கலாசாரம் மட்டுமல்ல அது வணிகமும் கூட என்று குடியரசுத்தலைவர் சுட்டிக் காட்டினார். ”இந்தியாவின் உணவு நுகர்வு மதிப்பு தற்போது 370 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் – 2025 வாக்கில் இது $ ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அறுவடைக்கும் பிந்தைய செயல்பாடுகள், பொருள், போக்குவரத்து குளிர் பதப்படுத்தும் தொழில் நிலை, உற்பத்தி உட்பட இந்தியாவில் ஒட்டு மொத்த உணவு மதிப்பும் சங்கிலித் தொடரில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இத்துறை பெருமளவு வணிக விருப்பத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. மேலும் பெரும் தொழில் முனைவோரைக் கொண்டதாகவும் உணவுத் தொழில் இருக்க முடியும்” என்று அவர் கூறினார்.

      வருந்தும் நிலையில் பொருள்கள் வீணாவதைக் கட்டுப்படுத்துமாறும் குடியரசுத் தலைவர் எச்சரிக்கை செய்தார். ”நவீன உணவு பதன முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும். இந்தியாவில் உற்பத்தி, தொடங்கம் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, விவசாய வருவாயை இருமடங்கு ஆக்குதல் போன்ற நமது சிறப்புமிகு திட்டங்கள் பலவற்றுக்கு உணவுத்துறை ஊக்கத்தை அளிக்கும்” என்றும் திரு. கோவிந் தெரிவித்தார்.

     இந்தியாவின் உணவு பற்றிய தகவல் உலகளாவிய தாக்கங்களைக் கொண்டிருப்பதையும் குடியரசுத்தலைவர் சுட்டிக் காட்டினார். ”உலக அளவில் இந்திய உணவுப் பொருட்களுக்கான சந்தை மிகப் பெரியது. தெற்காசியாவில் உள்ள 1.8 பில்லியின் மக்கள் தொகையில் 30 மில்லியன் மக்களும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மேலும் பல மில்லியன் மக்களும் என அது விரிவடைந்துள்ளது. உணவுக் கலப்படத்தைக் கண்டுப்பிடிப்பதற்கான வழிகளுக்கு ஆலோசனை தந்து உதவிய கல்லூரி மாணவர்களுக்கு தொடங்கி முன்னேறு விருதுகளையும் ஹேக்கத்தான் விருதுகளையும் குடியரசுத்தலைவர் இந்த விழாவில் வழங்கினார். ”உணவுப் பாதுகாப்பு துல்லியமான லேபிள் ஒட்டுதல், அறிவுசார் சொத்துரிமை பிரச்சனைகள் உணவு பதப்படுத்தும் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்,  அதேபோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அழுத்தம் அதிகரித்துவருகிறது. என்றும் திரு. கோவிந் கூறினார்.

     செயல்பாடுகள் நிறைந்த மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழாவை நினைவு கூர்ந்த மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட தமது அமைச்சகம் உலக உணவு இந்தியா 2017 என்பதைத் தொடக்கமாகப் பார்க்கிறது. முடிவாக அல்ல என்றார். எளிதான, நல்ல சத்துமிக்க எங்கும் கிடைக்கிற கிச்சடியை 918 கிலோகிராம் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது மட்டுமின்றி இந்த மூன்று நாட்களில் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு 11.25 பில்லியன் டாலர் மதிப்புக்கு வர்த்தகமும் நடந்துள்ளதை உலக உணவு இந்தியா 2017ல் அவர் பேசினார்.

     உலக உணவுத் தொழிற் சாலையாக இந்தியாவை நிறுவுவதற்கான உதவி நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மட்டுமே உணவு பதப்படுத்தும் தொழித்துறை அமைச்சகத்தின் தீர்மானம் என்று திருமதி பாதல் கூறினார். உலக உணவு இந்தியா விழாவின் போது பஞ்சாப், ஹரியானா உட்பட, 2.5 பில்லியன்  டாலர் மதிப்புக்கு பரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநிலங்கள் கூட செய்திருக்கின்றன. என்று திருமதி பாதல் குறிப்பிட்டார். “இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைந்து செயல்படுத்த உணவு பதன தொழில்கள் அமைச்சகம் பணியாற்ற முன் வரும் இந்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து கண்காணிக்க இந்தியாவில் முதலீடு என்ற அமைப்பில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்படும். அது தமது அறிவு சார்ந்த கூட்டாளிகள் இலக்குகளை எட்டுவதற்கு உதவி செய்வார்கள்.“ என்று அவர் தெரிவித்தார். வீணாவதைக் குறைப்பது,  உற்பத்தியை அதிகரித்து நடவடிக்கைகளை உறுதி செய்வது என்ற கோட்பாடுகளால் தமது அமைச்சகம் வழி நடத்தப்படுவதாக திருமதி பாதல் கூறினார்.  விளை நிலத்திலிருந்து உணவுக் கூடத்திற்கு என்பதே அவர்களின் மந்திரமாகும்.  உணவு பதப்படுத்தும் தொழில் துறை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்.  மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்கள் தங்களின் உணவு பதப்படுத்தும் கொள்கையை அறிவித்துள்ள நிலையில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகம் விரைவில் தேசிய உணவு பதப்படுத்தும் கொள்கையை இறுதிப்படுத்தும் என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1510725) Visitor Counter : 132


Read this release in: English