இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டுகள் மற்றும் இளைஞர் விவகாரங்களில் இந்தியாவும் எகிப்தும் மாபெரும் கருத்தொற்றுமையைக் கொண்டுள்ளன: கர்னல் ரத்தோர்

எகிப்து தனது மீச்சிறப்பு மையங்களை பயிற்சிக்காக இந்திய விளையாட்டு அணிகளுக்குத் தர முன் வந்துள்ளது.
கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் எகிப்து விளையாட்டுகள் துறை அமைச்சரை சந்தித்தார்.

Posted On: 05 NOV 2017 6:10PM by PIB Chennai

எகிப்தின் ஷரம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற உலக இளைஞர் அமைப்பு கூட்டத்திற்கிடையே இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் துறை இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு) தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சருமான கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அந்நாட்டின் இளைஞர் நல அமைச்சர் திரு கலீத் அப்த் எல் அசீஸை-ச்  சந்தித்தார்.

     ரஷ்யாவில் 2018 ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு எகிப்து தகுதி பெற்றிருப்பதற்காக திரு அசீஸீக்கு கர்னல் ரத்தோர் வாழ்த்து தெரிவித்தார். பிஃபா யு17 போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைத் தன் பங்குக்குப் பாராட்டிய திரு. அசீஸ் எம் 11 எம் எனும் கால்பந்து தொடர்பான மிகச் சிறந்த திட்டம் பற்றி தமது அதிகப்படியான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

     இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் அண்மைக்கால செயலாக்கத்தை நினைவு கூர்ந்த கர்னல் ரத்தோர், பிரதமர் திரு. நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் சிசியும் நான்கு முறை சந்தித்ததாகவும் இதனால் இருதரப்பு உறவுகள் புதிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். நீண்டகாலத்திற்கான முடிவுகளை விரைந்தும் திட்டவட்டமான முறையிலும் எடுத்த இந்தியத் தலைமையை திரு அசீஸ் பாராட்டினார். அனைவரையும் உள்ளடக்கிய நிதிசார்நிலை, இளைஞர்களின் திறன்மேம்படுத்துதல், தொடங்கும் இந்தியா, முத்ரா, இந்தியாவில் உற்பத்தி போன்ற திட்டங்கள் என பிரதம மந்திரியின் பல்வேறு முன்முயற்சிகள் பற்றி அவரிடம் கர்னல் ரத்தோர் விவரித்தார். “இரண்டு தொன்மையான நாகரிக நாடுகள் என்ற வகையில் நமது இளைஞர்களுக்கான நமது தலைவர்களின் தொலை நோக்கு திட்டத்தை நாம் தீவிரமாக அமல்படுத்துவது அவசியம் என்றும் இந்தியா என்பது இளைஞர்களின் தேசமாகும். அவர்களின் கனவுகளை நனவாக்கும் சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது எங்களின் தேவை“ என்றும் கர்னல் ரத்தோர் கூறினார்.

     ஒலிம்பிக் மையம் போன்ற தங்களின் முதன்மையான மையத்தை இந்திய விளையாட்டு அணிகளுக்குக் குறுகிய காலப் பயிற்சித்திட்டத்திற்கு அளிக்க திரு. அசீஸ் விருப்பம் தெரிவித்தார். ஸ்குவாஷ் விளையாட்டுக்கு எகிப்துப் பயிற்சியாளர்களையும் உதவி ஊழியர்களையும் பணியமர்த்தும் அரசின் முடிவு பற்றி அவரிடம் கர்னல் ரத்தோர் தெரிவித்தார். வெளிநாட்டு மாணவர்கள் என்ற வகையில் இந்தியப் பல்கலைக் கழகங்களில் இடங்களை பயன்படுத்திக் கொள்ள அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துமாறும் எகிப்து அமைச்சரை கர்னல் ரத்தோர் கேட்டுக் கொண்டார். டிசம்பரில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகள் பற்றி கர்னல் ரத்தோர் எடுத்துரைத்தார். “இந்தியர்களிடையே விளையாட்டுகள் பற்றிய அணுகு முறையில் நாங்கள் மாற்றம் செய்ய விரும்புகிறோம். விளையாட்டுகளைப் பேரார்வம் கொண்டதாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்“ என்று அமைச்சர் கூறினார்.

     மக்களுடன் மக்கள் தொடர்பை வலுவாக ஊக்கப்படுத்தும் எகிப்து அரசுக்கு கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் நன்றி தெரிவித்தார். புனித ரம்ஜான் மாதத்தில் இந்த ஆண்டு சர்வதேசயோக தினத்தில் பங்கேற்க எகிப்து பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உலக இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சார்பாக கர்னல் ராஜ்யவர்தன ரத்தோர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் 52 நாடுகள் பங்கு பெற்றன. இந்தக் கூட்டத்தில் இந்தியாவை வலுவாகக் காட்சிபடுத்துவதற்கு இந்தியாவின் இளைஞர் விவகாரங்கள் துறை உதவியுடன் நான்கு இளைஞர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை அதிபர் அப்த் எல் – ஃபத்தே அல் சிசி தொடங்கி வைத்தார்.

****



(Release ID: 1510415) Visitor Counter : 79


Read this release in: English