கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான 8வது சுற்று ஊதிய உயர்வு பேச்சுகளுக்கான ஊதிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
22 NOV 2017 4:01PM by PIB Chennai
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 8வது சுற்று ஊதிய பேச்சுவார்த்தைக்கான ஊதிய கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்புகள்:
- ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் 31.12.2019 அன்று முடிவடைந்த மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாகம் ஊதியத்தை திருத்தி அமைப்பது குறித்து பேச்சு நடத்தலாம். சம்பந்தப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் செலவிடும் மற்றும் நிதி நிலைத்த தன்மையை கருத்தில்கொள்ள வேண்டும்.
- ஊதிய உயர்வுக்கான எந்தவொரு பட்ஜெட் ஆதரவு அரசிடமிருந்து அளிக்கப்படமாட்டாது. ஒட்டுமொத்த நிதிச் சுமைகளையும் சம்பந்தப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனம் தங்களது உள் ஆதாரங்களில் இருந்து ஏற்கவேண்டும்.
iii. மறுகட்டமைப்பு/மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மத்திய பொது துறை நிறுவனங்களுக்கு ஊதிய திருத்தம் மறுகட்டுமான/மறுசீரமைப்பு திட்ட ஒப்புதல்களில் கூறப்பட்டுள்ளது போல இருக்க வேண்டும்
- மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் நிர்வாகம் இந்தப் பேச்சுகளில் அதிகாரிகள்/நிர்வாகிகளின் யூனியன்படுத்தப்படாத மேற்பார்வையாளர்களின் ஊதிய விகிதம் தற்போதைய ஊதிய விகிதத்தை விட மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுகள் நடத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாகம் தொடர்ச்சியான இரண்டு ஊதிய பேச்சுகளில் நிர்வாகிகள்/அதிகாரிகள் மற்றும் யூனியன்படுத்தப்படாத மேற்பார்வையாளர்களின் ஊதிய விகிதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுகள் நடத்தும் நிறுவனங்களின் நிர்வாகிகள்/அதிகாரிகள் மற்றும் யூனியன்படுத்தப்படாத மேற்பார்வையாளர்கள் ஊதிய விகிதத்தை மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- நிர்வாகிகள்/யூனியன்படுத்தப்படாத மேற்பார்வையாளர்களின் ஊதிய விகிதங்களில் பிரச்சனைகளைத் தவிர்க்க படிப்படியான பஞ்சப்படி, உயர்வு மற்றும் அல்லது படிப்படியான ஃபிட்மெண்ட்களை பேச்சுகளின் போது பின்பற்றலாம்
vii. பேச்சுகளுக்கு பின்னர் ஊதியங்கள் உயர்த்தப்பட்டால் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது சரக்குகள் மற்றும் சேவைக்கான கட்டணங்களை உயர்த்தக் கூடாது
viii. ஊதிய உயர்வானது உற்பத்திக்கான தொழிலாளர் செலவில் உயர்வு இல்லை என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். விதி விலக்காக குறைந்த திறனுடன் செயல்பட்டு வரும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நிர்வாக அமைச்சகம்/துறை துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு டி.பி.இ. உடன் பேசலாம்.
- ஊதிய ஒப்பந்தத்துக்கான மதிப்பு காலம் ஐந்தாண்டுகளுக்கு விரும்புவோருக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாகவும் பத்து ஆண்டுகள் விரும்புவோருக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகளாகவும் இருக்கும். 10.10.2017க்கு பின் நடைபெறும் பேச்சுகளுக்கு இது பொருந்தும்.
- ஒப்புக்கொள்ளப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் ஒப்புதலுக்கு பின்னர் முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வை மத்திய பொது துறை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தலாம்.
பின்னணி:
நாட்டில் உள்ள 320 மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 12.34 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 2.99 லட்சம் பணியாளர்கள் வாரிய மட்டம் மற்றும் வாரிய வட்டத்திற்கு கீழான நிர்வாகிகள் மற்றும் யூனியன் படுத்தப்படாத மேற்பார்வையாளர்கள். எஞ்சிய 9.35 லட்சம் பணியாளர்கள் யூனியனுக்கு உட்பட்ட பணியாளர்கள். யூனியனுக்கு உட்பட்ட பணியாளர்களின் ஊதிய திருத்தம் தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகங்களால் முடிவு செய்யப்படுகிறது. ஊதிய உயர்வுக்கான பேச்சுகளுக்கான வழிகாட்டுதல்களை பொதுத் துறை நிறுவனங்கள் துறை வெளியிடுகிறது.
***
(Release ID: 1510497)
Visitor Counter : 133