மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 39-வது பொது மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர். ‘கல்விக்கு நிதி ஒதுக்குவதற்கான பொறுப்பு’ குறித்த அறிக்கை
சீரான வளர்ச்சி இலக்கு - 4 கல்வி 2030 எனப்படும் SDG4-Education 2030 திட்ட அமலாக்கத்தில் பொறுப்பை வலுவூட்டுதற்கான கூட்டம் (நவம்பர் 2, 2017)
Posted On:
03 NOV 2017 2:27PM by PIB Chennai
எஸ்டி.ஜி.4 மற்றும் அதனுடன் இணைந்த இலக்குகளை அடைய, கல்விக்கு நிதி ஒதுக்கும் பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தியா உணர்ந்திருக்கிறது. கல்விக்கு நிதி ஒதுக்கும் பொறுப்பு என்பது கூட்டாகவும், தனிப்பட்ட நாடாகவும் வளர்ச்சி அடைவதை உள்ளடக்கியது ஆகும். கூட்டு வளர்ச்சி கணக்கீடு என்பது எஸ்.டி.ஜி.-4-கல்வி 2030 திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிதி ஒதுக்குவதைப் பொறுத்து அமைகிறது. சமீபத்தில் வெளியான, உலக கல்வி கண்காணிப்பு அறிக்கையானது, உலக அளவில் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கும் சர்வதேச கடமை பலவீனமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. மேலும் அந்த அறிக்கையானது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு – அபிவிருத்தி உதவிக் குழுவைச் (OECD-DAC) சேர்ந்த 28 நாடுகளில் 6 நாடுகள் மட்டுமே தேசிய வருமானத்தில் இருந்து 0.7% நிதி ஒதுக்குவதாக கூறுகிறது. அதனால் ஓ.இ.சி.டி-யின் வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். கல்வியில் செய்யப்படும் முதலீடு என்பது சமாதானம் மற்றும் நிலையான எதிர்கால வளர்ச்சி முதலீடாக கருதப்பட வேண்டும்.
ஒவ்வொரு தனி நாடும், தேசிய அளவில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு, முற்போக்கான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சர்வதேச அளவுக் குறியீட்டின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கும், கல்வி சார்ந்த திட்டங்களுக்கும் 4% முதல் 6% வரை ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல் பொதுவான செலவினங்களில் 15% முதல் 20% வரை கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். கல்விக்கு கிடைக்கும் நிதியை திறமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட நாடுகள் முன்வர வேண்டும்.
எஸ்.டி.ஜி.4 கல்வி 2030 திட்டத்தின் அடிப்படையில் கல்வி வளர்ச்சி இலக்கை அடைவதற்கு கூடுதல் நிதியை, திட்டமிட்ட வகையில் திரட்டவேண்டும் என்பதையும், அந்த பணத்தை சிறப்பாகவும், திறமையாகவும் செலவழிக்க வேண்டும் என்பதையும் இந்திய அரசு உணர்ந்தே இருக்கிறது. இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியில் 4.5% கல்விக்காகவும், அதன் தேவைக்கேற்ப நிதி ஆதாரங்களையும் வழங்கிவருகிறது.
மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இலக்கு அடைவதை நோக்கி கல்வித் துறையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கல்வித் துறையில் பொது மற்றும் தனியார் துறை முதலீடுகள் சீரான வளர்ச்சி அடைவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அதிகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு நடைமுறை போன்றவை மூலம் கிடைக்கும் நிதியை திறமையாகவும் திட்டமிட்டும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள், இளைஞர்களிடமிருந்து கற்றல் முறையில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அடைந்துவிட முடியும்.
(Release ID: 1510013)
Visitor Counter : 77