மத்திய அமைச்சரவை

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பின்புலம் உள்ள தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சங்களின் ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்திற்கு (டி.சி.ஐ.எல்.) மாற்றுப் பணியில் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது

Posted On: 16 NOV 2017 3:56PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பின்புலம் உள்ள தொலைத்தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சங்களின் ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்திற்கு (டி.சி.ஐ.எல்.) மாற்றுப் பணியில் அனுப்ப கீழ்க்கண்ட விவரங்களின்படி தனது ஒப்புதலை வழங்கியது:

அ) இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்தில் (டி.சி.ஐ.எல்.) வாரிய அளவிலான பதவிகளுக்கு கீழேயுள்ள மொத்த பதவிகளில் அதிகபட்சமாக 10 சதவீத பதவிகளில், உடனடியாக முழுமையாக நிறுவனத்தில் இணைத்துக் கொள்வது என்ற நிபந்தனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையில் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்ட வகையிலும்(இதற்கு முந்தைய அமைச்சரவை ஒப்புதல் 30.09.2016 வரை வழங்கப்பட்டிருந்த நிலையில்) 01.102016 முதல் இந்த கருத்துரைக்கு ஒப்புதல் வழங்கப்படும் வரையிலுமான இடைக்காலத்திற்கும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்ட ’ஏ’ பிரிவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க அனுமதிப்பது; மற்றும்

ஆ) இத்தனை எண்ணிக்கையிலான பதவிகளை தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த ‘ஏ’பிரிவு அதிகாரிகளை மாற்றுப் பணியின் மூலம் நிரப்புவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் குழுமத்தை அனுமதிப்பது மற்றும்

இ) பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையின் அலுவலக குறிப்பாணை எண். 18(6)/2001-ஜிஎம்-ஜிஎல்-77 தேதி 28.12.2005-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி எதிர்காலத்தில் வாரிய அளவிற்குக் கீழுள்ள பதவிகளுக்கு விலக்கு அளிக்க அனுமதிப்பது; இதன் மூலம் இத்தகைய கருத்துருக்கள் அமைச்சரவையின் முன்பாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்காது.

பின்னணி:

டி.சி.ஐ.எல். ஐஎஸ்ஓ-9001:2008 மற்றும் ஐஎஸ்ஓ: 2008 மற்றும் 14001:2004 சான்றிதழ் அளிக்கப்பட்ட அட்டவணை ‘ஏ’பிரிவைச்ச் சேர்ந்த மினி ரத்னா வகையைச் சேர்ந்த முதல் தர பொதுத்துறை நிறுவனம் ஆகும். 1978ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட நோக்கங்களுடன் இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட டி.சி.ஐ.எல். நிறுவனமானது தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வலுவான அடித்தளம் கொண்ட முன்னணி தொலைத் தொடர்பு ஆலோசனை மற்றும் பொறியியல் நிறுவனம் ஆகும்:-

அ) தொலைத்தொடர்பின் அனைத்துப் பிரிவுகளிலும் உலக அளவில் இந்திய நிபுணத்துவத்தையும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் வழங்குவது;

ஆ) முறையான விற்பனை திட்டங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளிலும் இந்தியச் சந்தைகளிலும் தனது செயல்பாட்டை நீடித்து நிலைக்கச் செய்வது, விரிவுபடுத்து, சிறந்து விளங்குவது;

இ) தொடர்ந்து மிகவும் நவீனமான தொழில்நுட்பத்தை பெறுவது;

நூறு சதவீதம் இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான டி.சி.ஐ.எல். தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் திட்டங்களை அமலாக்கியுள்ள ஒரு நிறுவனமாகும். கருத்தாக்கத்திலிருந்து முடிவு வரையில் திட்டங்களை நிறைவேற்றுவதை ஆலோசனையாகவும், ஆயத்த தயாரிப்பு முறையிலும் செய்து வருகிறது. 2017 மார்ச் 31ஆம் தேதிய நிலவரப்படி இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 60 கோடி ஆகும். இதுவரையில் செலுத்தப்பட்டுள்ள மூலதனத்தின் அளவு ரூ. 59.20 கோடி ஆகும்.

டி.சி.ஐ.எல். 48 நாடுகளில் அகண்ட ஆப்ரிக்கா இணைய தள வலைப்பின்னல் என்ற மிகவும் பெருமைப்படத்தக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது அடிப்படையில் தொலைத்தொடர்பு மூலமான கல்வி, மருத்துவம், ஆப்ரிக்க ஒன்றிய உறுப்பினர் நாடுகளுக்கு இடையே அகண்ட இணையதள மரபுத் தொடர்பினை ஒளியிழை மூலமாகவும், 2009ஆம் ஆண்டிலிருந்து விண்கலத் தொடர்பின் மூலமாகவும் வழங்கி வரும் திட்டம் ஆகும். இத்திட்டம் குறிப்பிட்ட கால அளவில் முடிக்க வேண்டிய ஒன்று என்பதோடு, 2021 ஜூலை வரையில் முழுமையான செயல்பாடு மற்றும் பராமரிப்பு பொறுப்புகளையும் கொண்டதாகும். இத்தகைய வெளிநாட்டு திட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு குறித்த பல்வேறு திட்டங்களையும் டி.சி.ஐ.எல். நிறைவேற்றி வருகிறது. பாதுகாப்புத் துறைக்கெனவே தேசிய தொலைதூர பின்னணி வலைப்பின்னல் மற்றும் இந்திய கடற்படைக்கு என தேசிய கோப்பு முறை ஆகியவற்றுக்கான கொள்முதல், வழங்குதல், தோண்டுதல், நிறுவுதல், சோதித்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை முழுப்பொறுப்பேற்று நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் ஒளியிழை தரைவழி கம்பி ஏற்பாடு, ஒடிசாவில் டிஓபி கிராமப்புற தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப (கிராமப்புற நெடுஞ்சாலை) திட்டம், 500 பள்ளிகளில் தகவல்- தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதி, உத்திரப் பிரதேசத்தில் 1500 பள்ளிகளில் தகவல்-தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இணைய தள அடிப்படையிலான சேவைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. பிஎஸ் என் எல் நிறுவனத்திற்காக தேசிய ஒளியிழை வலைப்பின்னல் திட்டத்திற்கு வன்பொருள், மென்பொருள் ஆகியவற்றை வழங்குவதற்கான திட்ட மேலாண்மையையும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மட்டுமின்றி வரவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் திட்டங்களை நிறைவேற்றவும் அனுபவமிக்க, திறமையான தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிண்ணனி கொண்ட மூத்த அதிகாரிகள் டி.சி.ஐ.எல். நிறுவனத்திற்குத் தேவைப்படுகிறது. அது மேற்கொள்ளும் திட்டங்களின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தேவைப்படுகிறது. இத்தகைய திறமையான ஆட்களை பதிலி முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் டி.சி.ஐ.எல். தேசிய, சர்வதேசிய அளவிலான சந்தையில் தொடர்ந்து போட்டித்திறன் மிக்கதாக நீடிக்க முடியும். ஏனெனில் பதிலி முறையில் நியமிக்கப்படுபவர்களை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கால அவகாசத்தில் வெளிச்சந்தையில் இருந்து இத்தகைய திறமைமிக்க ஆட்களை சிக்கனமான வகையில் பெறுவது டி.சி.ஐ.எல். நிறுவனத்திற்கு மிகவும் சிரமமாகவே இருக்கும். மேலும் வெளிச் சந்தையில் ஆட்களை டி.சி.ஐ.எல். நியமிக்குமானால், அவர்களின் சேவை தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே, அதாவது திட்ட காலத்திற்கு மட்டுமே பதிலி முறையில் டி.சி.ஐ.எல். நிறுவனத்துடன் இருக்கும் பதிலி நிபுணர்களை ஒப்பிடும்போது பொதுச் சந்தையின் மூலம் நியமிக்கப்படுபவர்கள் டி.சி.ஐ.எல். நிறுவனத்திற்கு நிரந்தரச் சுமையாகவே இருப்பார்கள்.

எனவேதான் பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையில் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்ட வகையிலும்(இதற்கு முந்தைய அமைச்சரவை ஒப்புதல் 30.09.2016 வரை வழங்கப்பட்டிருந்த நிலையில்) 01.102016 முதல் இந்த கருத்துரைக்கு ஒப்புதல் வழங்கப்படும் வரையிலுமான இடைக்காலத்திற்கும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்ட ’ஏ’ பிரிவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத் துறை மற்றும் இதர அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க அனுமதிப்பது; வாரிய அளவிலான பதவிகளுக்கு கீழேயுள்ள மொத்த பதவிகளில் அதிகபட்சமாக 10 சதவீத பதவிகளில், உடனடியாக முழுமையாக நிறுவனத்தில் இணைத்துக் கொள்வது என்ற நிபந்தனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையின் அலுவலக குறிப்பாணை எண். 18(6)/2001-ஜிஎம்-ஜிஎல்-77 தேதி 28.12.2005-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி எதிர்காலத்தில் வாரிய அளவிற்குக் கீழுள்ள பதவிகளுக்கு விலக்கு அளிக்க அனுமதிப்பது என அமைச்சரவை அனுமதி அளித்தது.
 

****



(Release ID: 1509914) Visitor Counter : 148


Read this release in: English