குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கூகிள் குருவிற்கு மாற்றாகாது : குடியரசுத் துணை தலைவர்

கலிங்கா தொழிற்சாலை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 13-வது வருடாந்திர பட்டமளிப்பு விழா உரையாற்றினார்

Posted On: 11 NOV 2017 5:00PM by PIB Chennai

கூகிள் என்றுமே குருவிற்கு மாற்றாக அமையாது என்று குடியரசுத் துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அவர் இன்று ஓடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழிற்சாலை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 13-வது வருடாந்திர பட்டமளிப்பு விழா உரையாற்றினார். ஓடிஸா மாநில ஆளுநர் திரு. எஸ். சி. சமீர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். 

வகுப்பறைகள், விளையாட்டு களங்கள், வீடு, இணைய தளம், ஊடகங்கள் மற்றும் தினசரி நம்மைச் சுற்றியுள்ள மக்களுடனான பலதரப்பு தொடர்பு மூலம் நாம் கல்வி பயில்கிறோம் என்று குடியரசுத் துணை தலைவர் கூறினார். மேலும், நமது அனைத்து முறையான, முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொடர்புகள் நம்மை கல்வி பயின்றவர்களாக மாற்றுகிறது. இன்று அறிவுசார் பொருளாதாரத்தில் புதிய திறன்களை கற்றல் மற்றும் புதிய அறிவைப் பெறுதல் மிக அவசியமாகும்.  

நமது திறமையை மேம்படுத்துதல், நமது அறிவினை மேம்படுத்துதல் மற்றும் வேகமாக மாறிவரும் பணிச்சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிகொள்ளுதல் ஆகியவையே தற்போதய காலத்தின் தேவையாக உள்ளது.

குறுகிய வட்டத்தை தாண்டி சிந்திக்க வேண்டும் என்றும் உண்மை விவரங்களை சேகரித்தல் மற்றும் இணைத்தலை செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.  முன்பு எப்போதும் இல்லாதது போல் இப்போது எளிதாக கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஞானம் போன்ற அறிய வளங்களை பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று கூறினார். மேலும், மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் தங்களின் முழு முயற்சியையும் அளித்து சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

     புது புது யோசனைகளை அணுகுதல், அதற்கேற்றார் போல் மாறுதல், அதனை பயன்படுத்துதல் ஆகியவே இந்தியாவின் பெரும் பலம் என்று கூறிய குடியரசுத் துணை தலைவர் இந்தியா மீதான உலகத்தின் இந்த பார்வையை வரவேற்று அதனை புதுப்பிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதுவே, நமது பாரத மாதாவின் முகத்தின் நலிவடைந்த பொலிவை மீட்டு வளர்ச்சி அடைவதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்.

***


(Release ID: 1509562) Visitor Counter : 179


Read this release in: English