விவசாயத்துறை அமைச்சகம்

பசுமை வேளாண்மை செய்யும் பழமையான நாடுகளில் ஒன்று இந்தியா : ஸ்ரீ ராதாமோகன்சிங்-

Posted On: 09 NOV 2017 1:13PM by PIB Chennai

22.5 லட்சம் ஹெக்டேர் நிலம் பசுமை வேளாண்மை திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. 3 லட்சத்து 60 ஆயிரத்து 400 விவசாயிகள் பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா திட்டத்தின கீழ் பயன் அடைந்துள்ளனர் – திரு. சிங்

மண் ஆரோக்கியத்திற்காகவும், நீடித்த உற்பத்திக்காவும்,  ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு மக்களுக்கு தேவை என்பதற்காகவும் பசுமை விவசாயம் என்பது இன்றைக்கு தேசிய மற்றும் பன்னாட்டு தேவையாக உள்ளது- மத்திய வேளாண் அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் உலக பசுமை (விவசாயம்) உலக மாநாடு 2017- ஐ தொடங்கி வைத்து பேச்சு-

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங், பழைமையான பசுமை வேளாண்மை செய்யும்  நாடுகளில் ஒன்று இந்தியா என்று கூறியுள்ளார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் பாரம்பரியமான பசுமை (கரிம) வேளாண்மை தான் நடைமுறையில் உள்ளது என்று டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலக பசுமை விவசாய மாநாடு 2017ஐ தொடங்கி வைத்து பேசிய ராதாமோகன் சங் கூறினார். இந்த மாநாட்டினை சர்வதேச பசுமை விவசாய கூட்டமைப்பு இயக்கம் (ஐ.எப்.ஓ.எம்.,) மற்றும் ஓ.ஏ.எப்.ஐ., அமைப்பு இணைந்து  நடத்தியது. இதில் 110 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 400 பிரதிநிதிகள், 2 ஆயிரம் இந்திய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராதாமோகன் சிங், 22.5 லட்சம் ஹெக்டேர் நிலம் பசுமை வேளாண்மை திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், 3 லட்சத்து 60 ஆயிரத்து 400 விவசாயிகள் பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர் என்றும் கூறினார்.  தற்போது வடகிழக்கு பிராந்தியத்தில் 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பை இந்த பசுமை விவசாயத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை  45 ஆயிரத்து 863 ஹெக்டேர் நிலம் பசுமை வேளாண்மை திட்டத்தில் வந்துள்ளதாக தெரிவித்தார். 2500 விவசாயிகள் நல குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது 2406 குழுக்கள் உருவாக்கப்பட்டு 44 ஆயிரத்து 64 விவசாயிகள் இதன் மூலம் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பரபராகாத் (பரம்பரை) கிரிஷி விகாஸ் திட்டம் 2015-16ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இதுவரை 28 ஆயிரத்து 750 விவசாயிகள் 28 ஆயிரத்து 750 ஏக்கர் நிலங்கள் மூலம் பயன் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் திரு. சிங் தெரிவித்தார். பசுமை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை சந்தை படுத்துவதற்காக மாவட்டந்தோறும் விற்பனை மையங்கள் அமைக்க 5 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்திய பசுமை விவசாயம் குறை உள்ளது என்று சில சர்வதேச விஞ்ஞானிகள் கூறுவதாக கூறிய அவர், இந்திய விவசாயிகள் விரும்பித்தான் இயற்கை விவசாயம் செய்கிறார்கள் என்றும், அவர்கள் தங்கள் அனுபவ அறிவை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை பல நூற்றாண்டுகளாக செய்துவருவதாகவும் தெரிவித்தார். எப்போதுமே இந்திய விவசாயிகள் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விரும்புவதில்லை என்று கூறிய அவர், எனவே இந்திய விவசாயிகளின் வெள்ளாமையை தவறான வெள்ளாமை என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.

 தொடர்சியான அதிகப்படியான ரசாயனங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அரசு அறிந்துள்ளது என்றும் இப்படி எத்தனை காலத்திற்கு விவசாயம் செய்யமுடியும்என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.  ரசாயன உரங்கள் சார்ந்த விவசாயம் என்பது சுற்றுச்சூழல் மற்றும்  பொருளாதார விவகாரங்கள் சம்மந்தப்பட்டது என்பதால் அதன் மீது கவனம் அவசியம் தேவை என்றும் கூறினார்.

 உணவு பாதுகாப்பு என்பது நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு கேள்வியாக எழவில்லை என்று கூறிய அவர், ஆனால் இன்னமும் நமது மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான சத்தான உணவை கொடுக்கிறோமா என்பதில் சவால்கள் இருக்கின்றன எனறும் தெரிவித்தார்.

செயற்கை உரங்களை  அதாவது ரசாயன உரங்களை சார்ந்த விவசாயத்தினை நாம் சார்ந்திருக்கிறோம், அதுபோல பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனங்களை பயன்படுத்துவதால் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என்றாலும் அதனால் ஆரோக்கியமற்ற பயிர்களைத்தான் விளைவிக்க முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அளவில்லாமல் தொடர்ந்து ரசாயனங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தினால் அது நிலத்தாலும் காற்றாலும் மற்றும் தாவரங்களாலும் முழுமையாக ஈர்க்கப்பட்டுவிடும் என்றும் கூறினார். அதுபோல தாவரங்கள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் என்பது அந்த தாவரங்களை மட்டுமல்ல, நிலத்தையும் நீரையும் மாசுபடுத்திவிடும் என்றும் கூறினார்.

ரசாயனங்களை பயன்படுத்துவதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் சமச்சீரின்மையையும் ஏற்படுத்தும், அதனால் மனிதர்களுக்கு பாதிப்பும் ஏற்படும், எனவே மண் ஆரோக்கியத்திற்காகவும், நீடித்த உற்பத்திக்காவும்,  ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு மக்களுக்கு தேவை என்பதற்காகவும் பசுமை விவசாயம் என்பது இன்றைக்கு தேசிய மற்றும் பன்னாட்டு தேவையாக உள்ளது என்றும் மத்திய உணவு அமைச்சர் மேலும் கூறினார்.

          =============



(Release ID: 1509430) Visitor Counter : 676


Read this release in: English