உள்துறை அமைச்சகம்

தேசிய ஒருமைப்பாட்டு வராம் (குவாமி ஏக்தா வீக்) நவம்பர் 19-25.2017

Posted On: 17 NOV 2017 11:06AM by PIB Chennai

மதநல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வையும், கூட்டு கலாசார தேசிய உணர்வையும் வலுப்படுத்தும் வண்ணம் தேசிய ஒருமைப்பாட்டு வராம் 2017 நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்வுகள் கீழ்கண்டவாறு கடைப்பிடிக்கப்படுகிறது.

 

• நவம்பர் 19,2017 தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் கூட்டங்கள், மதசார்பின்மை, மதவாத எதிர்ப்பு, வன்முறை எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துக்கள் சார்ந்த கருத்தரங்குகள், கருத்துப்பட்டறைகள் நடத்தப்படும்.

• நவம்பர் 20,2017  சிறுபான்மையோர் நல நாளாக 15 அம்ச கொள்கையை வலியுறுத்தும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. கலவரம் பாதித்த நகரங்களில் சகோதரத்துவ ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.

 

•நவம்பர் 21, 2017 அன்று மொழி நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது அன்றைய தினம்  சிறப்பு இலக்கிய நிகழ்வுகள், அதாவது கவியரங்கங்கள், போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அதில் பல்வேறு மொழிபேசுபவர்கள் பங்கேற்று இந்தியாவின் பாரம்பரிய மொழி வளம் ஊக்குவிக்கப்படும்.

 

•நவம்பர் 22,2017 அன்று  நலிந்தோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  அன்றைய தினம், எஸ்.சி,. எஸ்.டி,. மற்றும் சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அரசு செயல்படுத்தி வரும் குறிப்பாக உபரி நிலங்கள் நிலமற்ற தொழிலாளர்களுக்கு வழங்குதல் போன்ற திட்டங்களை விளக்கும் கூட்டங்கள், பேரணிகள் நடத்தப்படும்.

 

.

•நவம்பர் 23,2017 கலாசார ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும். மேலும்  கலசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதாவது வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் இன்றைய கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒற்றுமை உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

•நவம்பர் 24,2017 மகளிர் தினமாக அனுசரிக்கப்படும். இந்த நாளில் இந்தியாவில் பெண் சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும்  தேச கட்டமைப்பிலும் வளர்ச்சியிலும் மகளிரின் பங்கு பற்றி வெளிப்படுத்தப்படும்.

•நவம்பர25,2017. பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு விழிப்புணர்வு சார்ந்த மற்றும் செயல்பாடு சார்ந்த  நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

 

நாட்டின் மதச்சார்பின்மை மற்றும்  அச்சுறுத்தல்களை விலக்கி ஒன்றுபட்ட இந்தியாவினை நிலைநாட்டவும், தேச ஒற்றுமையை நிலைநிறுத்தவும் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் உதவும். மத நல்லிணக்கம் என்ற வலுவான உணர்வே இந்த தேசத்தின் உன்னதம்  என்பதையும் வலுப்படுத்தும்.  சகிப்புத்தன்மை மீதான நம்பிக்கை, பன்மொழி கலாசாரம், சகோதரத்துவம்,  பழைமையான பாரம்பரியம்,  பலமதங்களை உள்ளடக்கிய சமுதாயம் ஆகியவற்றினை மீண்டும் உறுதிப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமையும்.

 

மத நல்லிணக்கத்திற்கான தேசிய ஒருமைப்பாட்டு அறக்கட்டளை (என்.எப்.சி.எச்.,) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பு. ஆகும்.   இதன் மூலம் மத நல்லிணக்க பிரச்சாரங்கள் தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நடத்தப்படும். அதாவது மத நல்லிணக்க கொடிநாள், நவம்பர் 25ம் தேதி நடத்தப்படும். இந்த அறக்கட்டளையானது மத நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தும். அத்துடன் மதம், சாதி, இனம் அல்லது தீவிரவாத வன்முறைகளால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த அறக்கட்டளை நிதி உதவியும் அளிக்கிறது.

=============



(Release ID: 1510214) Visitor Counter : 2491


Read this release in: English