உள்துறை அமைச்சகம்

பயங்கரவாதம் மற்றும் அமைப்பு ரீதியான குற்றங்களை எதிர்த்துப் போராட ஒத்துழைப்புக்கான இந்திய ரஷ்ய ஒப்பந்தம் கையொப்பமிட அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2017 4:11PM by PIB Chennai

அனைத்து விதமான பயங்கரவாதம் மற்றும் அமைப்பு ரீதியான் குற்றச்செயல்களை எதிர்த்துப் போராட இந்தியா ரஷ்யா இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2017 நவம்பர் 27-29 வரை உள்துறை அமைச்சர் தலைமையிலான குழுவின் எதிர்வரும் ரஷ்ய பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.


பின்னணி

பரஸ்பர விருப்பம் கொண்ட விவகாரங்களில் சர்வதேச அளவில் இந்தியா ரஷ்யா இடையிலான ஒத்துழைப்புக்கு நீண்ட வரலாறு உள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதம் மற்றும் அமைப்பு ரீதியான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிராக நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது. கடந்த 1993 அக்டோபர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு பதில் செய்துகொள்ளப்பட உள்ள இந்த ஒப்பந்தம் பாதுகாப்பில் உருவாகியுள்ள பயன்களை ஒருங்கிணைப்பதில் ஒரு நடவடிக்கையாகும் என்பதுடன் புதிய மற்றும் உருவாகிவரும் ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களை இணைந்து போராட உதவும். இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவை உறுதிப்படுத்தி தகவல்கள் பரிமாற்றம், பகிர்வு, நிபுணத்துவம் ஆகியவை பயங்கரவாதத்தை நசுக்கவும், இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் உதவும்.

*****

 



(Release ID: 1510516) Visitor Counter : 78


Read this release in: English