குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாம் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தினால், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் இருக்காது :துணை ஜனாதிபதி

சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாடு – 2017-ஐ துவக்கி வைத்தார்

Posted On: 03 NOV 2017 8:39PM by PIB Chennai

துணை ஜனாதிபதி திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள், நாம் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தினால், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் இருக்காது என்றார். இன்று அவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தபின் கூடியிருந்தவர்களிடையே அவர் உரையாற்றினார். இந்நிகழ்வில், இந்திய தலைமை நீதிபதி நீதியரசர் தீபக் மிஸ்ரா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றம் மற்றும் புவி அறிவியல்கள் துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பெருந்தலைவர் திரு.ஸ்வதந்தர் குமார், பிரேசில் தேசிய உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சர்வதேச ஆலோசனை மன்றத்தின் பொதுச் செயலாளர், நீதியரசர் அண்டோனியோ ஹெர்மன் பெஞ்சமின், இந்தியாவிற்கான அட்டர்னி ஜெனரல் திரு.கே.கே.வேணுகோபால் மற்றும் பிற பிரமுகர்களும்  கலந்துக் கொண்டனர்.

துணை ஜனாதிபதி அவர்கள், ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தி மிக முக்கியமானது, ஆனால் அதை விட முக்கியமானது மனித வாழ்வை மேம்படுத்துவதாகும்.மேலும் அவர், வளர்ச்சிக்கான நமது அனைத்து முயற்சிகளுக்கு வாழ்க்கைத் தரமே இறுதித் தேர்வாக உள்ளது என்றார்.மேலும், உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னோக்கி அழைத்து செல்லாவிட்டால், வளர்ச்சி என்பது குறைந்த அர்த்தமே கொண்டிருக்கும் என்றார் அவர்.

துணை ஜனாதிபதி அவர்கள், எது முன்னுரிமையானது – சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது வளர்ச்சி என்ற கேள்வியை அவ்வப்போது அவர் எதிர்கொண்டதாக தெரிவித்தார். மேலும் அவர், இந்த இரண்டுக்கும் இடையே அடிப்படையான மாறுதல்கள் ஏதுமில்லை என நான் நம்பிக்கையுடன் கூறுவேன்; அதிகளவிலான சுரண்டல்களை தடுப்பது மட்டும் தான் தேவைப்படுகிறது என்றார்.

துணை ஜனாதிபதி அவர்கள், நமது அரசியலின் ஒவ்வொரு பிரிவும் முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியுள்ளது என்றார்.மேலும் அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சட்டங்களை சட்டமன்றங்கள் இயற்றுகிறது, அதிகாரிகள் அதனை செவ்வனே செயல்படுத்தி வழங்குகிறார்கள் என்றார்.சட்டங்கள், எழுத்தாலும், உணர்வாலும் உரிய வகையில் செயல்படுத்தப்படுவதை நீதித்துறை உறுதி செய்கின்றன என்றார் அவர்.

துணை ஜனாதிபதி அவர்கள், துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தீவிர தொழிற்சாலைமயமாக்கல் ஆகியவை, உடல்நலமற்ற, மாசுபட்ட மற்றும் தீவிர கார்பன் வாழ்க்கை முறைகளை அதிகரித்துள்ளது என்றார். மேலும் அவர், வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாமல், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உண்மையாக எடுத்துரைக்கும் புனிதமான  வளர்ச்சியை அளவிடும் முறையைநாம் கடைபிடிக்க வேண்டும் என்றார். பொருளாதார முன்னேற்றத்தை பராமரிப்பதற்கான நாம் புதுமையான முறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார் அவர்.

துணை ஜனாதிபதி மேலும் கூறுகையில்:

இந்த மதிப்புமிக்க கூட்டத்தின் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இந்த வாய்ப்பை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (இந்தியாவின் முதன்மை சுற்றுச்சூழல் நீதிமன்றம்), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்..பி.), ஆசிய வளர்ச்சி வங்கி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றத்திற்கான அமைச்சகம் மற்றும் நீர்வள ஆதாரங்கள், ஆறு மேம்பாடு & கங்கை புனரமைப்பு அமைச்சகம் ஆகியவை இத்தகைய நிகழ்ச்சிகளை சர்வதேச மற்றும் தேசிய அளவில்    வெற்றிகரமாக நடத்திடவும், தற்போதைய நடத்தப்படும் நிகழ்வானசுற்றுச்சூழலுக்கான உலக மாநாடு, நவம்பர் 2017 ஆகியவற்றுக்கு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறேன்.

உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் பல்வகை சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்துவதற்கான தளமாக இத்தகைய நிகழ்வுகள் உள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நடத்தப்படும் இது இந்த ஆண்டில், இப்பொருள் குறித்து இரண்டாவது சர்வேதேச மாநாடாகவும், சுற்றுச்சூழலுக்கான நான்காவது சர்வதேச மாநாடகவும் உள்ளது.

சகோதர மற்றும் சகோதரிகளே, சர்வதேச சுற்றுச்சூழல் கவனம், நீதித்துறை மற்றும் சட்டங்கள் குறித்து பல பத்தாண்டுகளாக நாம் விவாதித்துள்ளோம். உலக வெப்பமயமாதல் குறித்து, நாம் மறுத்ததில் இருந்து அதனை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியுள்ளோம். பருவகால மாற்றம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் குறைக்கும்வண்ணம் நாம் தன்னார்வமற்ற, கட்டாயமற்ற பங்களிப்புகளிலிருந்து  தன்னார்வ உறுதிப்பாடுகளுக்கு முன்னேறியுள்ளோம். பலநாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக சார்பு-செயல் நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளன.

நமது சுற்றுச்சூழலை நாம் பாதிப்புள்ளாக்கி வருறோம் என்பதை நாம் மெதுவாகவும், சிறிது வலியோடும்உணரத் துவங்கியுள்ளோம்.நமது இருப்பு அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது என்ற அறிவு அனைத்து நாடுகளுக்கும் மெதுவாக வெளிப்பட துவங்கியுள்ளது.பேரழிவை தடுப்பதற்கு நாம்விரைந்து செயல்பட வேண்டும்.

இந்த நிலையில், எனக்கு மகாத்மா காந்தி அவர்களின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது. அவர் கூறியுள்ளார்:

மண், காற்று, நிலம் மற்றும் நீர் ஆகியவை நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டதல்ல, நமது குழந்தைகளிடமிருந்து கடன் பெற்றதாகும்.எனவே, அதனை அவர்களுக்கு நம்மிடம் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டதோ, அவ்வாறே ஒப்படைக்க வேண்டும்”.இத்தகைய காலக்கட்டங்கள் சர்வதேச சமூகம் சுற்றுச்சூழலை முன்னிறுத்திட கூட்டாக செயல்பட்டு, உலக வெப்பமயமாதலைசெல்ஷியஸ்க்கும் குறைவாக வைப்பதற்கான நிலையான வளர்ச்சி பாதையை உருவாக்க உழைத்து வருவதுடன், 1.5° செல்ஷியஸ் அளவிற்குள் வைத்திட முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழலிருந்து தனிப்பட்டதாக காணக்கூடாது.நாடுகள் கூட்டாக எதற்காக உழைக்க வேண்டியதன் தேவையெனில், நிலையான பொருளாதார வளர்ச்சிக்காகும்.

உலகில் உள்ள பல நாடுகளும் நமது கிரகத்தை, தாய் பூமி என்றே அழைக்கின்றன.இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழ உயர்ந்த பராம்பரியமிக்க சிந்தனைகள் மற்றும் உத்திகளை பல மதங்கள் அளித்துள்ளன.இந்தியாவில் கூட, நாம் இயற்கையை கொண்டாட, வழிபட மற்றும் பாதுகாக்க உயர்வான மந்திரங்கள் மற்றும் பழக்கங்களை கொண்டுள்ளோம்.உதாரணமாக, 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட அதர்வ வேதத்தில் உள்ள பூ-சுக்தம், இயற்கையை கொண்டாடுவதுடன், அதனை பாதுகாக்க வேண்டும் என்கிறது.

தாய் பூமியே, உனது குன்றுகள் மற்றும் பனி சார்ந்த மலைகள், அவைகளது குளிர்ச்சியை பரப்பட்டும், உனது வனங்கள் வெளிச்சத்தை பரப்பட்டும்.கைபற்றமுடியாத, அசைக்கமுடியாத மற்றும் உடைக்கமுடியாத உனது ஆழமான அஸ்திவாரத்தில், நான் உறுதியாக நிற்கிறேன்.” மரங்களின் அழிப்பு சோகமானது.“எவன் ஒருவன் விருட்சத்தை வெட்டுகிறானோ, அல்லா அவனை நரகத்திற்கு அனுப்பி வைப்பார்என முகமது நபி அவர்கள் கூறுகிறார்.இந்து மதத்தில், அனைத்து மரங்களும் புனிதமானது, அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிர் அற்ற பொருட்கள் யாவும் மதிப்புடையவை மற்றும் பொக்கிஷமானவை.“இஷாவஸ்யம் இதம் சர்வம் (இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகமானது மற்றும் புனிதமானதுஎன மடாதிபதிகள் கூறுகிறார்கள்.

நமது கூட்டு பாரம்பரியத்தின் நல்லூற்றுக்களான இவைகளுக்கு புத்துயீருட்ட வேண்டும்.நமது கடந்த காலத்தின் சிறந்த சிந்தனைகள் சிலவற்றை மட்டும் நாம் நினைவு கூறக்கூடாது, நமது நிகழ்காலத்தை அத்தகைய நன்னெறி மாண்புகளுடன் வடிவமைக்க வேண்டும்.இல்லையெனில், நமது எதிர்காலம் இருளாகவும், இருண்டும் இருக்கும்.

எதிர்கால பேரழிவிற்கான அறிகுறிகளை நாம் ஏற்கனவே உண்மையாக இங்கு அனுபவித்து வருகிறாம்.பல நகரங்களில் தூய்மையான காற்று மற்றும் தூய்மையான தண்ணீர் நமக்கு கிடைக்கவில்லை.நமது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி.) முக்கியமானது, ஆனால் மனித வாழ்வை மேம்படுத்துவது அதைவிட முக்கியமானது.வளர்ச்சிக்கான நமது அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்க்கைத் தரமே இறுதித் தேர்வாக உள்ளது என்றார்.மேலும், உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னோக்கி அழைத்து செல்லாவிட்டால், வளர்ச்சி என்பதற்கு குறைந்த அர்த்தமே இருக்கும் என்றார் அவர்.நாம் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தினால், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் இருக்காது

இந்திய அரசின் நாற்பது ஆண்டுகளாக பணியாற்றியபோது, எது முன்னுரிமையானது – சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது வளர்ச்சி என்ற கேள்வியை அவ்வப்போது நான் எதிர்கொள்வேன்.இந்த இரண்டுக்கும் இடையே அடிப்படையான மாறுதல்கள் ஏதுமில்லை என நான் நம்பிக்கையுடன் கூறுவேன்; அதிகளவிலான சுரண்டல்களை தடுப்பது மட்டும் தான் தேவைப்படுகிறது.காந்தியடிகள் கூறியவாறு, இயற்கை நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதை அளிக்கிறது, ஆனால் நமது பேராசைக்கு அளிப்பதில்லை.இந்த சவால் மிகப் பெரியதானதாகும்.எவ்வாறு இருப்பினும், நம்மிடம் அரசியல் தைரியம், சட்டநெறிமுறை மற்றும் உயர்வான நீதித்துறை கொண்டிருந்தால், நாம் முடிவுகளை அடையலாம்.

நமது அரசியலின் ஒவ்வொரு பிரிவும் முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியுள்ளது.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சட்டங்களை சட்டமன்றங்கள் இயற்றுகிறது, அதிகாரிகள் அதனை செவ்வனே செயல்படுத்தி வழங்குகிறார்கள்.சட்டங்கள், எழுத்தாலும், உணர்வாலும் உரிய வகையில் செயல்படுத்தப்படுவதை நீதித்துறை உறுதி செய்கின்றன.

நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பொறுப்புமிக்க துறைகளில், ஒரே குறிக்கோளுடன் ஒற்றுமையுடன், அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்த அளவுகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என நான் நம்புகிறேன்.

முன்பு நினைத்ததைவிட சுற்றுச்சூழல் மாற்றம் மிக வேகமான விகிதத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, துரித நகரமயமாக்கல், நுகர்வு அளவு அதிகரித்து வருதல், பாலைவனமயமாதல், நிலத்தின் தரம் குறைதல் மற்றும் பருவகாலம் மாற்றம் போன்ற அச்சுறுதல்கள், நாடுகள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் திண்டாட வைக்கின்றன. இத்தகைய பெரும் அச்சுறுத்தும் போக்குகள், உலகம் தனக்கு தானே உணவை தேடிக்கொள்வதை கடுமையாக்கி வருகின்றன.

ஆசிய பசிபிக் பகுதியை குறித்து கூறுவதென்றால், துரிதமான மற்றும் விரும்பக்கூடிய பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மோசமாகிவரும் காற்றின் தரம், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பெருமளவிலான கழிவு உருவாக்கம் போன்றவை மனித மற்றும் சுற்றுச்சூழல் நலத்தை அச்சுறுத்தி வருகிறது.

உலகின் பெரும் பேரழிவு ஏற்படக்கூடிய பகுதியாக தொடர்ந்து இருந்து வரும் இப்பகுதி, கடந்த இருபதாண்டுகளில், 41%அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டுள்ளதாகவும், கடந்த நூற்றாண்டில், உலகில் இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட மரணங்கள் 91%-யும் கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில், ஆண்டொன்றுக்கு 1 மில்லியன் ஹெக்டர் வனங்கள் சராசரியாக அழிக்கப்பட்டு வருவதன் காரணமாக, 2005 முதல் 2015 வரை ஒவ்வொரு ஆண்டும் நூற்று மில்லியன் டன்கள் கார்பன்டை ஆக்சைடு வெளியேறியுள்ளது.

மனித மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட, தொழிற்சாலை கழிவுகளால் நீர் ஆதாரங்கள் மாசுபடுவது, இப்பகுதியின் பெரும் பிரச்சினையாக உள்ளன.

30% சதவீத மக்கள் மாசடைந்த குடிநீரை பயன்படுத்தி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியன் மரணங்கள், தண்ணீர் தொடர்பான வியாதிகள் மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீரினால் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆசியாவின் மக்கள் தொகை அதிகமிக்க நகரப்பகுதிகளில், பாதுகாப்பற்ற சுகாதாரம், சுத்தம் செய்யப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுத்தண்ணீர் மற்றும் விவசாய-வேதியல்களின் வெளியேற்றம் போன்றவை தண்ணீர் தொடர்பான வியாதிகள் அதிகரிப்பதற்கு பொறுப்பாகின்றன.

இப்பகுதியில் முக்கிய கழிவு அகற்றும் முறையான, கட்டுப்பாடற்ற குப்பைகள் கொட்டுதலும் வியாதிகளுக்கு பெரும் ஆதாரமாக உள்ளது.உதாரணமாக, மும்பையில், ஒட்டுமொத்த நகராட்சி திட கழிவுகளில் சுமார் 12% தெருக்களில் அல்லது வெற்றுஇடங்களில் வெளிப்படையாக எரிக்கப்படுகின்றன.

துரிதமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தீவிர தொழிற்சாலைமயமாக்கல் ஆகியவையும் உடல்நலமற்ற, மாசுபட்ட மற்றும் தீவிர கார்பன் வாழ்க்கை முறைகளை அதிகரித்துள்ளது.

உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ள வெப்பத்தால் மட்டும் கவலையாக இல்லை.மாறியுள்ள பூளோக மற்றும் பருவகால சூழ்நிலைகளின் காரணமாக, அது மக்களை, பல நூற்றாண்டுகளாக தங்களது முன்னோர்கள் வசித்து வந்த, தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி, வாழ்வுடமை, உணவு மற்றும்இருப்பிடம் தேட வைத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின்படி, உலகில் பதிவு செய்யப்படும் 4 மரணங்களில் ஏறக்குறைய 1 என்ற அளவில், சுமார் 12.6 மில்லியன் மரணங்கள், சுகாதாரமற்ற சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ளது.இதில் 8.2 மில்லியன் மரணங்கள், புற்றுநோய்கள், பக்கவாதங்கள், இருதய கோளாறுகள், கடுமையான சுவாச நோய்கள், போன்ற பரவக்கூடியதல்லாத நோய்களால் ஏற்பட்டுள்ளன.தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற பேச்சாளர்களே மற்றும் பார்வையாளர்களே, தற்போதைய பாதிப்புகள் குறித்துநாம் அனைவரும் சில முக்கிய பிரச்சினைகளை வெளிப்படுத்தி, தீர்வு காண வேண்டும் என விரும்புகிறேன்.

1. வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாமல், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உண்மையாக எடுத்துரைக்கும் புனிதமான  வளர்ச்சியை அளவிடும் முறையை உலகம் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரமா இது?

2. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் பிரச்சினையாக உள்ள விவகாரங்களில், நூற்றாண்டு எல்லைகளை கடந்து உலகளாவிய பொது மற்றும் உலக அரசாட்சியை நாம் கடைபிடிக்கலாமா?

3. மனிதகுலம் வெறும் வாரிசுகளாக மட்டுமல்லமல், பூமியின் அறங்காவலர்கள் என்ற பாத்திரத்தில் செயல்படக்கூடிய, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி நகர வேண்டிய நேரமா இது?

4. சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை உண்டாக்காமல் பொருளாதார வளர்ச்சியை பராமரிப்பதற்கான புதுமையான முறைகளை நாம் கண்டுபிடித்துள்ளோமா?

நாம் இத்தகைய கேள்விகளுக்கான விடையை கண்டுபிடித்து; துரிதமாக செயல்பட வேண்டும்.

பேரழிவு தாக்கும்வரை நாம் காத்திருக்கக்கூடாது.

உறுதியான செயலுடன் நமது அறிவு மற்றும் ஞானத்தை இணைக்க வேண்டும்.

நமது பாத்திரங்களை நாம் முடிவு செய்து, நமது இயற்கை வளத்தை கண்காணிக்கும் அறங்காவலர்களாக இருக்க வேண்டும்.

நாம் விழிப்புணர்வை அதிகரித்து, நமது அனைத்து பிரிவு மக்களையும் உணர்வுடன் ஈடுபட வைக்க வேண்டும்.

இம்மாநாட்டின் கூட்டப்பொருள் காலத்திற்கு ஏற்றவாறு உள்ளது.உங்களது பயனுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளதுடன், உங்களின் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இம்மாநாடு வெற்றிபெற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

ஜெய் ஹிந்த்!”

 

***



(Release ID: 1510012) Visitor Counter : 525


Read this release in: English