கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கடல்சார் பொருளாதாரம் இந்தியாவின் வளர்ச்சியில் கிரியா ஊக்கி- நிதின் கட்கரி

பெருந்துறைமுகங்களின் வளர்ச்சி ஏப்ரல் முதல் அக்டோபர் 2017 வரையிலான காலகட்டத்தில் 3,27 சதவீதம் என்ற சாதகநிலை

Posted On: 09 NOV 2017 3:52PM by PIB Chennai

மத்திய கப்பல், சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலைகள்  நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை அமைச்சர் நிதின்கட்கரி அனைத்து துறைமுகங்களின் செயல்பாடு குறித்து கோவாவில் கடந்தவாரம் ஆலோசனை நடத்தினார்அரசு தனியார் பங்குதாரர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பங்களிப்பாளர்கள், துறைமுக பயனாளர்கள், மற்றும் இதர சேவை அளிக்கும் தனியார் நிறுவனத்தார் ஆகியோருடன் அமைச்சர் கலந்தாய்வு செயதார். அப்போது பேசிய கட்கரி, பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை படி நீல (கடல்சார்) பொருளாதாரம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கிறது என்றும்http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i201711903.jpg இதில் துறைமுகங்களின் செயல்பாடும் முக்கியத்துவமானது என்றும் கூறினார்.

 

 

 

 

இந்த துறைசார்ந்த தொழில்களுக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த  ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதாவது புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் திறமையை அதிகப்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட்டதுஅனைத்து அதிகாரிகள் மற்றும் பங்களிப்பாளர்கள் துறைசார்ந்த விஷயங்களை பரிமாறிக்கொள்ளவும் இந்த கூட்டம் ஒரு மேடையாக அமைந்தது. மேலும் வழக்கமான இறுக்கமான நிலையுடன் கூடிய துறைசார்ந்த அணுகுமுறைகள் மற்றும் துறைசார்ந்த முடிவுகளை எடுப்பதில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவும் இது உதவும்கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும்  துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஆகியவை இந்த அமைச்சகத்தின் பிரதான இலக்காக உள்ளது. அமைச்சர் கட்கரி அண்மையில்  சென்னையில் இருந்து  கப்பல்மூலம் பங்களாதேஷ் நாட்டிற்கு லாரிகளை  ஏற்றுமதி செய்யும் சரக்கு போக்குவரத்து திட்டத்தினையும், விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு தாதுவை கப்பல் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.

முக்கிய துறைமுகங்களில் ஒட்டுமொத்த போக்குவரத்து வளர்ச்சி:

பெருந்துறைமுகங்களின் வளர்ச்சி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 3.27 சதவீதம் என்ற சாதக நிலையை எட்டி உள்ளது. அத்துடன் 383 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் இந்த அளவு 371 மில்லியன் டன்களாக இருந்தது.

கொல்கத்தா, பாரதிப், சென்னை, கொச்சி, புது மங்களுர், மும்பை, ஜெ.என்.பி.டி., மற்றும் கண்ட்லா ஆகிய எட்டு துறைமுகங்கள்  2017 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்தில்  சாதகமான வளர்ச்சி நிலையை எட்டி உள்ளது.

 

                http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i201711904.jpg

 

பெருந்துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து கையாளுமை.

அதிபட்ச வளர்ச்சியாக கொச்சி துறைமுகம் 17.66 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதுகொல்கத்தா அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. பாரதிப் துறைமுகம் 12 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கொச்சி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு  பி..எல்.(பெட்ரோலியபொருட்கள்) போக்குவரத்து (24.56%)  கண்டெய்னர் (சரக்கு பெட்டகங்கள்) போக்குவரத்து (11.12%) அதிகரித்ததுதான் காரணம்.  கொல்கத்தா துறைமுகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 12.39 சதவீதம் என்ற சாதகமான நிலையில் உள்ளதுகொல்கத்தா கப்பல்கட்டுமான அமைப்பு ( கே.டி.எஸ்.) 3.80 சதவீதம் என்ற போக்குவரத்து வளர்ச்சி இலக்கை அடைந்துள்ளதுஹால்தியா கப்பல் கட்டுமான துறை அமைப்பு 16. 66 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 

                 

                   http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i201711905.jpg

 

ஏப்ரல் முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில்  கண்ட்லா  துறைமுகம் அதிகபட்ச அளவு (சரக்கு) போக்குவரத்தை அதாவது 63.13 மில்லியன்  டன் அளவிற்கு கையாண்டுள்ளது. (16.49 சதவீத பங்களிப்பு) இதைத்தொடர்ந்து பாரதீப் துறைமுகம் 55.78 மில்லியன் டன்னையும், (14.57 சதவீத பங்களிப்பு) ஜெ.என்.பி.டி., துறைமுகம் 37.90 மில்லியன் டன்னையும் (9,33 சதவீத பங்களிப்பு) மும்பை 36.72 மில்லியன் டன்னையும்,  (9,59 சதவீத பங்களிப்பு) விசாகப்பட்டினம் 35.74 மில்லியன் டன்னையும் (9,33 சதவீத பங்களிப்பு) கொண்டுள்ளது. ஆக இந்த ஐந்து  பெருந்துறைமுகங்களும் மொத்த துறைமுக போக்குவரத்தில் 60 சதவீதத்தினை கையாண்டுள்ளது.

2017 அக்டோபரில் பொருட்கள் வாரியான பங்களிப்பு சதவீதம்

                  http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i201711906.jpg                      

பொருட்கள் வாரியான சரக்கு போக்குவரத்தில் பெட்ரோலியம், எண்ணெய் சார்ந்த பி..எல். அதிகபட்ச பங்களிப்பை அதாவது 34.07 சதவீதத்தினை கொண்டுள்ளதுசரக்கு பெட்டக போக்குவரத்து (20,01 சதவீதத்துடன்) அடுத்த இடத்திலும், அனல் மற்றும் நீராவி பயன்பாட்டு நிலக்கரி  (12.81 சதவீதத்துடன்) அடுத்த இடத்திலும்சமையல் மற்றும் இதர பயன்பாட்டு நிலக்கரி (7,5%) இரும்பு தாது மற்றும் துகள்கள் (6,61%) ,இதர திரவ பொருட்கள் (4,30%) முழுமையடைந்த உரம் (1,29%) மற்றும் எப்.ஆர்.எம். (1.10%)  என்ற அளவிலும் உள்ளது.

*****



(Release ID: 1509433) Visitor Counter : 83


Read this release in: English