உள்துறை அமைச்சகம்

நிதித்துறையில் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு

Posted On: 13 NOV 2017 5:05PM by PIB Chennai

நிதித்துறை மோசடிகள் குறிப்பாக மின்னணு அட்டைகள் மற்றும் மின்னணு பணப்பை ஆகியவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு சென்ற செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றத்தைக் குறித்து இன்று புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ் நாத் சிங் ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகள் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

     செப்டம்பர் மாத கூட்டத்தின் முடிவுகளை அடுத்து அம்மாதத்தின் 28 –ம் தேதி அன்று தொலைபேசி மோசடிகள் குறித்த அமைச்சகங்களுக்கிடையேயான குழு அமைக்கப்பட்டது என்ற விவரம் மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரை தலைவராகவும் தொடர்புடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நிதி சேவைகள் துறை, தொலைத்தொடர்புத் துறை, ரிசர்வ் வங்கி, சட்ட அமலாக்க முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும்  கொண்ட இக்குழுவின் 24.10.2017 தேதியில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் தொலைப்பேசி மோசடியின் இயல்புகள், அவற்றை தடுப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

     கீழ்கண்ட பல்வேறு உத்தேச நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

  • மின்னணு பணப்பைகள் தொடர்பான தொலைப்பேசி மோசடிகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதை தடுக்க மோசடிக்காரர்களை அடையாளம் காண்பதில் தில்லி ஐஐடி சேவைகளை பயன்படுத்திய பிக் டேட்டா ஆய்வு
  • வங்கிகள், மின்னணு பணப்பை நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து குறுந்தகவல் / மின்னஞ்சல் மூலம் கூடுதல் எச்சரிக்கை செய்திகள் அனுப்புதல். பரிவர்த்தனைகளால் பயன்பெற்றவர்களின் பெயர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் நடைமுறையும் ஒரு பகுதியாக இந்த தகவல் சேவை மேற்கொள்ளபட வேண்டும் இதனால் பாதிக்கப்பட்டோர் சரிபார்த்து கொண்டு பயனாளியை கண்டுபிடிப்பது எளிதாகும்.
  • வங்கிகள், மின்னணு பணப்பை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிரான குறிப்பிட்ட மோசடிகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆன்லைனில் வெளியிடுவது. இந்த மோசடிகள் குறித்த புலனாய்வு விவரம் இணைக்கபபட்டால் வாடிக்கையாளர்கள் மின்னணு பணப்பை சேவைகளை தேர்வு செய்யும் போது எச்சரிக்கையுடன் செய்ய இயலும்
  • அரசு துறைகள், அரசு முகமைகள், தனியார் முகமைகள் ஆகியவற்றிற்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக பெரிய அளவு தகவல் ஆவணக் காப்பகம் அமைக்கும் சாத்தியக் கூறுகள், சட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
  • காப்பீட்டுக் கட்டணக் குறைப்பு; முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட நிதி ஆவணங்கள் வழங்கும் அனைத்து அமைப்புகளுக்குமான வாடிக்கையாளர் அறிவோம் படிவத்தைக் கட்டாயமாக்குதல்; கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் போன்றவற்றில் தானகவே சர்வதேச பரிவர்த்தனை வசதி ஏற்படுவதை தவிர்த்தல்

 

     ஜார்க்கன்ட் காவல் துறையினர் தொலைபேசி மூலமான மோசடிகளை மேற்கொள்வோரை கண்டுபிடித்து இத்தகைய குற்றங்கள் நடைபெறுவதை கணிசமாக குறைத்திருப்பதைப் உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் அமைச்சகங்களுக்கிடையிலான தொலைபேசி மோசடி குழுவினர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் கலந்து பேசி முடிவெடுக்குமாறு உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

*****


(Release ID: 1509593) Visitor Counter : 190


Read this release in: English