பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பாங்காக்கில் நடைபெற்ற 7வது ஆசிய எரிசக்தி அமைச்சகத்தின் வட்டமேஜை மாநாட்டு முழுஅமர்வில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் ஆற்றிய உரை
2017, நவம்பர், 2 அன்று தாய்லாந்து பாங்காக்கில் நடைபெற்ற 7வது ஆசிய எரிசக்தி அமைச்சகத்தின் வட்டமேஜை மாநாட்டு முழுஅமர்வில் “இயற்கை எரிவாயு : எரிவாயு பொற்காலத்திற்கு தடையாக உள்ள சந்தை மற்றும் கொள்கைகளை கடந்து செல்லுதல்” என்ற தலைப்பில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர், திறன்வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு:
Posted On:
02 NOV 2017 2:14PM by PIB Chennai
“இயற்கை எரிவாயு குறித்த இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் வரவேற்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக, 2012-ல், சர்வதேச எரிசகத்தி முகமை, இயற்கை எரிவாயு பொற்காலத்தில் நுழைய துவங்கம் என கணித்தது. திறன்வாய்ந்த, தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்தியாக இருந்தும் இயற்கை எரிவாயு, உலக எரிசக்தி சந்தைகளில் அதற்கான உரிய இடத்தை அது அடையவில்லை என நான் நம்புகிறேன். போதிய உட்கட்டமைப்பு இல்லாமை, முறையற்ற சந்தை மற்றும் போட்டித்தன்மையற்ற பழக்கங்கள் போன்றவை முக்கியத் தடைகளாக இருந்து, உலக மக்கள் எரிவாயுவின் முழு பயனையும் பெற தடுத்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, உலகத்தின் சராசரியான 24% எதிராக, இந்தியாவின் முதன்மை எரிசக்தியில், எங்களது எரிவாயு எடுத்தல் 6.5% குறைவாக உள்ளது. இந்திய அரசு 2030-க்குள் இந்தியாவின் கலப்பு எரிசக்தி பங்கை 15% ஆக உயர்த்திட முடிவு செய்துள்ளது.
ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனாவை தொடர்ந்து, இந்தியா உலகின் நான்காவது-பெரிய திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) இறக்குமதியாளராக உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா ஏறக்குறைய 19 மில்லியன் டன்கள் எல்.என்.ஜி.-யை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15% அதிகமாகும். இந்தியா ஏறக்குறைய அதே அளவிலான உள்ளூர் எரிவாயு உற்பத்தியை பெற்றுள்ளது. உரம், மின்சக்தி நகர எரிவாயு விநியோகம் ஆகிய மூன்று முக்கியத் துறைகள், இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவைக்கு பங்களிக்கின்றன. வரும் ஆண்டுகளில், சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ-ரசாயனங்கள், பீங்கள் மற்றும் கண்ணாடி, சிமிண்ட், எஃகு மற்றும் மென்மையான இரும்பு, வண்ணபூச்சுகள் மற்றும் சாயங்கள், ரசாயனங்கள் மற்றும் வாகன உற்பத்தி போன்ற தொழிற்துறைகள் நாட்டின் இயற்கை எரிவாயு தேவைக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பர்கள், இந்தியாவில், உள்ளூர் எரிவாயு உற்பத்திக்கான பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளதுடன், எரிவாயு பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறோம். எரிவாயு உற்பத்தியாளர்களுக்காக, எதிர்கால ஆய்வு ஏலத்தில் விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தலை நாங்கள் சுதந்திரமாக்கி உள்ளோம். இறக்குமதி செய்யப்பட்ட எல்.என்.ஜி. மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட எரிவாயு ஆகியவற்றை வணிகம் செய்ய ஏதுவாக இயற்கை எரிவாயு வர்த்தகச் சந்தையை இந்தியா உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு சிறு பிரிவிலும் கொள்கை நடவடிக்கைகள் மூலமாக இயற்கை எரிவாயு நுகர்வு பயன்பாட்டை அதிகரிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் எல்.என்.ஜி. மறு-எரிவாயுமயமாக்கம் திறனை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். ஆறு புதிய மறு-எரிவாயு முனையத்தின் மூலம், நாங்கள் 2022-க்குள் நமது எல்.என்.ஜி. மறு-எரிவாயு திறனை 50 எம்.எம்.டி.பி.ஏ.வாக அதிகரிக்கச் செய்வதை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம். கூடுதலாக 15,000 கிலோ மீட்டர்கள் இயற்கை எரிவாயு குழாய்கள் இடுவதன் மூலம் தேசிய எரிவாயு அமைப்பை உருவாக்கிட நாங்கள் பணியாற்றி வருகிறோம். நகர எரிவாயு விநியோக இணைப்புகளை அதிகரிக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரயில்வே, கடற்சார் கப்பல்போக்குவரத்து, உள்ளூர் போக்குவரத்து மற்றும் நெடுந்தொலைவு சாலை போக்குவரத்திற்கான எரிபொருளாக இறக்குமதி செய்யப்பட்ட எல்.என்.ஜி.-யை பயன்படுத்திட நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம்.
ஆசியாவின் எரிசக்தி அமைச்சர்களுக்கான இக்கூட்டத்தில், இந்தியா, பிராந்திய பொருளாதார மையமாக இருந்து, மியான்மர், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, உள்ளிட்ட முக்கிமான அண்டைநாடுகளை இணைத்து தெற்காசிய எரிவாயு அமைப்பினை உருவாக்கிட விரும்புகிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அளவிலான எல்.என்.ஜி. புதுமையான மாதிரிகளை இந்திய நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
கத்தார், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா, உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வழங்கும் ஆதாரங்களிடமிருந்து ஏறக்குறைய 22 எம்.எம்.டி.பி.ஏ.-க்கான நீண்ட கால ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஹென்ரி ஹப், கச்சா எண்ணெய் குறியீடு போன்ற பல்வேறு குறியீடுகளுடன் இணைந்த ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளன. இந்திய சந்தைக்கு எல்.என்.ஜி.யின் வழங்கும் செலவினை குறைக்கும் வகையில், இந்திய இறக்குமதியாளர்கள், அளவுகளுக்கான நேர மாறுதல், இட மாறுதல்கள் மற்றும் இலவச தளத்திற்கான ஒப்பந்தம் போன்ற புதுமையான அணுகுமுறைகளை கடைபிடித்துள்ளனர்.
புதிய வழங்கல்களால், உலக இயற்கை எரிவாயு சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கத்தார் ஆகியவை தங்களது உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன், மொசாம்பிக், டான்சானியா, எகிப்து, இஸ்ரேல், கனடா மற்றும் சைப்ரஸ் போன்ற புதிதாக வழங்கக்கூடிய நாடுகள் வரும் ஆண்டுகளில் எல்.என்.ஜி. சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து, 2017-2020 காலக்கட்டத்திற்குள் 100 எம்.எம்.டி.பி.ஏ.-க்கும் அதிகமான திரவமயமாக்கல் திறனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அனைத்து தொழிற்துறையினரும் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைப்பது தேவையாகும். குறைந்த விலை, அதிகமான குறுகிய கால வர்த்தகங்கள் மற்றும் நெகிழத்தக்க ஒப்பந்தத்தின் தேவைகள் போன்றவற்றை அவை எதிர்பார்க்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கு மிகவும் தொடர்புடைய ஆசிய சந்தைகள் குறித்து நான் பேச விரும்புகிறேன். அதிகளவிலான இயற்கை எரிவாயு நுகர்வு பகுதியாகவும், 70% உலக எல்.என்.ஜி. இறக்குமதி பெறும் பகுதியாக ஆசியா விளங்கினாலும், இப்பகுதியில் வெளிப்படையான எல்.என்.ஜி. விலை நிர்ணயம் இல்லாமல் உள்ளது. உள்ளூர் இயற்கை எரிவாயு ஆதாரங்கள் இல்லாதாதாலும், அளவான குழாய் மூலமான வர்த்தகத்தை கொண்டுள்ளதாலும், ஆசிய எல்.என்.ஜி. வாடிக்கையாளர்கள், வரலாற்றுபூர்வமாக, வழங்குதல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களையே நம்பியுள்ளனர்.
உலகளவில், நாம் மாற்றத்திற்கான காற்றை கண்டு வருகிறோம். நிர்ணயிக்கப்பட்ட இடம், எண்ணெய் குறியீடு நீண்ட கால ஒப்பந்தங்கள் போன்ற பாரம்பரிய முறைகளில் வர்த்தகம் புரிந்து வரும் முறை மெதுவாக மறைய துவங்கியுள்ளது. இவை தற்போது, அதிகரிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒன்றுக்கொன்றான இணைப்பு, மேலும் திரவம், போட்டித்தன்மை மற்றும் வெளிப்படையான சந்தையை ஊக்குவித்தல் போன்றவற்றிக்கு இடமளித்து வருகின்றன. எங்களது பார்வையில், இன்றைய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடனான தேவைக்கும் அதிகமான பெறப்பட்ட சந்தை காரணமாக, உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்களின் உணர்வு, தேவை மையங்கள் மற்றும் இத்தேவை மையங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்திருப்பது முக்கியமானதாகும். பெரும்பாலான வாங்குபவர்கள், விற்பனையாளர்கள் இடத்தளர்வினை அளிக்க கோருகிறார்கள். அதன் மூலம் எல்.என்.ஜி. பல்வேறு முனையங்களில் வழங்கப்படும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் டோக்கியாவில் நடைபெற்ற எல்.என்.ஜி.உற்பத்தியாளர்-வாடிக்கையாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டபோது, ஆசியாவின் எல்.என்.ஜி. சந்தையை விரிவுபடுத்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 திறன்மிக்க மனிதவள ஆதாரங்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் ஜப்பான் அறிவித்தது, இது ஒரு நல்ல வளர்ச்சியாக இருப்பதுடன், உலகம் முழுவதிற்கும் ஆசியாவின் எல்.என்.ஜி. தேவை எவ்வளவு முக்கியமாக உள்ளது என்பதை குறிக்கிறது.
இயற்கை எரிவாயு குறித்த தலைப்பிலிருந்து, சிறிது தவறி, நான் இந்தியாவில் எரிசக்தி நீதியின் வெற்றிக்கதையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாங்கள் 30 மில்லியன் எல்.பி.ஜி. சமையல் வாயு இணைப்புகளை ஏழை குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் வழங்கியுள்ளோம். பன்முக நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் மகளிர், உலக வங்கி மற்றும் பிற நிறுவனங்கள் எங்களது எல்.பி.ஜி. திட்டங்களின் மீது மிக்க ஆர்வம் கொண்டுள்ளதுடன், பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனுபவங்கள் மற்றும் முனைப்புகள் குறித்து அறிய எங்கணை அணுகியுள்ளனர். ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இது ஒரு நல்ல செயல்படுத்தக்கூடிய மாதிரியாக விளங்கும் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
இயற்கை எரிவாயு குறித்த கூட்டு அறிவு மற்றும் பொது கருத்தை நாம் மாற்ற வேண்டும். இத்திசையில், நாங்கள் கேஸ்4இந்தியா என்ற திட்டத்தை தொழிற்துறையினருடன் துவங்கியுள்ளோம். பசுமையான பொருளாதாரத்திற்கு இயற்கையான தேர்வு இயற்கை எரிவாயு இருப்பதுடன், 175 ஜிக்காவாட்ஸ் சூரிய, காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நமது பெரும் திட்டத்திற்கு இணையாக இருக்கும்.
இறுதியாக, நமது பரஸ்பர நன்மைக்காக எரிவாயுவின் பொற்காலத்திற்கு விரைவாக செல்ல வேண்டும். இதற்காக, உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கைகோர்த்து, வாயுவிற்கான நெகிழத்க்க மற்றும் வெளிப்படையான உலகச் சந்தைகள் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நமது பொருளாதாரங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஊக்குவிக்கும்.
இந்தியா பெருமையுடன் 2018, ஏப்ரல், 10-12 வரை புதுதில்லியில் நடத்த உள்ள ஐ.இ.எப். அமைச்சக கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைப்பதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த அமைச்சக கூட்டம், எரிவாயு மீதான முக்கிய கவனம் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்கும்.”
*****
(Release ID: 1510020)
Visitor Counter : 117