மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

முதல் முறையாக 300 இணைய பாதுகாப்பு நிபுணர்கள் ஆசியா பசிபிக் கணினி அவசர உதவி குழு மாநாட்டில் பங்கேற்பு

Posted On: 14 NOV 2017 1:50PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர உதவி குழு புது தில்லியில் ஆசியா பசிபிக் கணினி அவசர உதவி குழு (அப்செர்ட்) மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு 2017 நவம்பர் 12 முதல் 15 வரை நடைபெறும். இது அப்செர்டின் 15 வது மாநாடு. ஆனால் இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்கும்.

“டிஜிட்டல் பொருளாதாரத்தில் நம்பிக்கையை உருவாக்குதல்” எனும் கருப்பொருளை கொண்டு இந்த மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டின் முதல் மூன்று நாட்கள் நவம்பர் 12 முதல் 14 வரை வருடாந்திர பொது கூட்டம் மற்றும் அப்செர்டின் மற்ற கூட்டங்கள் நடைபெறும். தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் அரசு பங்குதாரர்கள் பங்குபெறும் கூட்டம் நவம்பர் 15 ஆம் தேதி புது தில்லியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் நடைபெறும்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் இந்த மாநாட்டினை துவக்கி வைப்பார். ஆசிய பசிபிக் பகுதி, அமெரிக்க, ஐரோப்பா நாடுகளை சேர்ந்த தொழில் துறைகள், கல்வி நிறுவனங்கள், அரசாங்கங்கள், ஊடங்களில் இருந்து சுமார் 300 இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர்.

     வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரங்களின் நம்பிக்கை ஏற்படுத்தவும், கைபேசி மற்றும் சமூக ஊடங்களின் இணைய பாதுகாப்பு முறையில் உள்ள சிறந்த வழிமுறைகளை ஏற்படுத்த கணினி அவசர உதவி குழுவின் உக்திகள், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்ற சமகால தலைப்புகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.


 



(Release ID: 1509729) Visitor Counter : 134


Read this release in: English