உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உள்நாட்டு விமான போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் போலந்து இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 NOV 2017 10:20AM by PIB Chennai

உள்நாட்டு விமான போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியாவும் போலந்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாட்டு அரசுகளும் இதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகிறது, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு இருக்கும்.

இந்தியாவில் பிராந்திய விமான இணைப்பை உருவாக்கி மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு விமான போக்குவரத்து ஒத்துழைப்பின் மூலம் பரஸ்பர பயனை அங்கீகரிப்பது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும், இதுதவிர இருதரப்பும் சுற்றுச்சூழல் சோதனை அல்லது ஒப்புதல்கள், விமான ஊக்கிகள் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல்கள் விமான பராமரிப்பு வசதிகளுக்கான ஒப்புதல்கள், பராமரிப்பு பணியாளர் ஒப்புதல்கள் மற்றும் விமானக் குழு ஒப்புதல்கள் ஆகிய பரஸ்பர பயன்களை இருதரப்பு அங்கீகரிக்கும்.

பரஸ்பர ஒத்துழைப்புக்கு வசதியேற்படுத்திக் கொடுக்கவும் மேம்படுத்தவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள முக்கியப் பகுதிகள் வருமாறு:

அ, இந்தியா மற்றும் போலந்து இடையே ஒத்துழைப்பை கடுமையாக பாதிக்கக்கூடிய சட்ட மற்றும் நடைமுறை விவகாரங்கள் இருப்பின் அவற்றை ஆய்வு செய்து உள்நாட்டு விமான சந்தையில் ஆதரவு

ஆ வான் வழி பாதுகாப்பை விரிவுபடுத்தும்  வகையில் விமான வரைமுறைகள், பிராந்திய விமான செயல்பாடுகள், விமான தரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு தரம் தொடர்பான தகவல்களை இரு அமைச்சகங்கள் மற்றும் விமான போக்குவரத்து ஆணையங்கள் தகவல் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் அல்லது

இ. இணைப்பு அல்லது கூட்டு உருவாக்கம், நிறுவன மற்றும்/அல்லது விமான பாதுகாப்புக்கான பயிற்சி திட்டங்களை நடத்துவது அதில் பாதுகாப்பு மீறல், விமானத் தரம் விமான சேவை, உரிமம், சட்டம் மற்றும் அமலாக்கம் மற்றும்/அல்லது

ஈ.  விமான போக்குவரத்து தொடர்பான கூட்டு ஆலோசனைகள், கூட்டு நிறுவனம் மற்றும்/அல்லது மாநாடுகள் மற்றும் தொழில் கருத்தரங்குகள் நடத்துவது, பயிலரங்குகள், உரைகள் மற்றும் இத்தகைய இதர செயல்பாடுகள் நடத்துவதும் விமான பாதுகாப்பு குறித்த இவற்றில் இரு தரப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்பது மற்றும்/அல்லது

உ. தகவல் பரிமாற்றத்திற்கான வழக்கமான பேச்சுகள் அல்லது கூட்டங்கள், அறிவாற்றல், நிபுணத்துவம் மற்றும் அனுபவங்கள் அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய உள்நாட்டு விமான சேவை பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர விருப்பம் கொண்ட மேம்பாடுகளை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்வது

ஊ. பரஸ்பர ஆர்வம் கொண்ட விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு விருப்பம் தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் ஒத்துழைப்பு

எ. மேற்கூறப்பட்ட பகுதிகள் ஒத்துழைப்பு தொடர்பான இதர விவகாரங்கள்

*********



(Release ID: 1509927) Visitor Counter : 143


Read this release in: English