குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 57-வது பகுதி பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
Posted On:
14 NOV 2017 6:40PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 57-வது பகுதி பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் சவாலான வேகமாக மாறிவரும் சர்வதேச சூழ்நிலையில் நாம் வாழ்ந்துவருகிறோம். பாதுகாப்பு என்பதின் அர்த்தமே நம் கண் முன்னிலையில் மாறி வருகிறது. இனி அது பிராந்திய ஒருமைப்பாட்டை குறிப்பது அல்ல. இன்று, பாதுகாப்பு என்பது பொருளாதார மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, மேலும் உணவு, சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றையும் குறிக்கிறது. எதிர்காலத்தில் அணு ஆயுத பாதுகாப்பிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இணைய ஒருமைப்பாடு மற்றும் தரவு பாதுகாப்பிற்கும் அளிக்கப்படும்.
இந்த அனைத்து பிரிவுகளுக்கு தனிச்சிறப்பு மற்றும் பகுப்பாய்வு அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆனால், அதே சமயம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும். நம் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், அவர் தொடர்ந்து கற்று தங்களின் அறிவினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்,
இந்தியா அதை சுற்றியுள்ள நாடுகள் ஏன் ஆசிய கண்டமே பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை கொண்டது. மேலும், இந்த அச்சுறுத்தல்கள் உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத் தலைவர் கூறினார். பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம் பொதுவான சவாலாக இருக்கின்றன.
உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம் புரட்சியினால் 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக ஆசிய கண்டம் உருவாகியுள்ளது. வரும் ஆண்டுகளின் இந்த பொருளாதார வளர்ச்சியை பாதுகாப்பதும் அதனை சீர்குலைக்கும் முயற்ச்சிகளை எதிர்கொள்வதுமே முக்கிய பணியாக அமையும். கடல் சார் துறையில் இருந்து கணினி வரை அனைத்து துறைகளிலும் அச்சுறுத்தல்கள் வரும்.
இதற்காகவே இந்தியாவிலும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பங்கேற்கும் பங்குதார நாடுகளிலும் அதிக உத்திகளை கையாளும் கலாச்சராத்தை ஊக்குவிப்பது முக்கியமாகும். வரும் ஆண்டுகளில் பாதுகாப்பிற்கான பலதரப்பு அணுகுமுறையை புரிந்து கொள்ளும் தன்மையை வலிமைபடுத்த தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பங்களிப்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 1509743)
Visitor Counter : 118