பாதுகாப்பு அமைச்சகம்

16 நவம்பர் 2017ல் 223வது விமானப்படை பிரிவு மற்றும் 117வது ஹெலிகாப்டர் படைப்பிரிவுக்கு குடியரசுத்தலைவரின் தர விருது

प्रविष्टि तिथि: 16 NOV 2017 11:01AM by PIB Chennai

16 நவம்பர் 2017ல், ஆதம்பூர் விமானப்படை தளத்தில் நடந்த வண்ணமயமான அணிவகுப்பு நிகழ்ச்சியில், மேதகு இந்திய குடியரசுத்தலைவரும் இந்திய முப்படைகளின் சுப்ரீம் கமாண்டருமான திரு.ராம்நாத் கோவிந்த், பெருமைமிக்க குடியரசுத்தலைவரின் தர விருதை 223வது விமானப்படை பிரிவு மற்றும் 117வது ஹெலிகாப்டர் படைப்பிரிவுக்கு வழங்கினார். ஜனாதிபதியின் தர விருதை, 223 விமானப்படை பிரிவின் கமாண்டிங் அ்திகாரி குரூப் கேப்டன் பிரபாத் மாலிக், 117வது ஹெலிகாப்டர் படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் என்.பத்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வண்ணமயமான அணிவகுப்பு, குரூப் கேப்டன் துஷார் வைத்யா தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியி்ல் 223வது விமானப்படை பிரிவு மற்றும் 117வது ஹெலிகாப்டர் படைப் பிரிவு ஆகியவற்றின் நினைவு முதல் நாள் தபால் உறையை குடியரசுத்தலைவர் வெளியிட்டார். அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது, குறிப்பிடத்தக்க வகையில் மிக்-29, ஏஎல்எச் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை வானில் அணிவகுத்து சென்றன. அணிவகுப்பை தொடர்ந்து, விமானப்படை வீரர்கள் குழுவினரின் கண்ணைக் கவரும் மற்றம் வீரதீர சாகசங்கள் இடம்பெற்றன. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, சரங் மற்றும் சூரியக்கிரண் ஏரோபேடிக் விமானக் குழுவினரின் மயிர்கூச்செறிய வைக்கும் சாகச நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

பஞ்சாப் ஆளுநர் திரு.வி.பி.சிங் பத்னோர், பஞ்சாப் நீர்ப்பாசன மற்றும் மின்துறை அமைச்சர் திரு.ராணா குர்ஜீத், விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பி.எஸ்.தனோவா, மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஏர்மார்சல் சி.ஹரிகுமார் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் சிவில் துறை மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் பேசுகையில், விருது பெற்ற படைப்பிரிவினரையும், சிறப்பான அணிவகுப்புக்காக அதில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் பாராட்டினார். விமானப்படையின் செயல்வல்லமை மற்றும் திறனை நினைத்து நாடே பெருமை கொள்வதாக கூறினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச பயிற்சிகளின்போது வீரர்களின் சிறப்பான திறன் வெளிப்பாடு, விமானப்படையின் பயிற்சி மற்றும் தயார்நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. நமது நாட்டின் வான்வெளி இறையாண்மையை பாதுகாக்கும் இந்திய விமானப்படை, அனைத்து மனிதாபிமான உதவி நடவடிக்கையிலும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளிலும் முதன்மை படையாக உள்ளது. நமது துணிவுமிக்க விமானப்படை வீரர்களின் எதிர்ப்புத்திறன் மற்றும் விடாமுயற்சி ஆகியவை, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.

*****


(रिलीज़ आईडी: 1510296) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English