சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

திவ்யாஞன் சகஷ்ஹாகித்தாரன் -2017 குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ தாவர்சந்த் கெலாட் விருதுகளை வழங்கினார்.

உணர்வு பூர்வ படைப்பாற்றல், குறும்படங்கள் திரையிடுதல் அணுகல், திவ்யாஞன் சகஷ்ஹாகித்தாரன்-

Posted On: 09 NOV 2017 4:08PM by PIB Chennai

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்  திரைபபடத்துறை இயக்குனரகத்துடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகளின்  அதிகாரம் அளித்தல் துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில், திவ்யாஞன் சகஷ்ஹாகித்தாரன் -2017 குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் மத்திய சமூக நீதி மற்றும்  அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஸ்ரீமதி லதா கிருஷணா ராவும் பங்கேற்றார்.   விருது வழங்கும் விழாவில் விருதுக்குரிய திரைப்படங்கள் முழுமையாக திரையிடப்பட்டன. விருதுபெற்ற படைப்பாளர்களுக்கு அமைச்சர் வாழ்த்துக்களை கூறினார். அத்துடன்  விழாவினை நடத்திய மத்திய சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறைக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.

சிறந்த குறும்படம் அசானுக்குரிய விருது சுயாஷ் ஷிண்டேவுக்கும், அச்சலா படத்திற்குரிய விருது அபய் பஞ்சாபிக்கும்தும் மெயின் அர் ஹகாம் சாப் படத்திற்காக அமித் சங்கருக்கும்ஐ நோ சைன் லாங்குவேஜ் படத்திற்காக பி.டி. பன்ஷ்கருக்கும் வழங்கப்பட்டதுநரேந்திர ஜோஷியின் சுகன்மயா பாரத் மற்றும் ஜோஷ்னா புத்ரனின் ஜிப்ரா கிராசிங் படம் சிறந்த ஆவணப்படம் மற்றும்  சிறந்த தொலைக்காட்சி படத்திற்கான விருதில் முதல் இடங்களை பிடித்தன.

இன்றைய நவீன உலகில்  கூட மாற்றுத்திறனாளிகளின் படைப்புத்திறமையை பார்க்கும் முன்பாக அவர்களின் ஊனத்தை பார்க்கின்ற மனப்போக்குத்தான் உள்ளதுஇன்றைய காலத்தில் கூட மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளை பெறுவதற்காகவும், பாதுகாப்பிற்காகவும், அணுகுமுறைசுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் போன்றவற்றிற்காகவும்  பெரும் போராட்டத்திற்கு  ஆளாக நேரிடுகிறது. ஊனம் என்பது ஒரு திறமை குறைவு கிடையாது என்பதுதான் இந்த குறும்பட, ஆவணப்பட  படைப்பாளிகளின் தனிப்பட்ட அறைகூவல் என்பது மத்திய அதிகாரம் அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இங்கு நடைபெறும் குறும்பட போட்டி திவ்யாஞன் சகஷ்ஹாகித்தாரன் -2017 உணர்த்துகிறது.

அணுகத்தக்க இந்தியா பிரச்சாரத்தல், அங்கீகாரத்திற்கான தடையில்லா சுற்றுச்சூழலை உருவாக்குதல், போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல், தகவல் தொடர்பு முறைகள் ஆகிவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி 2015ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

சமூகத்தில் உணர்வுத்தன்மை மற்றும் விழிப்புணர்வு குறைபாடு என்பதை கண்டறிந்து நீக்குவதுதான் இந்த பிரசாரத்தின் பிரதான நோக்கம்இதற்காகத்தான் மத்திய அதிகாரம் அளித்தல் மற்றும் திரைப்படத்துறை இயக்குனரகம் திவ்யாஞன் சகஷ்ஹாகித்தாரன் குறும்பட போட்டிகளை தொடங்கியது. இதில் நாடுமுழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கலாம்.  இந்த போட்டியில் பங்கேற்கும் குறும்படங்கள் ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி படங்கள் யாவும் அணுகல் இந்தியா பிரச்சாரத்தின் பிரதான நோக்கத்தின் அடிப்படையிலானது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் திறமை,. நிதி  தனி நபர் ஊக்குவிப்பு போன்றவற்றையும் சார்ந்தது.

திரைப்படம் மற்றும் ஊடகத்துறைகளை சேர்ந்த பிரபலங்களான அபர்ணா சன்யல்கிரிஷ் நெந்து போஷ், நிலா மதாப் பாண்டா, பால கிருஷ்ணன் திவாகர், ஆகியோர் இந்த போட்டிக்கான நடுவர்களாக இருந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த படங்களை தேர்வு செய்கிறார்கள்இந்த நடுவர்கள் குழுவில் அரசு துறை சார்பில் கே.வி.எஸ். ராவ் இடம்பெற்றுள்ளார்.

===========



(Release ID: 1509440) Visitor Counter : 91


Read this release in: English