குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பூடானின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது: பூடான் அரசரை துணை ஜனாதிபதி சந்தித்தார்
प्रविष्टि तिथि:
02 NOV 2017 4:38PM by PIB Chennai
பூடானின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கவும், அதன் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கான ஆதரவையும் அளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக துணை ஜனாதிபதி திரு.எம்.வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார். பூட்டான் அரசர் திரு. ஜிக்மே கேசர் நம்க்யல் வாங்சுக் உடன் அவர் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியின்போது இந்தியா மற்றும் பூட்டானை சேர்ந்த மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகள் இருதரப்பு உறவுகளை சிறப்பாக பகிர்ந்துக் கொண்டுள்ளதாகவும், இவை உயரிய மற்றும் சிறப்பானதாகும் என்று துணை ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் அவர், நமது வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் நம்மை இயற்கையான நண்பர்களாகவும், பங்குதாரர்களாகவும் ஆக்கியுள்ளன என்றார். இந்த வருடத்தில் தாம் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது வாழ்த்துக் கடிதம் அனுப்பியதற்காக அரசருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சிறப்புமிக்க கலாச்சாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் அதே நேரத்தில், பூடான் அடைந்துள்ள துரிதமான வளர்ச்சியை கண்டு இந்தியா மகிழ்ச்சியடைவதாக துணை ஜனாதிபதி தெரிவித்தார். நமது இரு நாடுகளுக்கான உறவுகளை வழிகாட்டும் வகையிலான ட்ரூக் கைல்போஸ் (அரசர்கள்)-ன் பார்வையை அரசும், இந்திய மக்களும் பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவர், பூடான் அரசர்கள் மற்றும் இந்திய தலைவர்களின் அறிவு மற்றும் முன்நோக்கிய பார்வையின் மூலம், இந்திய-பூட்டான் உறவுகள் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்
பூடானுடன் இந்தியா தனது அறிவு, அனுபவம் மற்றும் ஆற்றல்களை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றி வருவதாக துணை ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் அவர், நமது வளர்ச்சிக்கான கூட்டுறவு அரசு மற்றம் பூட்டான் மக்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னுரிமைகளின் வழிகாட்டுதல்களின்படி அமைந்துள்ளது என்றார். பூடானின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கவும், அதன் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கான ஆதரவையும் அளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பூட்டானுடன் தற்போதுள்ள நீர்-மின்சக்தி கூட்டுறவை இந்தியா தொடர்ந்து நிலைபெற செய்திட உறுதியாக உள்ளது என துணை ஜனாதிபதி தெரிவித்தார். குறைந்த செலவில் நீர்-மின்சக்தி திட்டங்களை குறித்த காலத்திற்குள் செயல்படுத்துவது இரு அரசுகளுக்கு இன்றியமையாததாகும். இது நமது இரு தரப்பு கூட்டுறவில் முதன்மையான துறையாக உள்ளதுடன், அதிக கவனத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. அண்டையில் உள்ள மற்றவர்கள் காணும்வண்ணம், இதனை இரு தரப்பு கூட்டுறவின் மாதிரியாக உருவாக்கிட நாம் எல்லாவற்றையும் செய்திட வேண்டும்.
இந்தியா மற்றும் பூட்டானின் பாதுகாப்பு அம்சங்கள் பிரிக்க இயலாதது, பின்னப்பட்டது மற்றும் இருதரப்பிற்குமானது என துணை ஜனாதிபதி கூறினார். மேலும் அவர், இருதரப்பிற்கு பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பூட்டானுடன் நெருங்கிய உறவை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவித்தார்.
*****
(रिलीज़ आईडी: 1509587)
आगंतुक पटल : 430
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English