மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

இதுவரை மேற்கொண்டவற்றில் மிகப் பெரியதான தேசிய சாதனைகளுக்கான ஆய்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது தேசிய சாதனைகளுக்கான ஆய்வு இதுவரையில் உலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே மிகப் பெரியது

“மூன்றாவது நபரின் தரச்சான்றிதழின் கீழ் நடத்தப்பட்ட மிகவும் வெளிப்படையான, நம்பத்தகுந்த செயல்பாடாக தேசிய சாதனைகளுக்கான ஆய்வு அமைகிறது” : பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 13 NOV 2017 8:47PM by PIB Chennai

இதுவரையில் மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதான தேசிய அளவிலான மதிப்பீட்டுக்கான ஆய்வான தேசிய சாதனைகளுக்கான ஆய்வு உலகத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வுகளில் மிகப்பெரியதாகும். இந்த ஆய்வு இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மூன்றாவது நபரின் தரச்சான்றிதழின் கீழ் நடத்தப்பட்ட மிகவும் வெளிப்படையான, நம்பத்தகுந்த செயல்பாடாக தேசிய சாதனைகளுக்கான ஆய்வு அமைகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 3,5,8 ஆகிய வகுப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கான கருவிகள் 3வது மற்றும் 5வது வகுப்புகளுக்கு மொழி, கணிதம் ஆகியவை தொடர்பான 45 கேள்விகள் அடங்கிய பல்வகைப்பட்ட சோதனைப் புத்தகங்களைக் கொண்டும், 8வது வகுப்பிற்கு கணிதம், மொழி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவை தொடர்பான 60 கேள்விகள் அடங்கிய பல்வகைப்பட்ட சோதனைப் புத்தகங்களைக் கொண்டும் நடத்தப்பட்டது. திறமை அடிப்படையிலான இந்த சோதனைக்கான கேள்விகள் இந்திய அரசினால் கல்விக்கான உரிமைக்கான சட்டத்தில் சமீபத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் உருவாக்கப்பட்ட கற்பதின் பயன்களை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. இந்த சோதனை அம்சங்களோடு கூடவே மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் ஆகியவை குறித்த கேள்விகளும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன.

 

36 மாநிலங்கள் / யூனியன்பிரதேசங்களில் மொத்தம் 700 மாவட்டங்களில் உள்ள 1,10,000 பள்ளிகளில் உள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் அளவுகள் இதன் மூலம் மதிப்பிடப்பட்டன. நாட்டின் கற்றல் குறித்த இந்த மதிப்பீட்டை நடத்துவதற்காக அரசு கல்வி அமைப்பிற்கு வெளியே இருந்து பயிற்சி பெற்ற 1.75 லட்சம் கள ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வு நியாயமான வகையில் நடத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பார்வையாளர்கள், கல்வித் துறையிலிருந்து தேசிய அளவிலான, மாநில அளவிலான பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு வகையான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட நாளன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கண்காணிப்புக் குழு இந்த ஆய்வு செயல்படுத்தப்படுவதை பார்வையிட்டது.

 

இதற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளின் அடிப்படையில் மாவட்ட வாரியான கற்றல் குறித்த அறிக்கை அடங்கிய அட்டைகள் தயாரிக்கப்படும். அதைத் தொடர்ந்து பகுப்பாய்வு அறிக்கைகளும் தயாரிக்கப்படும். இந்தப் பகுப்பாய்வு ஒன்றுதிரட்டப்படாத, விரிவான கற்றல் மட்டங்களைப் பிரதிபலிப்பதாக அமையும். இந்தச் செயல்பாடு முழுவதும் உடனடியாகத் துவங்கி அடுத்த 3-5 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிடும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் அனைத்தையும் சென்றடையும் வகையில் வகுப்பறைகளில் தலையிடுவது குறித்த வடிவமைப்பை உருவாக்க இந்த ஆய்வின் முடிவுகள் பயன்படுத்தப்படும். கல்வி முறையில் திறம் குறித்துப் புரிந்து கொள்ளவும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவி செய்யும். வகுப்பறையிலிருந்து துவங்கி மாவட்ட, மாநில தேசிய அளவில் குழந்தைகளின் கல்வி கற்பதற்கான மட்டங்களை மேம்படுத்தவும், தர அளவிலான மேம்பாட்டைக் கொண்டு வரவும் கல்விக் கொள்கை, திட்டமிடல் மற்றும் அமல்படுத்தல் ஆகியவற்றுக்கு இந்த தேசிய மதிப்பீட்டு ஆய்வு உதவி செய்யும்.

 

*  *  *  *  *

 



(Release ID: 1509965) Visitor Counter : 64


Read this release in: English