நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ஜிஎஸ்டியால் அதிகபட்ச சில்லரை விலை குறைந்துள்ளதால், 31 டிசம்பர் 2017 வரையில் மாறிய விலையை காட்சிப்படுத்த திரு.ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
Posted On:
17 NOV 2017 5:52PM by PIB Chennai
2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களின் சில்லரை விலையை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதன் அடிப்படையில், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான், முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் அல்லது பேக்கர்ஸ்கள் அல்லது இறக்குமதியாளர்கள், அதன் மீதான அதிகபட்ச சில்லரை விலையை மாற்றி அமைத்து, இப்போதுள்ள அதிகபட்ச சில்லரை விலையை காட்சிப்படுத்த அனுமதி அளித்துள்ளார். இது 2017 ஜூலை 1ம் தேதியில் இருந்து மூன்று மாத காலத்துக்கு செல்லுபடியாகும். இந்த அதிகபட்ச சில்லரை விலையை அச்சடிப்பு, ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் அல்லது ஆன்லைன் பிரின்டிங் ஆகியவற்றில் எது உகந்ததோ அதன் மூலம் செய்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
உள்ளடக்கும் பேக்கேஜிங் பொருட்கள் / ராப்பர்கள் தேவையான திருத்தங்களுடன் 2017 செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகபட்ச சில்லரை விலையை ஸ்டாம்பிங் அல்லது ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மூலமும் அல்லது ஆன்லைன் பிரின்டிங் மூலமும் காட்சிப்பபடுத்த மேலும் கால அவகாசம் கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், இந்தக் கால அளவு 2017 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதை தொடர்ந்து, லீகல் மெட்ராலஜி (பேக்ஜூடு பொருட்கள்) விதிகளில் 6வது பிரிவின் துணை விதி (3)ன் அடிப்படையில் குறைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை, கூடுதல் ஸ்டிக்கர்கள் அல்லது ஸ்டாம்பிங் அல்லது ஆன்லைன் பிரின்டிங் மூலம் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் குறிப்பிட மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார். இந்த விவகாரத்திலும், முந்தைய அதிகபட்ச சில்லரை விலை குறித்த லேபிளிங் / ஸ்டிக்கர் தொடர்ந்து தெரியும்படி இருக்க வேண்டும்.
2017 ஜூலை 1ம் தேதிக்கு முந்தைய விலையானது, ஜிஎஸ்டி வரி குறைப்பால் அதிகபட்ச சில்லரை விலை குறையும்பட்சத்தில்,
இந்த சலுகை, விற்பனை செய்யப்படாத தயாரிப்பு பொருட்கள் / பேக்கெட்கள் / 2017 ஜூலை 1க்கு பின்பு இறக்குமதி செய்யப்பட்ட இனங்களுக்கும் பொருந்தும்.
மேற்கண்ட அனுமதி / சலுகை ஆகியவை 2017 டிசம்பர் 31ம் வரையில் பொருந்தும்.
(Release ID: 1510212)
Visitor Counter : 116