சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
திரு. தாவார்சந்த் கேலாட் தலைமையில் ‘நேரடியாக இறங்கி துப்புரவு செய்ய பணியில் அமர்த்துவதற்கான தடை’யை அமலாக்குவது குறித்துப் பரிசீலிக்க மத்திய கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது
Posted On:
14 NOV 2017 12:46PM by PIB Chennai
“நேரடியாக இறங்கி துப்புரவு செய்ய ஆட்களை அமர்த்துவதற்குத் தடைவிதிப்பது மற்றும் அவர்களது மறுவாழ்வு ஆகியவற்றுக்கான சட்டம் 2013” (சுருக்கமாக 2013ஆம் ஆண்டில் எம் எஸ் சட்டம்) அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்காக இதற்கான மத்திய கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அமைச்சர் திரு. தாவார்சந்த் கேலாட் தலைமையில் இன்று நடைபெற்றது. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே, அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லதா கிருஷ்ணா ராவ் மற்றும் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் தலைவர், துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய கமிஷனின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இக்குழுவின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநில/துணை நிலை மாநில நிர்வாகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் சமூக சேவகர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மிக முக்கியமான இந்த மத்தியச் சட்டம் 2013 செப்டெம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2014 டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது. பல்வேறு வகையான துப்புரவுப் பணிகளிலும் ஆட்களை நேரடியாக இறங்க அனுமதிப்பதை முழுமையாக அகற்றுவதையும், இத்தகைய நடவடிக்கைகளில் செயல்பட்டுவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிப்பதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் இத்தகைய செயல்பாட்டை முற்றிலுமாக அகற்றுவதில் அரசு தீவிரமாக உள்ளது. இதற்கென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அதன் முழுமையான பொருளில் அமல்படுத்த வேண்டுமெனவும் அது மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களை விரைவாகக் கண்டறிவதற்காக இது குறித்த ஆய்விற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென இக்கூட்டம் பரிந்துரைத்தது.
அழுகிப் போகாத கழிவுகளை நேரடியாக இறங்கி சுத்தம் செய்பவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களை துப்புரவாளர்கள் என பட்டியலிடுவதை உறுதிப்படுத்த இந்தியாவில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள், மற்றும் 2013ஆம் ஆண்டின் எம் எஸ் சட்டம் ஆகியவை குறித்த பிரச்சனைகளையும் இந்தப் பரிசீலனைக் கூட்டம் விவாதித்தது. நேரடியான பண உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கடனுக்கான மானிய உதவி ஆகியவற்றின் மூலம் இவ்வாறு கண்டறியப்பட்ட துப்புரவாளர்களின் மறுவாழ்வு வழங்கும் வகையில் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் இக்கூட்டம் விவாதித்தது.
துப்புரவாளர்களும் அவர்களை நம்பியிருப்போரும் தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கும் வகையில் இதன் மூலம் நீடித்த வகையில் வேலைவாய்ப்பைப் பெறவும் அல்லது தங்களுக்கே உரிய சுயவேலைவாய்ப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் உதவி செய்யும் வகையில் துப்புரவாளர்களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய கழகம் பல விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளது என்றும் இக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

* * * * *
(Release ID: 1509966)
Visitor Counter : 139