சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

நுண்துகள் காற்று மாசு அளவு மேலும் குறையும் : டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 15 NOV 2017 5:33PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று அளித்த பேட்டியில், தன்னுடைய அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், கள அளவில் பல்வேறு அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் வானிலை மாற்றத்தினால் தில்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் நுண்துகள் காற்று மாசு (பர்டிக்குலேட் மேட்டர் -= பிஎம்) அளவு எதிர்பார்த்த அளவுக்கு குறையும் என்று தெரிவித்துள்ளார். நுண்துகள் காற்று தூசு அளவு, நேற்று முன்தினம் இருந்த தீவிரமான அளவில் இருந்து, இன்று மாலை 4 மணி அளவில் மிக மோசமான அளவான பிஎம்10 ஆனது 316.8 மைக்ரோகிராம்/எம்3 க்கும், பி.எம்.2.5 ஆனது 206.8 மைக்ரோகிராம்/எம்3 க்கும் குறைந்துள்ளது.

டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும், கூறுகையில், பல்வேறு அமைப்புகளால் எடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மாசுவை மேலும் தீவிரமாகவும் தொடர்ந்தும் குறைக்கும்.

மேலும் அமைச்சர் கூறுகையில், நகர அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில், நகரின் முக்கியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, தண்ணீரை தெளித்தல், கட்டுமானப் பணிகளை ஒழுங்குப்படுத்துதல், தூசி பறப்பதை தடுத்தல் உள்ளிட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் அடிப்படை அமைப்புகளுக்கு வெளியிட்ட உத்தரவின் அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 17.11.2017ல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் நடக்கும் கூட்டத்தில், நகர அளவில் முக்கியமான இடங்களில் மாசுவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

‘‘மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கள குழுவினர் அளிக்கும் அறிக்கைககள் தினசரி அடிப்படையில் சீராய்வு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்தார்.



(Release ID: 1510723) Visitor Counter : 145


Read this release in: English