சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ரஷ்யாவில் நடைபெற்ற “ நீடித்த வளர்ச்சி சகாப்தத்தில் காசநோய்க்கு (ட்டிபி) முடிவு கட்டுதல் பற்றிய உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) முதலாவது அமைச்சர்கள் நிலை மாநாட்டில்’ இந்தியப் பிரதிநிதியாக திரு. ஜே.பி. நட்டா பங்கேற்பு

2025க்குள் காசநோயை (ட்டிபி) ஒழிப்பதற்கான இந்தியாவின் சங்கல்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Posted On: 16 NOV 2017 12:49PM by PIB Chennai

ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ’நீடித்த வளர்ச்சி சகாப்தத்தில் காசநோய்க்கு முடிவு கட்டுதல்” பற்றிய முதலாவது டபிள்யூ.எச்.ஓ உலக அமைச்சர்கள் நிலை மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா 2015க்குள் காசநோய்யை ஒழிப்பதற்கான இந்தியாவின் சங்கல்பத்தை இன்று (நவம்பர் 16) மீண்டும் உறுதிப்படுத்தினார். காசநோய் குறித்த ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் அதற்கான வளங்களை வலுப்படுத்தவும் பங்கேற்பு நாடுகளுக்கு இந்த அமைச்சரகள் மற்றும் உயர்நிலை கூட்டங்கள் வாய்ப்பை அளித்தன. எதிர்காலத்தில் காசநோய் குறித்த உலகளாவிய செயலுக்கு இதுவே மிகப் பெரிய தொடக்கமாக இருக்கலாம். காசநோய்க்கு எதிரான உலகக் கூட்டமைப்பின் உதவியுடன் இந்த மாநாட்டில் ஒரு பகுதி நிகழ்வாக ’காசநோய்க்கு முடிவு கட்டுதல்: எமது மக்களுக்கு எமது உறுதி மொழி’ என்பதற்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் பிற உலகத் தலைவர்களும் பங்கேற்றனர்.

முதலாவது உயர்நிலைக் கூட்டத்தில் பேசிய திரு நட்டா, போலியோவை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது இதே போன்ற தீவிர முயற்சியைப் பயன்படுத்தி காசநோய்யையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்றார். இந்தியாவில் காசநோய் ஒழிப்புக்கான தேசிய நெடுங்காலத் திட்டம், காசநோய்யைக் கட்டுப்படுத்த முக்கிய சவால்களை எதிர் கொள்ள முக்கியமாக நான்கு வழிகளைக் கொண்டிருக்கிறது. அவை, “கண்டறி, சிகிச்சையளி, கட்டமை, தடுத்திடு” என்பதாகும். கடந்த கால என்எஸ்பியோடு ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முழுமையாக நிதி வழங்கப்பட்டுள்ளது இதில் அதிகபட்சம் உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சி அடைகிறேன் என்று திரு. நட்டா விவரித்தார்.

இந்தியாவில் காசநோய்யைக் கட்டுப்படுத்துவதில் பெரிய சவால்கள் இருக்கிறபோதும் அரசின் முதல் முன்னுரிமை ”சென்று சேராதவர்களை சென்றடைவதாகும்” என்று மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். “பழங்குடியினர், நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் இருக்கும் மக்கள் போன்று கவனிக்கப்படாத மக்கள் தொகுதியினரை கவனிப்பது அரசால் உறுதி செய்யப்படும். அனைத்து நோயாளிகளின் நோய் அறிகுறிகளை முன் கூட்டியே அறிந்து அவர்களுக்குச் சரியான சிகிச்சை அளித்து முழுமையான சிகிச்சையை உறுதி செய்வது மிக முக்கியமானது”. என்று திரு. நட்டா வலியுறுத்தினார்.

நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதற்கு உயர் முன்னுரிமையை இந்திய அரசு தருவதாக பங்கேற்பாளர்களுக்கு திரு. நட்டா தெரிவித்தார். இதில் நேரடி தலையீட்டிற்காக பட்ஜெட்டில் 25% ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவான மாலிக்குலர் சோதனைகள், உயர்தரமுள்ள மருந்துகள் மற்றும் இணை மருந்துகளுடன் கட்டணமில்லா சிகிச்சை, நோயாளிகளுக்கு நிதி மற்றும் ஊட்டச்சத்து உதவி, இணையத்தில் காசநோய் பற்றி தெரிவிக்கும் முறைகள், விரைவான கண்காணிப்பு முறை அடிப்படையில் மொபைல் தொழிநுட்பம்,  தனியார் துறையை ஈடுபடுத்த ஒருங்கிணைப்பு முகமைகள், வெளிப்படையான சேவை பெறும் திட்டங்களுக்கான கொள்கை, வலுவான சமூக ஈடுபாடுகள், தகவல் தொடர்பு பிரச்சாரம், காசநோய்க்கு எதிராக மருந்துகள் எடுத்துக் கொள்ளும் அனைவரும் தகவல் பெறுவதற்கான முறைப்படுத்தல் அமைப்புகள் இன்னபிற வற்றுடன் கட்டணமின்றி நோய் கண்டறிதலும் இதில் அடங்கும்.

இந்தியாவின் உறுதிப் பாட்டை மேலும் எடுத்துரைத்த திரு. நட்டா, சமூகரீதியாகவும் நிலவியல் ரீதியாகவும் சென்று சேர்வதில் சிரமமான பகுதிகளில் நோயாளிகளைக் கண்டறிய,தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ட்டிபி நோய் கண்டறியும் தீவிர பிரசாரங்களை அரசு தொடங்கி உள்ளது என்றும் திரு. நட்டா கூறினார். “257 மாவட்டங்களை உள்ளடக்கி இத்தகைய இரண்டு பிரச்சாரங்களை நாங்கள் ஏற்கெனவே முடித்திருக்கிறோம். பாதிப்பு இருக்கிறதா என அறிய 3 கோடி நபர்கள் சோதனையிடப்பட்டனர். கூடுதலாக 15,000 காசநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு டிசம்பரில் அடுத்த பிரச்சாரத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். நகர்புற சுகாதார இயக்கத்தின் மூலம் நகர்புற குடிசைப் பகுதிகளில் காசநோய்க்கான திட்டங்களை இப்போது நாம் அதிகரித்துள்ளோம் என்று திரு. நட்டா கூறினார்.

காசநோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இது ஏறத்தாழ உலகச் சந்தையில் 80% பங்காகும். உள்நாட்டு மருந்தானாலும் வெளிநாட்டு மருந்தானாலும் சிறந்த தரமுள்ள மருந்துகளையே நாங்கள் நோயாளிகளுக்குத் தருகிறோம். காசநோய் நோயாளிக்கு உலகம் முழுவதும் ஜெனிரிக் எனப்படும் வர்க்க மருந்துகளை ஊக்கப்படுத்துவது பற்றி நாம் கூட்டாக அமர்ந்து தீவிரமாக விவாதிக்கும் வாய்ப்புள்ளது. உலகில் உள்ள அனைத்து காசநோய் நோயாளிகளுக்கும் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதை நாம் ஒருங்கிணைந்து உருவாக்க முடியும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இது குறித்து லட்சக் கணக்கான காசநோய் நோயாளிக்குக் நாம் உறுதி அளிப்போம். நமக்கு நாமேயும் உறுதி ஏற்போம் என்று திரு. நட்டா தெரிவித்தார்.

அனைவருக்கும் சகாதார வசதி அளித்தல், கூடுதலான நீடித்த நிதி உதவி, அறிவியல் பூர்வ ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் ஐ.நா. பொதுச் சபையின் உயர்நிலை சுகாதார கருப்பொருள் அடிப்படையில் இந்த மாநாட்டின் குறிக்கோள் முன்னுரிமைகள் இருந்தன.

*****



(Release ID: 1510413) Visitor Counter : 206


Read this release in: English