குடியரசுத் தலைவர் செயலகம்

பெல்ஜியம் மன்னருக்கு விருந்து அளித்தார் குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு

Posted On: 07 NOV 2017 10:30AM by PIB Chennai

பெல்ஜியமின் மன்னர் பிலிப், ராணி மதில்தே ஆகியோரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் இன்று (நவம்பர் 7, 2017) வரவேற்றார். அவர்களை கவுரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

மன்னரையும், ராணியையும் வரவேற்ற குடியரசுத் தலைவர், அவர்களுக்கும், பெல்ஜியம் அரச குடும்பத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்தியா இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இந்தியா-பெல்ஜியம் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன், 70-வது ஆண்டை இந்த ஆண்டில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த அரசுமுறைப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவும், பெல்ஜியமும் சிறப்பான மற்றும் நட்பான உறவை கொண்டாடி வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நமது பகிர்ந்து அளிக்கப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை, மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவை நம்மை ஒன்றாக பிணைத்துள்ளது. முதலாவது உலகப் போர், நமது பகிர்ந்தளிக்கப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியை உருவாக்கியது. பெல்ஜியமுக்காக ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தனர். அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில், பெல்ஜியம் அரசு மேற்கொண்ட முயற்சியை இந்தியாவில் நாங்கள் வரவேற்கிறோம் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா-பெல்ஜியம் நல்லுறவின் முக்கியப் பகுதியை பொருளாதார உறவுகள் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இரு தரப்பு வர்த்தகம் வளர்ந்து வருகிறது. ஆனால், நாம் ஒன்றாக இணைந்து இன்னும் நிறைய செய்ய முடியும். வைர தொழில் துறையில் நாம் அடைந்த வெற்றியை, மற்ற துறைகளிலும் நாம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம், தெளிவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. நமது இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா, பொலிவுறு நகரங்கள் மற்றும் பிற முயற்சிகள், பெல்ஜியமைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்குகிறது. துறைமுகங்களை கட்டுவதிலும், கையாள்வதிலும் சர்வதேச நிபுணத்துவத்துடன் பெல்ஜியம் உள்ளது. இந்தியா, தனது துறைமுகத் துறையை மேம்படுத்துவதற்காக முக்கியத்துவம் வாய்ந்த சகர்மாலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பெல்ஜியம் நிறுவனங்களின் பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உலகப் போர்களைத் தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டதன் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் இணைப்பில் பெல்ஜியம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். அதுமுதலே, ஐரோப்பாவின் தொழில் துறை வளர்ச்சியில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், இந்தியா, தனது வளர்ச்சிக்கான புதிய சக்தியைக் கொண்டுவர உலக நாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பெல்ஜியமின் பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

ஐரோப்பாவை ஒன்றிணைத்து வெற்றிகரமான ஒரே சந்தையாக மாற்றுவதற்கான  நடவடிக்கைக்கு முக்கிய காரணியாக பெல்ஜியம் இருந்துவருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் திட்டத்தை செயல்படுத்துவதில் பெல்ஜியம் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. மாறிவரும் உலகில் நிலைத்தன்மைக்கான காரணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா பார்க்கிறது. மேலும், அந்த மக்களின் ஒவ்வொரு வெற்றிக்காகவும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

******



(Release ID: 1509428) Visitor Counter : 180


Read this release in: English