குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பெண்கள் பிரச்சனைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்; குடியரசு துணை தலைவர்
‘ஜெர்னி ஆப் வொமேன் லா ரிபார்ம்ஸ் அண்ட் தி லா கமிஷன் ஆப் இந்தியா – சம் இன்சைட்ஸ்’ என்ற நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2017 2:56PM by PIB Chennai
குடியரசு துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, நாட்டில் உள்ள பெண்கள் பிரச்சனைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ‘ஜெர்னி ஆப் வொமேன் லா ரிபார்ம்ஸ் அண்ட் தி லா கமிஷன் ஆப் இந்தியா – சம் இன்சைட்ஸ்’ என்ற நூலின் முதல் பிரதியை அவர் இந்திய சட்ட ஆணையத்தின் முன்னால் இணை செயலர் மற்றும் இந்நூலின் ஆசிரியருமான டாக்டர் பவன் ஷர்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
நூல் ஆசிரியர் சிறந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இது போன்ற ஆய்வுகள் திருமணம், சொத்து, வாரிசுரிமை, பாதுகாப்பு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணம், பாலியல் வன்கொடுமை சார்ந்த சட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில், பெண்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இந்த புத்தகம் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1510025)
வருகையாளர் எண்ணிக்கை : 214